மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் நல்ல உடல் வாகுடன் வாட்டசாட்டமாக இருப்பதால் அவரோடு இணைந்து நடித்த தமிழக கதாநாயகர்கள் யோசிக்கிறார்களாம்.
பூஜா ஹெக்டே
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இது தவிர தமிழில் மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ராஷ்மிகா
அல்லு அர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 வசூல் 1871 கோடியை தாண்டி இருக்கிறதாம்.
நிதி அகர்வால்
நிதி அகர்வால் இப்போது புதிய படங்களில் ஒப்பந்தம் ஆவதில்லை. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுடன் ஹரிஹர வீரமல்லு என்ற படத்தில் ஒப்பந்தமானார். அப்போது இந்த படம் முடியும் வரை வேறு படத்தில் நடிக்க கூடாது என்ற நிபந்தனையும் அதை ஒப்புக்கொண்டு நிதி அகர்வால் கையெழுத்து போட்டு விட்டாராம் அதுதான் பிரச்சனையாம்.
பார்வதி
மலையாள பட உலகில் நான் அங்கு நடக்கும் தவறுகளை தொடர்ந்து சுட்டிக் காட்டுவதால் எனக்கு மலையாளத்தில் இப்போது வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்கிறார் பார்வதி.
நடிகை பாக்கியஸ்ரீ
தெலுங்கு நடிகையான நடிகை பாக்யஸ்ரீ தற்போது சூர்யாவுடன் தமிழில் இணைந்திருக்கிறார் இந்த படம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியாகும்.
சுட சுட
4 த்ஃப்ளோர்
ஆரி அர்ஜுனன் தீபிஷிகா, பவித்ரா , தலைவாசல் விஜய் நடிக்கும் படத்திற்கு 4த்ஃப்ளோர்.என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கனவில் வருவது நிஜத்தில் நடக்கும் கதையாம் இது.
ஹிமா பிந்து
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் நடிகை ஹீமாபிந்து கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் தலைக்காட்டி இருக்கிறார். இப்போது காஞ்சனா 4 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காஞ்சனா 4 படத்தில் கதாநாயகி பூஜா ஹெக்டே.
தன்யா
தன்யா ரவிச்சந்திரன் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி இவர் பிருந்தாவனம், ரசவாதி, கருப்பன் போன்ற படங்களில் நடித்தாலும் அவையெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ரெட்டை தல படத்தில் அருண் விஜய்க்கு ஜோடி. இது தவிர அருள்நிதிவுடன் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.
ஐஸ்வர்யா ரஜினி
நான் படம் இயக்குகிறேன் என்று படத் தயாரிப்பாளர்களை நச்சு பண்ணுகிறாராம். ஏற்கனவே இவர் இயக்கிய படம் எல்லாம் அதாவது ரஜினி நடித்த லால் சலாம் உள்பட பெரிய அளவு வியாபாரம் ஆகவில்லை. தயாரிப்பாளர்கள் நாங்களே கூப்பிடுகிறோம் என்று நழுவுகிறார்கள்.
திரிஷா
ராஜமவுலி இயக்கிய மரியாத ராமண்ணா படத்தில் நகைச்சுவை நடிகர் சுனிலுக்கு ஜோடியாக திரிஷாவிடம் பேசினார்கள் காமெடி நடிகர் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார் திரிஷா.
அருண் பாண்டியன்
அருண் பாண்டியன் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படத்திற்கு அஃகேனம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
Leave a comment
Upload