தொடர்கள்
அனுபவம்
பழையன என்றும் வீணல்ல

வீடியோவைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்துவிடும்.

எனினும் ஒரு சுருக்கம்.

வேலை கிடைத்தது.

கார் வாங்கினான் பேங்க் லோனில்.

தாய் அவனை அவசரம் ஏன்? சேமிப்பில் செய்திருக்கலாமே என்றாள். கேட்கவில்லை இந்தக் கால இளம் பிள்ளை.

ஒரி சில மாதங்களில் ஐரோப்பா டூருக்கு ரெடியானான்.

தாய் அதே புத்திமதி கொடுத்தாள். வெளிநாட்டு டூருக்கு பணம் செலவாகுமே சேமிப்போ இல்லையே என்கிறாள்.

த் தோ..என்னிடம் கிரெடிட் கார்ட் இருக்கே என்று அவள் வாயைப் பொத்தினான்.

சில மாதங்கள் உருண்டன.

கம்பெனியிலிருந்து போன்....கம்பெனியில் வேலை இல்லை என்று.

துவண்டு போனான். சுருண்டு போனான்.

கேட்டுக்கொண்டிருந்த தாய் சமாதானம் சொன்னாள், இந்த வேலை இல்லை என்றால் இன்னொரு வேலை என்று.

அவ்வளவு ஈசி இல்லையம்மா வேலை கிடைப்பது..என்றான் மகன் பதறியவாரே. லோன் ஈஎம்ஐ லாம் யார் கட்டுவா?

கடன் நெருக்கடி. கார் போனது. பேங்க் லோன்....யார் கட்டுவார்கள்?

கார் டீவீ ஏற்கெனவே வீட்டை விட்டு போயாச்சி?

இந்த பர்சனல் லோன் காரங்க சட்ட ரீதியான ஆக்ஷன் எடுப்பாங்களாம் என்ன செய்யரதுன்னு தெரியலமா? என்றான்.

என்ன ஆகுமோ தெரியலயே என்றவனிடம் அன்று பேங்கிலிருந்து வந்த லெட்டரைக் காண்பிக்கிறாள் தாய்.

படித்தவன் மகிழ்ச்சியில் அதிர்ந்தான்.

வந்த பேங்க் லெட்டர் அவனது லோன் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டதைத் தெரிவித்தது.

எப்படி என்று தாயிடம் கேட்க," என்னுடைய சேமிப்பு எனக்கு உதவியது. எனக்கு வரும் பென்ஷனில் அனைத்தையும் செலவு செய்யாது சேமித்து வைத்திருந்ததில் இருந்து இந்த லோனை அடைத்து விட்டேனென்றாள் தாய் பெருமிதத்தோடு.

உங்கள மாதிரி வாழ்க்கை நாங்கள் வாழவில்லை தான் ஆனால் நாங்கள் எந்த ஒரு அவசரத்தையும் எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருந்தோம். இப்போது கூட சேமிப்பைச் செய்யத் தவறுவதில்லை.

வருந்துகிறான்.

திருந்துகிறான்.

மகிழ்ந்தாள் தாய்.

செலவுக்குப் போக இருப்பதை சேமிப்பதை விட சேமிப்புக்குப் போக இருப்பதை செலவு செய்வதே சிறந்தது.

திட்டமிட்டு சேமிப்போம். சேமிப்பு போக செலவு செய்வோம்.