தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20240410164834614.jpeg

ஜாமீனில் வந்தாலும் முதல்வர் பணியாற்ற முடியாது கெஜ்ரிவால் வழக்கில் நீதிபதி கருத்து.

அப்ப பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாமே !!

உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே பூங்காக்களில் நாய்களுக்கு அனுமதி - சென்னை மாநகராட்சி.

அதாவது இ- பாஸ் இருக்கணும்.

நாட்டில் வளர்ச்சிக்கும் பொது சொத்துக்களை உருவாக்குவதற்கும் காங்கிரஸ் பாடுபட்டது - பா. சிதம்பரம்.

ஆனா இந்த விஷயம் வாக்காளருக்கு தெரியலையே ?

அரசு நலத்திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சி முதல்வர் ஸ்டாலின்.

எப்படியும் நாலாம் தேதி உண்மை தெரிஞ்சிடும் !!

எந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரோ அதை அவரே கொடுப்பார் சு. திருநாவுக்கரசர்.

சரி தற்போது தாமரையா, இரட்டை இலையா அத சொல்லுங்க தலைவரே ? !!

தமிழகத்தில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடை.

இது திராவிட மாடல் ஆட்சி மக்களின் மின் கட்டண சுமையை குறைக்கத்தான் இந்த மின்தடை அத புரிஞ்சுக்கோங்க !!

காங்கிரசை வெற்றி பெறச் செய்ய மக்கள் முடிவு மல்லிகார்ஜுன கார்கே.

ஆனா தலைவரே கூட்டணி கட்சிகள் வேற மாதிரி முடிவு செஞ்சிருக்காங்க !!

பல்கலைகழகம் நியமனங்கள் பற்றி அவதூறு ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 181 துணை வேந்தர்கள் புகார் கடிதம்.

ஒரு வேளை உண்மைய சொல்லிட்டாரே அதான் புகாரா ?

இந்தியா வலுவான ஜனநாயக நாடாக தொடர்ந்து தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் யோகி ஆதித்யநாத்.

அதாவது எதிர்க்கட்சி இருக்கக் கூடாது அதான முதல்வரே ?

கேஜ்ரிவாரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்த பரிந்துரை டெல்லி ஆளுநர்.

வழக்கு மேல வழக்கு வந்து .... காலம் பூரா சி எம் ஜெயில் தான் போல இருக்கு பெயிலுக்கு வாய்ப்பே இல்லை !!

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசல் ஆகத்தான் இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி.

அண்ணே எல்லாம் நம்ம ஆட்சியில் வாங்கிய பஸ் !!

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் இல்லை அமித்ஷா.

தலைவரே அது அவங்க பிரச்சனை நீங்க ஏன் கவலைப்படுறீங்க !!

என்னையும் தேடி வந்தது அமலாக்கத்துறை - பிரகாஷ் ராஜ்.

அப்படியா சொல்லவே இல்ல !!

பத்து லோடு மண் கேட்டு அரசு அதிகாரி மீது தாக்குதல் - பள்ளிக்கரணை திமுக கவுன்சிலர் அடாவடி.

அதிகாரியை மாத்திருப்பாங்க !!

மின்வெட்டை தடுக்க அரசு முயற்சிக்கணும் - டாக்டர் ராமதாஸ்.

2026 உங்கள் ஆட்சி தானே அப்ப எல்லாம் சரியாயிடும் கவலை விடுங்க டாக்டர் !!

சேலத்தில் எட்டாம் தேதி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் தொல் திருமாவளவன் அறிவிப்பு.

இதெல்லாம் கூட்டணி தர்மமே கிடையாது தலைவரே !!