விகடகவியார் உள்ளே நுழைந்ததும் சுட சுட சின்ன சைஸ் சமோசா கொண்டு வந்து வைத்தார் ஒரு இந்திக்கார பையன். சூடா போட்டு தருவார், நல்லா இருக்கும் சாப்பிடுங்கள்" என்றார் ஆபீஸ் பையன்.
சமோசாவை சுவைத்தபடியே விஷயத்துக்கு வந்தார் விகடகவியார்.
அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஓபிஎஸ் பொதுச் செயலாளர் என்ற பதவி விரைவில் காணாமல் போகும் என்று சொல்லி இருக்கிறார்.
இரட்டை இலை சின்னம் சம்பந்தப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டது.
இந்தத் தீர்ப்பு தான் தற்சமயம் பேசும் பொருளாகிவிட்டது.
இதை வைத்து அண்ணாமலை காய் நகர்த்த தொடங்கி இருக்கிறார்.
கூட்டணிக்கு அதிமுகவை ஒரு கை பார்ப்போம் என்ற முடிவோடு தேர்தல் ஆணையத்தில் அழுத்தம் தந்து இரட்டை இலையை முடக்குவது என்பது அண்ணாமலை திட்டமாக இருக்கிறது. "என்றார் விகடகவியார்.
நான் உடனே இது எப்படி சாத்தியமாகும் பொதுக்குழு செயற்குழு எடப்பாடி பொதுச் செயலாளர் என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்படி என்றால் இரட்டை இலையும் அவர்கள் வசம் தானே இருக்க வேண்டும் "என்று நாம் கேட்டோம் நீங்கள் சொல்வது சட்டப்படி நான் சொல்வது அரசியல் சட்டப்படி என்று சொல்லி சிரித்தார்.
சும்மணங்காட்டியும் இரட்டை இலையை முடக்கி அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைப்போம் என்பதுதான் பாஜக திட்டம் என்றார் விகடகவியார்.
டெல்லி பாஜக இதை வேறு மாதிரியும் யோசிக்கிறது.
இதுவே எடப்பாடிக்கு பெரிய அனுதாபத்தை கொண்டு வந்த சேர்த்தால் பாஜகவுக்கு தான் கெட்ட பெயர் வரும். இதை யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று தயங்குகிறார்கள். இப்போதைக்கு அண்ணாமலையிடம் அவசரப்படேல் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றார் விகடகவியார்.
திமுகவில் நிர்வாகிகள் மாற்றியமைப்பு விஷயத்துக்கு வாரும் இந்த மாற்றி அமைப்பு யாரையும் வேண்டாம் என்று ஒதுக்குவதற்காக அல்ல. இது சீரமைப்பு என்று முதல்வர் சமாதானம் சொல்லி இருக்கிறார்.
பொன்முடி என் மகன் மாவட்ட செயலாளராக இருந்த நான்கு தொகுதிகளில் இரண்டை பிரித்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக டாக்டர் லட்சுமணனை நியமித்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
இது பொன்முடிக்கு அதிர்ச்சி என்ன இப்படி பண்ணி விட்டீர்களே என்று கேட்டதற்கு ஸ்டாலின் கட்சியில் எல்லோருக்கும் பதவி தர வேண்டும் தானே என்று சமாதானம் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.
இப்போது தொடர்ந்து மாவட்ட செயலாளர்களுக்கு கல்தா புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் என்ற செய்தி வரத் தொடங்கி இருக்கிறது.
இந்த விஷயத்தில் மூத்த தலைவர்களுடன் அமைச்சர்களுடன் சமரசம் என்ற பேச்சை இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கட்சியில் இன்னும் அதிரடி மாற்றங்கள் நிறையவே வரும் என்கிறது அறிவாலயம் வட்டாரம் என்றார் விகடகவியார்.
" விஜய் கட்சி விஷயத்துக்கு வாரும்" என்றோம் அவர் கட்சி ஆரம்பித்த உடன் நிறைய பேர் அதுவும் குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் சேர்வார்கள் பல கட்சியிலிருந்து வருவார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அப்படியெல்லாம் இல்லை விஜய் தன்னை சுற்றி ஒரு பெரிய சுவர் எழுப்பிக் கொண்டிருக்கிறார் யாரையும் சந்திக்க மாட்டேன் என்கிறார்.
அவர் கட்சி தோறுமா என்ற சந்தேகம் வரத் தொடங்கி இருக்கிறது என்று சொல்லிவிட்டு மீதம் இருந்த சமோசாவை சாப்பிட்டுவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload