ஐதராபாத்தில் பிப்ரவரி 20 முதல் மார்ச் 1 வரை ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் 108 திவ்யதேச ப்ரஹ்மோத்சவம் உயர்திரு ஜீயர் சுவாமிகள் தலைமையில் அவரது ஆசிரமத்தில் நடைபெற்றது.பல கலைநிகழ்சிகள், ராமாயண வினாடி வினா, பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் திருக்கல்யாணமும் திருப்பதி ப்ரஹ்மோத்சவம் போன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக பிப்ரவரி 25 ஆம் தேதி திரு. உஷா ராகவன் அவர்கள் "காருண்யம்" என்னும் தலைப்பில் நிகழ்த்திய நடன நிகழ்ச்சி தனித்தன்மையுடன் அமைந்து, அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. சுவாமிகள் தலைமையில் நடத்தப்படும் மூன்று தொண்டு நிறுவனங்ககளை மையமாகக் கொண்டு, அவற்றை இறுதியில் ராமானுஜரோடு இணைத்து அவர் உருவாக்கிய அந்த நிகழ்வு காண்போரை கவரும் வகையில் அமைந்திருந்தது என்றே கூறல் வேண்டும். சுமார் ஐம்பது பங்கேற்பாளர்களை கொண்டு "Statue of Equality" என்று அழைக்கப்படும் ராமானுஜர் சிலைக்கு முன்பு மிகப்பெரிய அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக அரங்கேறிய இந்த நடன நிகழ்ச்சி பாராட்டுதலுக்குரியது.
மகளிர் ஸ்பெஷலுக்காக உஷா ராகவனுடன் ஒரு பேட்டி...
Leave a comment
Upload