தொடர்கள்
அனுபவம்
பெண்ணியம் பேசிய ஜோதிர்லதா கிரிஜா - மரியா சிவனந்தம்

20240320095504874.jpeg

தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் ஜோதிர்லதா கிரிஜா. லக்ஷ்மி, அனுத்தமா, சூடாமணி போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் இருந்தகாலக் கட்டமான அறுபதுகளின் துவக்கத்தில் எழுதத் தொடங்கி தனக்கென ஒரு பெயரைநிலை நாட்டி ,புகழ் பெற்றவர் இவர்.

18/4/2024 நேற்று தன் 89வது வயதில் மறைந்த இப்பெண்மணியின் எழுத்துகள் பெண்ணியம் சுடர் விடும் புதிய எழுத்துக்களாக இந்த தமிழ் மண்ணில் போற்றபப்டும் .

1935 ஆம் ஆண்டு 11 ஆம் ஆண்டு வத்தலகுண்டில் பிறந்த ஜோதிர்லதா ,இள்மையிலேயேநூல்கள் படிப்பதில் ஆர்வம் காட்டி வந்தவர் . அவர் தந்தை அவருக்குத் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்ப்டுத்தி வைத்தார். படிப்பதில் மட்டுமல்ல எழுதுவதிலும்பள்ளிப் பருவத்தில் இருந்தே அவருக்கு இயல்பாகவே ஆர்வம் இருந்தது.

அப்போதைய தபால் தந்தித் துறையில் சுருக்கெழுத்தராக மத்திய அரசுப் பணியில் சேர்ந்தஜோதிர்லதா படிப்படியாக தமிழக போஸ்ட் மாஸ்டர் ஜெனரலின் தனிச் செயலாளராகஆனார். இடைப்பட்ட காலத்தில் அவர் ஏராளமான படைப்புகளை தந்தார் . முதலில்குழந்தைகளுக்காக அவர் எழுதிய போதும் , பின்னர் சக எழுத்தாளர்களின் ஊக்குவித்தலில் எல்லோருக்குமாக எழுதத் தொடங்கினார். ஏராளமான புதினங்கள்,சிறுகதை தொகுப்புகள் , சிறுவர் நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள் இவரதுபடைப்புகளாக மிளிர்கின்றன .

‘அன்பைத் தேடி, இரண்டு முகங்கள், அவர்கள் கிடக்கிறார்கள், மகளுக்காக ,வாழ்வேதவமாக, கோபுரமும் பொம்மைகளும்’ போன்ற நாவல்கள் அவரது வலிமை வாய்ந்தஎழுத்தைத் தாங்கும் சில படைப்புகள். அக்கால கட்டத்தில் பெண் கல்வி அருகியநிலையில், சமூகமும் ,குடும்பமும் பெண்கள் மேல் சுமக்க முடியாத பாரங்களை சுமத்தியபோது , அவற்றை அடையாளம் காணவும் , களைந்திடவும் முனைப்புடன் இயங்கியதுஅவரது எழுதுகோல்.

பி எம்.ஜி யின் தனிச் செயலாளராக ,மிகவும் பொறுப்பான பதவியில் , சுழன்று ,சுழன்றுஇயங்கி வந்தவர் ,எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்த விருப்ப ஓய்வு பெற்று முழு நேரஎழுத்தாளர் ஆனார் . ஆங்கிலத்திலும் அவர் அதிகமக எழுத ஆரம்பித்தார் .ஃபெமினா, விமன்ஸ் ஈரா போன்ற ஆங்கில பத்திரிக்கைகளில் அவரது கட்டுரைகள் வெளியாகின. அவரது படைப்புகளை அவரே ஆங்கிலப்படுத்தினார் . இரு மொழிகளிலும் அவரது திறன்வெளிப்பட்டது .

தினமணிக் கதிர், குமுதம், கல்கி , விகடன் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள்தொடர்ந்து வெளியாகின. பல நாவல் போட்டிகளில் பரிசுகளை வென்றவர் இவர். ராஜா சர்அண்ணாமலை செட்டியார் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு மணி முடியில்சிறகுகளாக சிரித்தன..

இறுதிவரை திருமணம் செய்துக் கொள்ளாமலே எழுத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் ஜோதிர்லதா கிரிஜா. பெண் மேம்பாடு சார்ந்து எழுதியவர்களில் ஜோதிர்லதாதனி இடத்தைப் பெற்றவர். அவருக்கு விகடகவி வாசகர்கள் சார்பாக புகழ் அஞ்சலி.