தொடர்கள்
அனுபவம்
ஒரே மூச்சில் இரண்டு மலையுச்சிகள் !! - மாலா ஶ்ரீ

20240501075526843.jpeg

சத்யதீப் குப்தா, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நேரத்தில் 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் மற்றும் 8,516 மீட்டர் உயரமுள்ள லோட்சே ஆகிய 2 மலைச்சிகரங்களையும் 11 மணி, 15 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இதுபோன்ற மலையேற்றத்தை ஏற்பாடு செய்யும் ‘முன்னோடி சாகசப் பயணம்’ என்ற அமைப்பினர் வெளியிட்ட தகவலில், ‘மேற்கண்ட எவரெஸ்ட் மற்றும் லோட்சே ஆகிய 2 மலைச்சிகரங்களில் சத்யதீப் குப்தா மலையேறும்போது, அவருடன் வழிகாட்டிகளான பாஸ்டெம்பா ஷெர்பா, நிமா உங்டி ஷெர்பா ஆகிய இருவரும் உடனிருந்தனர்.

கடந்த 21ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தையும், மறுநாள் (22ம் தேதி) லோட்சே மலைச்சிகரத்தையும் சத்யதீப் குப்தா 11 மணி, 15 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 2 மலைச்சிகரங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக ஏறிய முதல் இந்திய மலையேற்ற வீரர் என்ற பெருமையை சத்யதீப் குப்தா பெற்றுள்ளார்’