புவனா அப்பொழுதுதான் சகத்தோழிகளுடன் கல்லூரிக்கு ஆட்டோவில் வந்து
இறங்கினாள். வகுப்புக்கு போன பின்புதான் தெரிந்தது ஒரு பைய ஆட்டோவலேயே விட்டுட்டு வந்தது. ஓடிப்போய் பார்த்தாள்.ஆட்டோ கண்ணுக்கு எட்டிய தூரம் வர காணல.
புவனா ஒரு பி.எட் காலேஜ் மாணவி.இன்றும், நாளையும் அவளுக்கு
பிரேக்டிகல் எக்சாம். அவள் ஆட்டோவில விட்ட பையிலதான் எல்லா ரெக்கார்டுஸூம் இருக்கு.இன்று டீசிங்கல டெஸ்ட். நாளைக்கு ரெக்காட்ஸெல்லாம் பார்ப்பாங்க.ஆனா,இன்னிக்கே எல்லாத்தயும் டிஸ்பிளே பண்ணனும். மொத்தம் 23 ரெகார்ட்ஸ்.ஒரு நாள்ள முடிக்கவும் முடியாது. கவலையில மூழ்கியிருந்த புவனாவை டீச் பண்ண கூப்டாங்க.எந்திரத்த்தனமாய், உள்ளே போன புவனா, ஒரு வழியாய் முடித்து விட்டு வெளியே வந்தாள். மார்னிங் செஷன் முடிந்தது.
பிற்பகல் ஆட்டோக்காரன் முகத்தையே மனசில கொண்டு வர முயன்ற
அவளுக்கு ஏமாற்றமே மிச்சமாச்சு.பிரின்ஸ்பல் மேடம்கிட்ட போய் சொல்லலாம்னா,அவங்க வள்ளுன்னு விழுவாங்க. வீட்டுக்கு போய் அம்மா கிட்ட சொன்னா.அவள் முகத்திலயும் கவலை பரவத் தொடங்கியது.
கணவனுடைய சாப்பாட்டுப் பைய எடுக்க வந்த கௌரிக்கு ஆட்டோவின்
பின்னால் இருந்த பை அதிர்ச்சியைத் தந்தது. பையத் தெறந்து பார்த்தாள்.ஒரு
மாணவியின் ரெக்கார்ட் நோட்டெல்லாம் இருந்தது. கல்லூரியின் பெயர் மேலே
அழகாக பிரிண்ட் ஆகி இருந்தது.
நிலைமையை புரிந்துகொண்டாள் கொளரி. ‘காலேஜ் எதுக்கும் இன்னிக்கு
சவாரி போனியா?’ ன்னு புருஷன் மாரியிடம் கையில் இருந்த பைய காட்டிக்
கேட்டாள். ‘அந்த பொண்னு விட்டுட்டு போன நான் என்ன பண்ணுவேன்?’ என்றான்
அவன் அலட்சியமாக.
கௌரி படிச்சவ.அந்த நோட்டோட அருமையெல்லாம் அவளுக்கு
நல்லாவேத் தெரியும். ’காலையில எழுந்த உடனே அந்த காலேஜுக்கு போய், அந்த
பொண்ணுகிட்ட இந்த நோட்டெல்லாம் கொடுத்துடுங்க. நமக்கு புண்ணியம்
கிடைக்கும்.’ என்றாள் கொளரி.
மாரிக்கு பொண்டாட்டி சொன்னா எதையும் கேட்கற குணம் உண்டு.ஆனால்
காலேஜ் ரொம்ப தூரம்.பெட்ரோல் செலவாகும். வேற ஏதாவது சவாரிக்கு போனா
காசாவது பார்க்கலாம்னு நெனச்சான் மாரி. அவனுக்கு மனைவி சொல்ல மீறவும்
முடியல.
மறுநாள் காலையில ஆட்டோவ அந்த காலேஜுக்கு விரட்டினான்.
காலேஜ்ஜே பரபரப்பா இருந்தது.புவனாவைப் பார்க்கனும்னு அங்கே இருந்த ஒரு
மாணவியிடம் தயங்கித் தயங்கி சொன்னான். புவனா அடுத்த நிமிடமே அவன் முன் பிரசன்னமானாள். பைய அவளிடம் கொடுத்தான். தெய்வமாக நின்ற மாரியை பார்த்து தன்னுடைய இரண்டு கரங்களையும் கூப்பி நன்றி சொன்னாள்.அவன் மாரியல்ல,சாமி
என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே தேர்வறைக்குள் சென்றாள். முன்பின்
தெரியாத ஒருவருக்கு வாழ்க்கையில் உதவியதில் மாரிக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு
எல்லையே இல்லை.
Leave a comment
Upload