தொடர்கள்
அரசியல்
டெல்லியில் மீண்டும் தாமரை-ஜாசன்

20250121143334109.jpg

டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது.

2020 தேர்தலில் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபையில் 62 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி தற்போது 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி ஆகிவிட்டது.

கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்றுப் போனார்.

சில அமைச்சர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

70 இடங்களில் போட்டி போட்ட காங்கிரஸ் கட்சிக்கு 68 இடங்களில் டெபாசிட் பறிபோனது.

20250121143426823.jpg

டெல்லியில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக டெல்லி வாசிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிக்கு காரணம் பாஜகவின் தேர்தல் வியூகம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இண்டியா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி இரண்டும் எதிர் எதிராக போட்டி போட்டன.

2025012114351505.jpg

காங்கிரஸ் கட்சி இந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை விட, ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தது.

ராகுல் காந்தியே தனிப்பட்ட முறையில் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார்.

பாஜகவின் மெகா வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

போட்டியிட்ட 70 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் 10 நாட்கள் நீடித்தது

. பாரதிய ஜனதா. யார் முதல்வர் என்று ஊடகங்கள் நிறைய ஜோசியம் சொல்லியது.அவற்றையெல்லாம் வழக்கப்படி பாஜக பொய் ஆக்கியது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை பாஜக பார்வையாளர்கள் முன்னிலையில் கூட்டிய கட்சி ரேகா குப்தா என்பவரை ஒரு மனதாக தேர்வு செய்தது. இதில் வேடிக்கை இவர் பெயர் முதல்வர் ரேசில் அடிப்படவே இல்லை என்பதுதான்.

பாரதிய ஜனதா காங்கிரஸ் மாதிரி பயந்து பயந்து எல்லாம் முடிவு செய்யாது.

அதன் முடிவு துணிச்சலாகவும் அதிரடியாகவும் இருக்கும். அந்த அடிப்படையில் தான் டெல்லி முதல்வர் தேர்வு இருந்தது.

20250121143607644.jpg

50 வயதான ரேகா குப்தா அரியானா மாநிலத்தில் பிறந்தவர். அவர் மாணவராக இருந்த காலத்தில் இருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்டவர்.

1992 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தீவிரம் காட்டியவர்.

20250121180858151.jpeg

1996 இல் டெல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர். அப்போதே மாணவர்கள் குரலாக ஒலித்தவர் அவர். 2007 ஆம் ஆண்டு டெல்லியின் வடக்கு பிடம்புரா பகுதியில் இருந்து பாஜக கவுன்சிலராக தேர்வு மீண்டும் 2012 ஆம் ஆண்டு கவுன்சிலராக வெற்றி பிறகு டெல்லி தெற்கு மேயராக தேர்வு. இப்படி நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் தற்சமயம் பாஜக டெல்லி மகளிர் பொதுச் செயலாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் என்று தீவிரமாக டெல்லியில் அரசியல் செய்யும் ரேகா குப்தா முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார்பாக் 68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

டெல்லி பிரச்சனைகள் தெரிந்தவர் என்பதால் தற்சமயம் அவரை தேடி முதல்வர் பதவி வந்திருக்கிறது.

20250121143712142.jpg

இனி டெல்லி பாஜக வசம். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இரண்டிற்கும் இப்போதைக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக தெரியவில்லை.