தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

20230824111227819.jpeg

அதிமுகவை சமாதானப்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை பாஜக அறிவிப்பு.

ஆமா தேர்தலுக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு இப்ப என்ன அவசரம்.

முதல்வர் அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த மின் கட்டண உயர்வு அடிக்கடி பால், தயிர், வெண்ணெய், நெய் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிப்பு இதெல்லாம் தானே அண்ணா.

தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

அமலாக்க துறையின் தலைமை அலுவலகம் இப்ப தமிழ்நாட்டில் தான் இருக்கு போல.

நாங்க இல்லாவிட்டால் அதிமுக சிதறி இருக்கும் எச். ராஜா ஆவேசம்.

உங்களுக்கு ஏன் அவங்க மேல அவ்வளவு அக்கறை ஒழுங்கா தாமரையை வளக்குற வேலைய பாத்துக்கலாம் இல்ல.

பெண் ஓதுவார் நியமனம் பெரியார் நெஞ்சில் திராவிட மாடல் அரசு வைக்கும் பூ. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.

இது ஏதோ வீரமணி காதுல பூ வைக்கிற மாதிரி இருக்கு.

பாதயாத்திரையில் அரசியல் பேசமாட்டேன் அண்ணாமலை அறிவிப்பு.

பாதயாத்திரையே அரசியல் தானே ஐபிஎஸ் சாரே

அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார் பாஜக அறிவிப்பு.

அப்ப திமுக ஊழல் பட்டியலுக்கு லீவா.

தனி மனிதர்களால் முறிந்த அதிமுக பாஜக கூட்டணி கே.எஸ்.அழகிரி.

தலைவர் எப்பவும் தனியா யோசிப்பார்.

2000 தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்.

இது கூட திராவிட மாடல் சாதனைதான்.

கூட்டணி முறிவு பற்றி நான் பேசமாட்டேன் அண்ணாமலை.

ஆமா முறிவுக்கு காரணமே இவர்தான் அப்புறம் எப்படி இவர் பேசுவார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கட்டாயத்தின் பேரில் காங்கிரஸ் ஆதரவு பிரதமர் மோடி.

கம்பெனி ரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லாதீங்க தலைவரே.

ஜாதி வாரி கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் பிரச்சாரம் செய்ய வேண்டும் கே எஸ் அழகிரி வேண்டுகோள்.

இதுக்கு எதுக்கு பிரச்சாரம் நேரடியாக முதல்வர் கிட்ட சொல்லிட்டா நடக்க போகுது.

ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜகவின் திசை திருப்பும் தந்திரம் ராகுல் காந்தி.

இதுவே உங்களுக்கு இப்பதான் தெரியுதா சரியா போச்சு போங்க.

பாரதிய ஜனதா டெபாசிட் கூட வாங்க கூடாது முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்.

அதாவது வாங்க விடக்கூடாது அப்படித்தானே தலைவரே.

காவிரி நீர் விவகாரம் சுப்ரீம் கோர்ட் கடைசி தீர்ப்பாக இது இருக்க வேண்டும் அமைச்சர் துரைமுருகன்.

அவங்க மேல் முறையீடு அதுக்கு நீங்க மேல்முறையீடு இப்படி இழுவையா தான் இருக்கும் இந்த விஷயம்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக பலன் தராது திமுக எம்பி கருத்து.

அதாவது வரும் ஆனா வராது என்று சொல்கிறார் அண்ணன்.