அக்டோபர் 5 லிருந்தே இந்தியாவில் 12ஆவது கிரிக்கெட்டின் அகில உலக 50 ஓவர் ஒன் டே மேட்ச்சஸ் நடக்க ஆரம்பித்துவிட்டது.
எங்கும் எதிலும் கிரிக்கெட் தான். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளுக்கு ஈடாய் இந்த கிரிக்கெட் மேட்ச்சஸ் நமது நாட்டை ஏன் உலகையே கட்டி போட்டிருந்தது.
அர்த ராத்திரியில் நாய்ஸ் லெவல் கணக்கின்றி நேர வரையன்றி பட்டாசு வெடிகள் இரவைப் பகலாக்கியும், உறங்குபவரின் உறக்கத்தை உதிர்த்துவிடும் படியாக செய்து விட்டுக்கொண்டிருந்தன. அவுட், சிக்சர், பௌண்டரி நிகழ்வுகளுக்கு அக்கம்பக்க சிறார்களும் ஹோட்டல்களின் டீ வீ முன் மேட்ச் பார்ப்பவர்களும் தரும் திடீர் திடீர் கூச்சல்கள் அக்கம் பக்கம் மட்டுமில்லை நாட்டையே விழித்துக்கொண்டிருக்கச் செய்தது.
அப்படியொரு ஃபீவர்...கிரிக்கெட் ஃபீவர். இது ஒரு புறம் எனில், இந்த போட்டியினைச் சுற்றி சோஷியல் மீடியாக்களில் உடனுக்குடன் உருவாக்கப் பட்டு வலம் வரும் மீம்ஸ் படங்களும் வீடியோக்களும் சுவையாக இருந்தன என்பது எவராலும் மறுக்கமுடியாதது. மறக்கமுடியாதது.
அப்படி வந்தவை ஏராளம். அவற்றில் சில உங்களின் பார்வைக்கு.
மும்பையில் ஆஃப்கானிஸ்தானுடன் மேக்ஸ்வெல்லின் அசுர ஆட்டம் 201 நாட் அவுட்.
அதுக்கு வலம் வந்த மீம்சும் மற்றும் ரியல் வீடியோஅ.
நம்ம ஊரு பொண்ணுடன்அவரது திருமணத்த்ல் மாலை மாற்றும் வீடியோவின் லிங்க் திரும்பியும் வெளி வந்தது.
மேக்சு....இவுனுங்கள விட ஷம்மி, பும்ரா, சிராஜ்லாம் இருக்காங்களேப்பா....ன்னு அம்பயர் மாமா எழுப்பிவிடுகிறாராம்.
சும்மா சொல்லக்கூடாது ஆஃப்கானிஸ்தான் நல்லாத் தான் விளையாடிச்சி...ஆனாக்கா பாருங்க....
மொத செமி ஃபைனல் இந்தியா - நியூசீலாந்து. அதில் ஷம்மி கேட்ச் மிஸ் பண்ணுனாலும் முடிவில் அவர் எடுத்த அந்த ஏழு விக்கட்டுகள் இந்தியாவை மூச்சு விட வைத்தன.
அந்த ஏழை வெச்சே பண்ணிட்டாங்க.....
ரச்சின்-ஐ எளக்காரம்
இது இப்பிடி இருக்க ஒரு பார்வையாளர் சிக் லீவ் போட்டு வந்ததை இப்படி போடுகிறார்.
நியூசீலாண்டை தள்ளிவிட பாகிஸ்தானுக்கு ஒரே வழி எதிராளி எடுக்கும் டோட்டலை வெரும் 40தே பந்துகளில் எடுக்கணும். அப்பத்தான் அவங்க அரை இறுதிக்குள் வர முடியும். அதைக் கேலி செய்யும் விதமாக உசுப்பேத்தும் மீம்ஸ்.
டில்லியில் நடந்த மேட்சில் பாங்களாதேஷ் காப்டனால் விதிப்படி 2 நிமிட்டுக்குள் ஸ்ரீலங்காவின் மேத்யூ பிட்ச்சுக்குள் வந்து பேட்டிங்க்குக்குத் தயாராகவில்லை என்பது செய்தி. பாவம் க்ரீசில் நின்று பேட் செய்யுமுன் தனது ஹெல்மெட்டை அட்ஜஸ்ட் செய்யப் போக அதன் வார் அறுபட...பெவிலியனுக்கு தூது விட நேரம் கடந்து போக....பார்த்தார் பாங்களா காப்டன் ஷக்கிப் உல் ஹாசன் போட்டுக் கொடுக்க அம்பயரும் அவுட் கொடுத்த் விட்டார்.
இதை மறு நாள் டெல்லி போலீஸ் சமயோசிதமாக சரியான ஹெல்மெட்டில்லா பயணம் இப்படித்தான் டைம்ட் அவுட்டில் முடியும் என்பதை செம்மையாக காட்டி விட்டனர். சபாஷ் good one.
கீழுள்ள வீடியோ கல்லுக்குள் ஈரம் உண்டு என்பது போலே, ஆஃப்கானிஸ்தான் வீரர் ஒருவர் நடு இரவில் தீபாவளி இனாம் தர எண்ணி வீதி ஓரங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் ஏழைகளினருகில் அவர்கள் அறியாவண்ணம் 500/- ரூபாய் நோட்டுக்களை வைத்து விட்டு சென்றார்.
Leave a comment
Upload