ராமநவமி விழாவையொட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து வேலூருக்குக் கிளம்பினேன்.
எனது கல்லூரி நண்பன் தனது காரிலே என்னை அழைத்துச் செல்வதாகக் கூறினேன். அவனும் அவனது சகோதரரும் வேலூருக்கு அருகில் உள்ள வேறொரு கோயிலுக்குச் சென்ற்கொண்டிருந்தனர்.
இந்த சென்சுரி வெய்யில்ல ஒரு வேள ஏ சீ பஸ் சீக்கிரமே கிடைக்கலைன்னா சாதாரண பஸ்சுல போயி, இப்ப நினைச்சாலும் எண்ணமே வறுவலாகி விடும் போல. ஆபத்பாந்தவன் வாசு கை, இல்லை இல்லை காரில் சீட் கொடுத்தான்.
காலை ஆறு மணிக்கு டாண்னு காரில் ஏற்றிக்கொண்டு விரைந்தது கார். மூளியாய் காலியாய் அடிச்ச பெய்ன்ட் மாறாமல் சுவர்கள். முன்பெல்லாம் தேர்தல் என்றால் சுவர்கள் தங்களை முழுவதுமாக நிறப்பிக்கொண்டு நாரடிக்க விட்டுக்கொண்டு ...என்று இருக்கும்.
அப்பவே வந்தது தான் பன்ச் டைலாக்கெல்லாம். இன்று என்னமோ ரஜினி வந்து தான் அதை ஆரம்பித்து வைத்தாற்போல் பேசப்படுகிறது.
தற்போது தேர்தல் நடப்பதால், தேர்தல் விதிமுறைகளை மீறாமல் இருக்க அந்த மாறியான ஒரு டயலாக் சாம்பிளுக்கு
"பனமரத்துல வவ்வாலு 5Bயில கோவாலு".
இப்பிடியாக தேர்தலும் தமிழகமும் என்று யோசிச்சிகிட்டே அலசிக்கிட்டே போய்க்கொண்டிருந்த எங்கள் காரை ஒரு மகளிர் தலைமையிலான ஃப்ளையிங்க் ஸ்க்வாட் ஓரங்கட்டியது.
டிரைவர், நான் பாத்துக்கிறேன் சார் என்று இரங்கப்போனவர், டிக்கியை திறந்தார்.
எக்சாம் பேட் எழுதும் பேப்பர் சஹிதம் அந்த தலைமை ஆபீசர் உள்ளே அமர்ந்திருக்கும் எங்களை கீழர் இறங்கவிடாது கேள்விகளாலும் டிரைவரின் தஸ்தாவேஜுகள் இருக்கும் அறைகள் என்று சர் சர்ரென பார்வையிட்டவர் எங்களது பேக்குகளை திறக்கச் சொன்னார்.
சரி சரி போங்க என்றவரை எனது நண்பனின் அண்ணா, " ஏன் மேடம்! இந்த வண்டி செக்காயிட்சில்லியா, அதுக்கான ஒரு ஸ்டிக்கர ஒட்டிட்டா, டூப்ளிகேட் செக்கிங்க் ஆவாதில்லையா" என்றார் வெள்ளந்தியாக.
"சார், அதெப்பிடி சார்? இவ்வ்ளோ கண்கொத்தி பாம்பு மாறி பாத்திட்டுருக்கும்போதே இங்க க்ளீனா இருக்கும் வண்டி அடுத்த ஏன் எங்க வேணும்னாலும் பண மூட்டைகளை நிறப்பிட்டு கடுக்கா குடுத்திடறாங்க". இது அந்த பெண் ஆபீசர்.
எவ்ளோ பிடிச்சிருக்காங்க பாருங்க, நம்ம தமிழ்நாட்ல மட்டும் தெரியுமா?
நேற்று வரை சுமார் 1,301 கோடி.
அப்போது வந்த இந்த வீடியோ தான் நினைவுக்கு வந்தது.
இவன் பெரிய முஜாமுவா இருப்பான் போல இருக்கே.
புடிச்ச பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் விட்டுடராங்களாம்.
திரும்பி வருகையில் சென்னை மாநகர் பஸ்ஸில் ஏறினேன். பின்னால் இருந்தவர் ரெம்பவே தில்லா ரெண்டு நாளுக்கு முன்னால ஐநூறு குடுத்துட்டு பத்து மணி நேரம் கூட்டத்துக்கு வான்னானாம். ஒரு ம... வாணான்னு நாங்க பத்து பேரு....
அப்ப தேர்தல் சரியாத்தான் நடக்குதுன்னு சொல்லுங்க.
Leave a comment
Upload