தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

202392621002407.jpeg

சாலைகளில் புதிதாக பள்ளம் தோண்ட கூடாது தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்.

ஆமா ஏற்கனவே வாகன ஓட்டிகள், நடந்து போகிறவர்கள் விழற அளவுக்கு நிறைய பள்ளம் தோண்டியாச்சு.

கொள்ளையடித்தவர்கள் கம்பி எண்ணும் காலம் வரும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

அனுபவம் பேசுது

டாஸ்மாக் கடைகள் நடத்த யாருக்கும் விருப்பமில்லை அமைச்சர் முத்துசாமி.

மது பிரியர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக தான் திறந்து வைத்திருக்கிறோம் அப்படித்தானே அமைச்சரே.

தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டை துரும்பாக நினைக்கின்றன எடப்பாடி பழனிச்சாமி.

ஆமா நீங்களே அவங்கள நம்பி போய் துரும்பா இளச்சிட்டீங்க தலைவரே.

ஒரு குடும்பத்தின் கையில் தெலுங்கானா மாநிலம் ராகுல் காந்தி.

தலைவர் இதே டயலாக்கை தமிழ்நாட்டில் வந்து சொல்லாம இருக்கணும்.

மின்வாரிய நிதி பற்றாக்குறை குறைகிறது.

இன்னும் ரெண்டு மூணு முறை மின் கட்டணத்தை உயர்த்தினால் பற்றாக்குறை இல்லை உபரி வருமானத்துடன் வாரியம் இருக்கும் யோசிச்சு பாருங்க.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கிட்டில் எந்த பிரச்சினையும் இல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன்.

இதே மாதிரி நிதி உதவியிலும் எந்த பிரச்சனை இல்லாம பாத்துக்கணும் தோழரே.

தீமைக்கதைகள் என்ற பெயரில் திமுக பற்றி தமிழக பாரதிய ஜனதா பிரச்சாரம் செய்யப்போகிறது.

அதை எழுத உங்களுக்கு சொல்லித் தரணுமா நம்பற மாதிரி நல்லாத்தான் எழுதுவீங்க.

என் மனைவி எல்லா கோயில்களுக்கும் போகிறார் அது அவர்கள் விருப்பம் அதை நான் தடுக்க விரும்பவில்லை முதல்வர் ஸ்டாலின்.

தலைவர் இப்படி சொன்னா அப்ப எங்க விருப்பத்துக்கு மட்டும் தடை போடுகிறீர்களே என்று பப்ளிக் கேட்க மாட்டங்களா.

எங்களுக்கும் ஒரு காலம் வரும் தேர்தலில் நாங்கள் அதிக ஓட்டுக்கள் வாங்கும் போது எங்களை நம்பி வரும் கட்சிகளை நாங்கள் அரவணைத்துக் கொள்வோம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஆனா அது அந்த காலம் எப்போ என்று தான் தெரியல.

ஒரு வேளை கூட்டணியில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தனித்து நிற்போம் டிடிவி தினகரன்.

தலைவரை இப்பவே நம்ம தனியா தான் இருக்கோம்.

தளி எம்எல்ஏவும் நானும் ஒரே ஜெயிலுக்கு போக கூடும் அவர் மீது ஒன்பது வழக்குகள் என் மீது 19 வழக்குகள் அவரை விட நான் தான் அதிகம் அமைச்சர் நேரு.

இப்போ இதையெல்லாம் கூட சாதனையா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

புதுச்சேரி பெண் அமைச்சர் நீக்கம் ஜனாதிபதி ஒப்புதல்.

ராஜினமான்னு சொன்னாங்களே அதுவும் பொய்யா அப்ப.

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு விவகாரம் உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ்.

பேசாம ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு என்று தனி நீதிமன்றம் ஏற்படுத்தலாம் அவங்க வந்து போக வசதியா இருக்கும்.

டி என் பி எஸ் சி தலைவர் அரசு பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு

ஆளுநர் செய்ற ஒரே வேலை அது மட்டும் தான்.