அப்பொழுது இரவு மணி 9 இருக்கும். திவ்யாவின் செல்ஃபோன் சிணுங்கியது. அடுத்த முனையில் அவளுடைய டியர் ஃபிரண்ட் ஹேமா தான் பேசினாள். ‘திவ்யா,இந்த பையனை வேண்டாம்’னு சொல்லிடுங்க. ‘மீதி விவரத்த நாளை காலைல ஆபீஸ்ல சொல்றேன்’ன்னு சொல்லிட்டு ஃபோனை கட் பண்ணிட்டாள். அவளுக்கு தூக்கம் கண்ணை சுழட்டியதால் தூங்கப் போய்விட்டாள். அப்பாவிடம் அவளால் இந்த செய்தியை சொல்ல முடியவில்லை.
மறுநாள் காலை 7 மணி இருக்கும். அம்மா கமலாவிடம் மட்டும், ’இந்தப் பையனை வேண்டாம்’னு சொல்லிடுங்க.’நாமதான் பத்து நாள் டைம் கேட்டு இருக்கமே?’ என்று சொல்லிட்டு ஆபீசுக்கு அவசர அவசரமாக கிளம்பி விட்டாள் திவ்யா.
திவ்யா அவங்களோட ஒரே பொன்னு.ஒரு பிரைவேட் ஃபைனாஸ் கம்பெனியில பெரிய போஸ்ட்ல இருக்கா. பொறுப்புகளும் அதிகம்.சம்பளமும் அதிகமும்
விசு 8 மணி வாக்கில் படுக்கையிலிருந்து எழுந்தார். தன் கணவன் விசுவிடம் இந்த தகவலைச் சொன்னாள் கமலா. இருவரும் அப்படியே ஷாக் ஆயிட்டாங்க. இப்பவே ஹேமாவுக்கு வயது 30 ஆகிறது.அவங்களுக்கு ஒரே பொண்ணு. பையனும் கிடையாது. அவங்களுக்கும் வயசாகிட்டே இருக்கு.
’தன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகலையே’ என்று வயதாகும் பெற்றோர்களுக்கு இருக்கும் வழக்கமான கவலை அவர்களுக்கும் இருந்தது. இந்தக் கவலை அவர்களை ஒழுங்கா தூங்க விடுவதே இல்லை.
கல்யாணப்பொருத்தம் பார்த்தப்ப பத்துல எட்டு பொருத்தம் இருந்தும், திவ்யா இந்த வரனை தட்டிக் கழிப்பது அவர்களுக்கு சரியாகப்படவில்லை.நாள் பூராவும் டென்ஷனிலியே இருந்தாங்கா.
அந்த பையன் பேரு வசந்த்.திவ்யாவுக்கும் அவனுக்கும் இரண்டு வயசுதான் வித்தியாசம். ஒரே பையன்.பொன்னு இல்ல.சென்னை அடையார்ல சொந்தமா மூணு பெட் ரூம் ஃபிளாட் இருக்கு.நல்ல சொகுசான காரும் இருக்கு.அவங்க அப்பா,அம்மாவுக்கு வயசாயிட்டு போறதால சீக்கிரமா கல்யாணத்த முடிக்கனும்னு நெனைக்கறாங்க.இது சரிதானே? இதோ இப்பக் கூட பையனோட அப்பா ஃபோன்ல,’உங்க முடிவுதான் என்ன?”ன்னு அவசரப்படுத்துறாறு. விசு, ’கொஞ்சம் வைட் பண்ணுங்க’ ன்னு சொல்லி சமாளிச்சுட்டாரு.
’ஹேமா எப்ப ஆபீஃஸிலிருந்து வருவாள்?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் விசுவும்,கமலாவும்.
மாலை 7 மணி இருக்கும். ஹேமா ஆபீஃஸிலிருந்து திரும்பி வந்தாள். வந்தவள் முகத்தை அலம்பிக் கொண்டு, அப்பாவிடம் வந்தாள். அம்மாவும் மகளுடன் வந்தாள்.
’ஏம்மா,அந்த பையனை வேண்டாம்னு சொல்ற?’ ஏக்கத்துடன் கேட்டார் அவளோட அப்பா விஸ்வநாதன்.
திவ்யா‘அப்பா, நடந்ததையெல்லம் சொல்லறேன்’ன்னு சொல்லத் தொடங்கினாள்.’அவங்க என்ன பெண் பார்த்துட்டு போனதிலிருந்து, இந்த கல்யாணத்துல அவங்க காட்டற அவசரம் எனக்கு அவர்கள் மீது சந்தேகத்தை எழுப்பியது’ என்றாள்.
அதற்கு விஸ்வநாதன் ’ஏம்மா, சொந்த வீடு, சொந்தக் கார், நல்ல வேலை எல்லாம் இருக்குதம்மா’ என்று அப்பாவித்தனமாக சொன்னார்.
’எல்லாம் சரி தான். அப்பா. தீர விசாரிக்க வேண்டாமா? அதைத்தான் இந்த ஒரு வாரத்தில செய்தேன்’என்றாள் திவ்யா.
ஆபீஸ்ல ஹேமாதான் என் டியர் பிரண்டு.அவன் லோன் செக்ஷன்ல இருக்கா. அவகிட்டச் சொல்லி அந்த பையனப் பத்தி எல்லா விவரத்தையும் விசாரிச்சத்துல,’அந்தக் கார், அவங்க வீடு எல்லாமும் கடன்லத்தான் வாங்கியிருக்காங்க. அதுல கார் லோன் எங்க கம்பெனியிலிருந்துதான் வாங்கியிருக்காங்க. அதையெல்லாம் திரும்ப கட்டுவதற்கு அவங்களுக்கு என்னுடைய சம்பளம் வேண்டும். அதற்குத்தான் இப்படி அவர்கள் அவசரம் காட்டுகிறார்கள்’என்றாள் திவ்யா.
‘எனக்கு, நிம்மதியான வாழ்க்கையும், உங்க சந்தோஷமும்தான் மிகவும் முக்கியம். அதை இழப்பதற்கு நான் தயாராக இல்லை. பையன் வேலையில் இல்லாமல் இருந்தாலும் கடன் இல்லாமல் இருக்க வேண்டும். இவர்களுடைய ஆசை என்னவென்று எனக்குத் தெரிந்து விட்டது. இப்பொழுது உங்களுக்கும் தெரிந்திருக்கும்’ என்று சொல்லி முடித்தாள் திவ்யா.
மேலும் வங்கியில் அவனுடைய சிபில் ஸ்கோர் மிகவும் மோசமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பையனால் நல்ல வாழ்க்கையை தர முடியாது. சுலபமாக கிடைக்கிறது என்பதற்காக எல்லாம் கடனையும் வாங்கும் பழக்கம் ஒருவரைப் படுகுழியில் தள்ளிவிடும். அந்தப் பழக்கம் இந்த பையனிடம் இருக்கிறது.
’அப்பா ஆள விடுங்க. இனிமே கல்யாணத்துக்கு பையனப் பார்க்கும் போது பத்து பொருத்தத்தோட அவனுடைய சிபில் ஸ்கோரையும் தயவு செஞ்சு பாருங்க. இதுதான் மத்தத விட இப்ப ரொம்ப முக்கியம்’ என்று சொல்லிவிட்டு படுக்கப் போய்விட்டாள் திவ்யா.
சிபில் ஸ்கோர் அவர்களை சிந்திக்க வைத்தது அவர்களை மட்டுமல்ல, இப்பொழுது நம்மையும் சிந்திக்க வைத்து விட்டது.
’ ஆமாம், இது மிகவும் முக்கியம்’ என்று அவருடைய அப்பாவும் அம்மாவும் நினைத்தார்கள். ஹேமாவின் சாமர்த்தியத்தை நினைத்து வியந்துதான் போனார்கள்.இப்பவெல்லாம் பையன் வீட்டுலேந்து வர்ர ஃபோன் கால எல்லாம் விசு எடுப்பதே இல்ல.
Leave a comment
Upload