தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - சாதி வன்முறை

20231102011309406.jpg

( பாரதியின் வெள்ளை நிறத்தொரு பூனை கவிதையை இவர்களெல்லாம் படித்தால் தேவலை)

கடந்த வாரம் மதுரை பெருங்குடி சங்கர் ஐயா கோவில் தெருவில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இருவர் குறிப்பிட்ட ஒருவர் வீடு எங்க இருக்குன்னு கேட்க அதற்கு அங்கு இருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தெரியாது என்று பதில் சொல்ல அப்போது அந்த இரண்டு இளைஞர்களும் பட்டியல் இன இளைஞர்களை பார்த்து அவர்கள் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் வேட்டியை மடித்து கட்டி இருக்கிறீர்களா என்று இடுப்பிலிருந்து அரிவாளை எடுத்து மூன்று பேரையும் அந்த இரண்டு இளைஞர்கள் வெட்டத் தொடங்கினார்கள். ஒருவருக்கு வலது கை மணிக்கட்டில் வெட்டு இன்னொருவருக்கு முட்டியில் வெட்டு இன்னொருவருக்கு முழங்கால் மற்றும் கை மணிக்கட்டில் வெட்டு என்று தொடர்ந்து அவர்கள் சாதிப் பெயரை சொல்லி வன்முறையில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த பெரிய வரையும் உடல்நிலை சரியில்லாத அவர் தோளில் படுக்க வைத்திருந்த சிறுவனையும் நீங்களும் அந்த ஜாதி தானே என்று அவமானப்படுத்தி அந்தப் பெரியவரின் தோளில் வெட்டு தோளில் இருந்த சிறுவனின் இரண்டு குதிகாலிலும் வெட்டு என்று அரிவாளைக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தற்போது அந்த இளைஞர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டார்கள்.

ஆதிக்க சாதி மக்களின் வன்முறை இப்போது பட்டியல் இன மக்கள் மீது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது வன்முறை அவர்கள் மீது சிறுநீர் கழிப்பது போன்ற கேவலத்தை இப்போது அரங்கேற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது இவர்கள் பிணையில் வெளி வராத அளவுக்கு இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றங்களும் இவர்கள் செய்த குற்றத்தின் உண்மை தன்மையை உணர்ந்து இவர்களுக்கு பிணை வழங்காமல் விரைவில் விசாரித்து அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற அவலங்கள் தடுக்கப்படும். நாம் சமூக நீதிப் பற்றி வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்கிறோமோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத் தொடங்கி விட்டது இதை இந்த அரசு உணர வேண்டும்.