தொடர்கள்
கதை
புலி சைவமாயிட்டா எலி கூட ஏறி விளையாடும் -ஆனந்த் ஶ்ரீனிவாசன்.
20250121232558684.jpg
அந்த அதிகாலை 4 மணி வேளையில் பாத்ரூம் போக எழுந்த ராதா தன் உடம்பு சோர்வா இருப்பதை உணர்ந்தாள் ..
இன்னிக்குச் சனிக்கிழமை தானே லேட்டாக எழுந்தாலும் பரவாயில்லை என்று மீண்டும் கண் அயந்தவளுக்கு மாமியார் வெகு சாமர்த்தியமாகக் கதவை த்தட்டி கூப்பிடடாமல், மொபைல் நம்பரில் கூப்பிடதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.
மணியைப் பார்த்த போது மணி 7ஆகியிருந்தது.
மொபைலை பார்த்த ராதா “
“கோவிச்சுகாதீங்க அத்தை
இதோ வரேன்.என்று தகவல் சொன்னாள்.
..
வழக்கமா அஞ்சு மணிக்கு எழுந்து காலை 0530ககுள் காஃபி மாமியாருக்கும் மாமனருக்கும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். இது எழுதப்படாத சட்டம். அந்த வீட்டில்.
ஆச்சு இன்னியோட அஞ்சு வருஷம் ஆச்சு. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்கிற பழமொழி ரவிக்குமட்டும் ஒத்து போகலை .
ஒவ்வொரு வெள்ளி இரவு மறு நாள் லீவ் என்பதால் அவனுக்கு அவள் வேண்டும்.
ரவியைப் பார்த்தாள். அவன் எந்தச் சலனமின்றித் தூங்கி கொண்டு இருந்தான்.
ராதாவுக்கு என்ன சனிக்கிழமை மட்டும் கிச்சன் வேலை லீவா? அப்படி நினைத்தால் சந்தோசம் தான். ஆனா நடக்கலயே.
எல்லா நாளும் ஒரே மாதிரி தான்.
மாமியார் மாமனார் அவங்களுக்கும் சனிக்கிழமை என்ன விதிவிலக்கா என்ன?.
யார் எந்தப் பட்டினம் போனாலும் பத்மாவுக்குக் காஃபி 0530 மணிக்கு வந்து விட வேண்டும்.
எல்லோருடைய வீட்டிலும் பார்ப்பது போல இந்த வீட்டு மாமனாரும் கொஞ்சம் ஆறுதலாகப் பேசுவார்.
மாமியாருக்கு நேர் எதிர்..
ரூமை விட்டு வெளிய வந்தவள் மறுபடியும் சாரி கேட்டாள் மாமியாரிடம்.
காஃபி கொடுத்தபின் முதல் நாள் இரவு தோசை மாவு அரைத்து வைக்காதது ஞாபகத்துக்கு வரவே மாமியாரிடம், காலை டிஃபன் என்ன செய்யலாம்? என்று கேட்டுப் பத்மா கொஞ்சம் நேரம் எடுத்த பின் “கோதுமை மைதா ரவா கலந்த தோசை பண்ணிடு” என்று கிரீன் சிக்னல் கொடுத்த பின்பு கிடு கிடுவெனக் காலை டிஃபன் கோதுமை தோசை தயார் பண்ணிக் கொடுத்தாள்.
இருவருக்கும் சக்கரை வியாதி. எனவே ப்ரே க்ஃபஸ்ட் சரியா ஒன்பது மணிக்கு கொடுக்கணும்.
வழக்கமா டிஃபன் செய்து முடித்தபின் முதல் நாள் இரவு நறுக்கி வைத்த காய்களைக் கொண்டு ஒரு சாம்பார் ஒரு பொரியல் மட்டும் செய்து விட்டு
வேலைக்குக் கிளம்புவாள்.
ஆபிஸ் 0930மணிக்கு, எனவே கொண்டுவந்த காலை டிபனை அங்குத் தான் சாப்பிடுவாள்.
சனிக்கிழமை ஞாயிறு ஆபிஸ் லீவு . கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் ஆனாலும் முழமையான திருப்தி கிடையாது அவளுக்கு.
எங்க அப்பா அம்மா இருக்கிறவரைக்கும் தனிக்குடித்தனம் என்கிற பேச்சே கிடையாது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டான் ரவி.
ராதா பலமுறை கெஞ்சியும் அதே பதில் தான்.
அன்று மாலை மாமனாரை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் பார்க்கிக்கு அவரின் நடை ப்பயிற்சிக்காகத் தானும் கூடப் போனாள்.
அஞ்சு வருஷமா இப்படி மாடா ஒழைக்கிறோம் மாமனாரின் அனுகூல பேச்சு, அரவணைப்பு இல்லைன்னு சொன்னா தான் என்னிக்கோ செத்துப் போயிருப்பேன். என்று அடிக்கடி புலம்பும் போது கூட மாமனார் பாஸ்கர் அவளைச் சமாதானப் படுத்துவார்.
நடைபயிற்சி முடிந்ததும் பார்க்கில் போடப்பட்டு இருந்த பெஞ்சில் உக்கார்ந்து கொண்டார்கள்.
“அப்பா நான் தான் நேர நேரத்துக்கு டான்னு வீட்டு வேலையை முடிக்கிறேன் தானே அப்பா”. சின்னக் குழந்தையைப் போல் கேட்டாள். அதில் ஒரு ஏக்கம் தெரிந்தது அவருக்கு
“ஆமாம்.”
“சமையலில் அத்தை ஏதும் குறைச் சொன்னா எதிர்த்து பேசறதில்லை”
“ஆமாம் நீ சொல்றது சரிதான்”.
“முக்கியமா என் தோழிகளைச் சந்திக்கவோ இல்லை, ஏதும் காரியமா வெளில போகும் போதும் , ஏன் எங்க அம்மா வீட்டுக்கு போகும் போது கூடப் பெர்மிஷன் கேட்டுதானே போறேன்”
.
“எக்ஸாட்லி “
“சம்பளம் வந்ததும், 5000 ரூபாய் மட்டும் என் சிலவுக்கு வைச்சுகிட்டு ,ஒங்க கிட்ட கூடக் கொடுக்காம அத்தைக்கிட்ட தானே . கொடுக்கிறேன்.”
“நூறு சதவீதம் உண்மை.”
நான் இவ்வளவு செஞ்சும் அத்தை திருப்தியா இல்லையே? …என்னைக் கொறை சொல்லிகிட்டு தானே இருக்காங்க. அவங்க வையும் போது சமயத்தில்
மன அழுத்தம் அதிகமா ஆகுது அப்பா. எங்கே தப்புன்னு தெரில”
அஞ்சு வினாடி மௌனமாக இருந்த மாமனார் , “ராதா சந்தேகமில்லாமல் தப்பு ஒன் மேலதாம்மா”.
“என்னப்பா !பழியை என் மேல போட் டீங்க. நான் இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு ஏன் சந்தேகம்.?
“சந்தேகமே இல்லை. நீ இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லாமல் போனாலும் தினமும் நானும் பாத்துகிட்டு தானே வரேன்”.
“பிரச்சினை என்ன தெரியுமா?
“ நீ தான் உன் மாமியாரை அதாவது என் பொண்டாட்டியை பொல்லாதவாளா மாத்திட்ட ?”
ஒரு வினாடி அதிர்ச்சி அடைந்த ராதா ,”என்ன சொல்றீங்கப்பா புரியலையே.”?
“ராதா சகிப்பு தன்மைக்கும் செயலற்ற தன்மைக்கும் நடுவில ஒரு நூலிழை அளவு தான் வித்தியாசம்.”
எல்லார் மனதிலும் ஒரு அரக்கன் ஒளிஞ்சு உட்கார்ந்து
கொண்டுருக்கான்.நாம அவனுக்கு உயிர் கொடுத்து உலாவா விடக் கூடாது
“உன் அத்தை கட்டுப்பாடுடன் குடும்பத்தை வைச்சுருக்கிற வரை சரி.. “
“அதிலிருந்து மாறி எப்ப அவ கெடுபிடி பண்ண
ஆரம்பிச்சிட்டாளோ அப்பவே நீ முழிசிட்டு இருக்கணும்”.
“என்னப்பா .நானும் பதிலுக்குப் பதில் பேசி சண்டை போட்டு இருக்கணும்னு சொல்ல
வரீங்களா.?”
“இல்லை ராதா நீ நான் சொன்ன விளக்கத்தைத் தப்பா புரிஞ்சுண்டு இருக்கே”.
“ஒருத்தருக்கு அவங்களோட தவறுகளை எடுத்துச் சொல்ற தும் , தடுத்துச் சொல்றதும் சண்டையாகாது. “
“நீ சுபாவத்தில் தன்மையான பொண்ணு. அதிர்ந்து கூடப் பேசமாட்டே நீ ரொம்பப் பணிஞ்சு போகவும் அவ கை ஓங்கிருச்சு.”
“புரியதுப்பா.! அத்தை பேச்சு செயல் நல்லதுக்கு நினைச்சுகிட்டு என்னைய நான் அடிமையா மாத்திக்கிட்டேன்”.
“எக்ஸாட்லி……
“இனிமே எதிர் திசையில் இருந்து வேகப் பந்து 150 km ஸ்பீடில் வந்தா தோனி அடிக்கிற மாதிரி ஹெலிகாப்டர் ஷாட் அடி.
ஆப்ஸ்பின் லெக் ஸ்பின் இல்லை ஹூக்லி வந்தா சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி டிபன்ஸ்ஸ் இல்லை ஒரே ஹூக் ஷாட் அடிக்கப் பழகிக்கணும்.
“நல்லவரகளிடத்தில் நல்லவர்களாகவும்
வல்லவர்களிடத்தில் வல்லவர்களாகவும் இருக்கக் கத்துக்கணும் ராதா.”
நீ கிராமத்தில் இருந்திருந்தா இந்தப் பழமொழி கேள்விப்பட்டுருப்பே? இல்லாட்டி போனாலும் நான் இப்ப சொல்றேன் கேட்டுக்கோ”
“புலி சைவமாயிட்டா எலி கூட ஏறி விளையாடுமாம்.. அது மாதிரி தான் . உன் பிரச்சினையும்..
“நல்லதுப்பா !இப்போ நல்ல புரிஞ்சிகிட்டேன். ஒங்க அனுசரணையாகப் பேச்சும் ,ஒங்க அறிவுரையும் என்ன
மாதிரியான குடும்பப் பெண்களுக்குக் காலத்துக்கேற்ற
அறிவுரை தாம்பா “.
“ரொம்பத் தாங்க்ஸ் அப்பா”
பாவம் பத்மா நாளையிலிருந்து ராதாவின் குணம் மாறப்போகிறது என்று தெரியாமல்
“ஏன் இவ்வளவு லேட் மாமனார் பசி தாங்கமாட்டருண்ணு தெரியாதா?. போய் நொய் உப்புமா இஞ்சி பச்சைமிளகாய் போடு. வெங்காயம் போடாத புரிஞ்சுதா?
பாவம் பத்மா நாளையிலிருந்து ராதாவின் குணம் மாறப்போகிறது என்று தெரியாமல் கத்திகொண்டருந் தாள்.
மாமனாரை பார்த்தாள் ராதா அவர் ஒரு புன்சிரிப்பு சிரித்தார்.