பிரிட்டிஷார் உருவாக்கிய அழகிய நீலகிரி மலை ரயில் 115 வருடத்தை கடந்து ஊர்ந்து சென்றுகொண்டிருக்கிறது .
ஊட்டி ரயில் நிலைய வளாகம் இயற்கையின் ஊடே அமைக்க பட்ட ஒன்று அதை கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ரயில்வே துறை அழித்து கொண்டுவருவது தான் வேதனையான விஷயம் .
1854 ஆம் வருடம் நீலகிரி மலை ரயில் உருவாகும் முதல் கட்ட பணிகள் துவங்கி பின் 1885 ஆம் ஆண்டு தான் முழு வடிவம் பெற்று நீலகிரி ரயில்வே கம்பெனி இந்த பணியை 25 லச்சம் ப்ரொஜெக்ட்டாக கரடு முரடான மலையில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை ரயில் பாதை அமைக்க பட்டது 15-6-1899 அன்று முதல் மலை ரயில் பயணம் துவங்கியது .
பின் ஒன்பது வருடம் கழித்து 15-10-1908 ஆம் வருடம் குன்னூர் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து துவங்கியது .
முதலில் ஊட்டி சேரிங் க்ராஸ் பகுதியில் தான் ரயில் நிலையம் மற்றும் ரயில் யார்டு அமைக்க பிளான் செய்து பின்னர் செயின்ட் மேரிஸ் ஹில் பகுதியில் ரயில் நிலையம் மற்றும் யார்டு கட்டப்பட்டு துவக்க பட்டது .
என்ஜின் ஷேர்ட் மற்றும் கூட்ஸ் ஷெட் அமைக்க பட்டது .இந்த பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதியை அழிக்காமல் ரயில் பாதையை அமைத்தனர் ஸ்விஸ் பொறியாளர்கள் .
இந்த மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 45.88 கிலோமீட்டர் நீளம் . ரயில் 1069 கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்து ஊர்ந்து நகரும் ஒரு அதிசிய ரயில் . ஊட்டியை வந்த சேரும் போது கடல் மட்டத்தில் இருந்து 7228 அடி உயரத்தை கடந்து வருகிறது இந்த ரயில் .
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் இறங்கும் ரயில் பல் சக்கரத்தின் துணையுடன் 1 மற்றும் 12.28 சாய்வில் ஆசியாவிலே மிக மெய்சிலிர்க்கும் பள்ளத்தாக்கில் ரயில் இறங்குகிறது.
208 வளைவுகள் 16 குகைகள் மற்றும் 250 பாலங்களில் பயணிக்கிறது இந்த ரயில் .
இந்த மலை ரயில் யூனஸ்க்கோ பாரம்பரிய அந்தஸ்த்தை பெற்றது .
நூற்றாண்டை கடந்த மலை ரயில் ஏகப்பட்ட மாற்றங்களை கடந்து ஊர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறது .
பாலக்காடு டிவிஷனில் இருந்த வரை பெரிய மாற்றங்கள் வரவில்லை .பின்னர் சேலம் டிவிஷனில் இணைந்தவுடன் ஏகப்பட்ட அழிவுகளை சந்திக்க துவங்கியது .
ஊட்டி ரயில்வே யார்டில் இருந்த கம்பிர என்ஜின் ஷேர்ட் இடிக்க பட்டது .பின் கூட் ஷேர்ட் இடிக்கப்பட்டது . இதை எதிர்த்து ரயில் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் சில போராட்டங்களும் நடத்த பட்டு எதையும் காதில் வாங்கி கொள்ளவில்லை ரயில்வே துறை .
இந்த சதுப்பு நிலத்தை கண்முடித்தனமாக அழித்து வருகிறது .
செயின்ட் மேரிஸ் ஹில் பகுதியில் இருந்து ஆர்ப்பரித்து வரும் மழை நீர் இந்த சதுப்பு நிலத்தில் சங்கமித்து பின் சிறிய ஓடைகளாக ஊட்டி ஏரியினுள் செல்வது வழக்கம் .
கடந்த 2017 ஆம் வருடத்தில் ரயில்வே ட்ரெயினிங் சென்டர் கட்டுமானம் இந்த சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டு பலத்த மழையில் கட்டிடம் நிலத்தில் புதைந்துவிட்டது .
17 கோடி சதுப்பு நிலத்தில் மூழ்கி போனது .அதை பற்றி தென்னக ரயில்வே நிர்வாகம் வருத்தப்பட்டதாக தெரியவில்லை .
தற்போது தினமும் ஜெ சி பி வைத்து ஏதேதோ வேலை படு மும்முரமாக நடந்து வருகிறது .
ட்ரெயினிங் சென்டர் மண்ணில் புதைந்திருக்க .
தற்போது கான்க்ரீட் தளம் அமைத்து பெரிய அளவில் பார்க்கிங் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது .
இதற்கான பணி துவக்க நிலத்தடி தண்ணீர் வந்த வண்ணம் இருக்கிறது .
இதை தடுக்க கான்கிரீட் கட்டுமானம் நடைபெற்று வருகிறது .
இந்த கட்டுமானம் வந்தால் மிக பெரிய பேரிடர் வர வாய்ப்புள்ளது கட்டுமானமும் தண்ணீர் மண்ணில் புதையும் இங்கு எந்த கட்டுமானமும் உருவாக்க கூடாது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள் .
ரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகள் இடிந்து மிக மோசமான நிலைமையில் உள்ளது .
இந்த குடியிருப்புகள் சமூகவிரோதிகளால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு போதை பொருள்கள் கைமாறும் கூடாரமாக திகழ்கிறது .
இதை விட கொடுமை அடிக்கடி அடையாளம் தெரியாத பிணங்கள் மீட்கப்படுகின்றன .அது கொலையா அல்லது தற்கொலையா என்பது போலீசுக்கு தான் தெரியும் .
கடந்த வாரம் ஒரு ஆண் பிணம் இந்த குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டது .
இதை பற்றி கூட ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.
நீலகிரி மாவட்ட சூழலியல் பாதுகாப்பு கூட்டமைப்பு. ..ஒருங்கிணைப்பாளர் க.ஜனார்தனன் கூறும்போது
நீலகிரியில் சதுப்பு நிலங்களால் தான் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது .
சதுப்பு நிலங்களில் மிக முக்கியான நீர் ஆதாரம் கொண்ட இடம் தான் ரயில்வே பகுதி நுறு வருடங்களுக்கு மேலாக சதுப்பு நிலமாக நிலத்தடி நீரை கொடுத்த வண்ணம் இந்த ரயில்வே பகுதி அமைந்துள்ளது .
பிரிட்டிஷ் காலத்தில் ரயில்வே கட்டுமானம் நடக்கும் போது சதுப்பு நிலம் பாதிப்பு இல்லாமல் தான் அமைந்துள்ளது.
இப்பொழுது வளர்ச்சி பணி என்று சுற்றுசூழல் முன் அனுமதி எதுவுமே இல்லாமல் தென்னக ரயில்வே இந்த பகுதியில் பார்க்கிங் என்று மிக பெரிய கட்டுமானத்தை நடத்துவது மிக மோசமான ஒன்று .
டிரைனின் சென்டர் என்று மிக பெரிய கட்டிடங்களை கட்டி சதுப்பு நிலத்திற்கு அழிவை ஏற்படுத்தியுள்ளனர்.
இடிந்து உள்ள குடியிருப்பு பகுதியில் கொலைகள் நடந்துள்ளன ரயில்வே போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை .
தென்னக ரயில்வேயின் அராஜகம் நிறுத்த படவேண்டும் சதுப்பு நிலம் காப்பாற்ற படவேண்டும் .இந்த பகுதியில் ரயில்வே மியூசியம் ஏற்படுத்தினால் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பானது . என்று கூறினார் .
பதிமூன்று சுற்றுசூழல் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஷோபா சந்திரசேகரின் தலைமையில் அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கு ஒரு நீண்ட மனுவை அனுப்பிவைத்துள்ளனர்
சதுப்பு நிலத்தை அழித்து விட்டு கான்க்ரீட் பார்க்கிங் யார்டு அமைப்பதை நிறுத்த வேண்டும் .2005 ஆம் ஆண்டு யூனஸ்க்கோ பாரம்பரிய அந்தஸ்தை பெற்ற இந்த ரயில் ஒரு சிறப்பு வாய்ந்தது அதே போல இங்கு உள்ள சதுப்பு நிலமும் முக்கியமான இயற்கை பொக்கிஷம் இதை பாதுகாப்பது நம் கடமை உடனடியாக இங்கு நடைபெறும் கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் நீதி மன்றத்திற்கு செல்லவும் உள்ளோம் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர் .
ஹெரிடேஜ் ஸ்டீம் ச்சரியட் டிரஸ்ட் நிறுவனர் நடராஜன் வருடந்தோறும் இந்த மலை ரயிலின் பிறந்த நாளை கொண்டாட தவறுவது இல்லை
அவர் கூறும் போது யூனஸ்க்கோ பாரம்பரிய ரயிலின் ஏரியா ஊட்டி ரயில் நிலைய கூட் ஷேர்ட் வரை உள்ளது என்பது எப்படி ரயில்வே துறைக்கு தெரியாமல் போனது .
ஒரு உயிருடன் உள்ள சதுப்பு நிலத்தை அழிப்பது சரியில்லை .யாரையும் கேட்காமல் பார்க்கிங் தளத்தை சதுப்பு நிலத்திலும் ஹெரிடேஜ் ஏரியாவில் அமைப்பது சரியில்லை இது கவலை அளிக்கும் ஒன்று .
ஏற்கனவே ரயில் நிலைய வாயிலில் பார்க்கிங் வசதி உள்ளது .அதில் ஆமினி பஸ்களுக்கு பார்க்கிங் இடம் கொடுத்து விட்டு ஏன் சதுப்பு நிலத்தை அழித்து பார்க்கிங் தளம் அமைப்பது எந்த விதத்தில் நியாயம் .
ஊட்டி ஒரு சுற்றுலா தலம் அங்கு ரயில்வே யார்டில் ரயில் கோச்சிகள் மற்றும் கம்பிர என்ஜின் ஷேர்ட்டில் என்ஜின் நிற்பது அழகானது .அது எல்லாம் இப்பொழுது கனவாகி போய்விட்டது .
ரயில்வே நிர்வாகம் தற்போது மத்திய அரசாங்கத்தின் அம்ரித் பாரத் ஸ்கிம் மூலம் ரயில்வே யார்டுகளை புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது .
இந்த திட்டம் பாரம்பரிய நீலகிரி மலை ரயில் யார்டுக்கு பொருந்தாது .
அதை பற்றி கண்டுகொள்ளாமல் தேவையற்ற வேலையை செய்து வருவது சரியில்லை .
உள்ளூர் ரயில் பிரியர்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்து தான் வேலையை துவங்க வேண்டும் அதை விட்டு விட்டு தங்கள் இஷ்டத்திற்கு அதிகாரிகள் செய்வது மிக மோசம் . மேரிஸ் ஹில் வழியாக செல்லும் குடியிருப்பு வாசிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் வழியை தடுத்துள்ளது ரயில்வே துறை .
பெரிய கிணறு கூட் ஷேர்ட் யார்டில் தாராளமாக ரயிலுக்கும் குடியிருப்புகளுக்கும் தண்ணீர் விநியோகம் இருந்து வந்தது தற்போது ஊட்டி நகராட்சி தான் தண்ணீர் சப்லை .
அந்த கிணறு காணாமல் போய்விட்டது .
பாரம்பரிய ரயில்வே யார்டை பழைய படி விட்டுவிட வேண்டியது தான் அழகு " என்று கூறினார் .
இந்த மிக பெரிய இயற்கை பொக்கிஷத்தை அழித்து க்கொண்டிருக்கும் ரயில்வே அதிகாரிகளின் மேல் மத்திய அரசு நடவடிக்கையை எடுக்கவேண்டும் சதுப்பு நிலம் பாதுகாக்க படுமா .?!.
Leave a comment
Upload