தொடர்கள்
பொது
20 கிலோ கறுப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் - மாலா ஶ்ரீ

20230620234555875.jpeg

திண்டுக்கல் மாவட்டத்தில் தயாராகும் அனைத்து வகை பூட்டுகளும் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருவதால், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் அதிகளவு கிராக்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகர் பகுதியில் கடந்த 3 தலைமுறைகளாக பூட்டு தயாரிக்கும் தொழிலில் முருகன், சேகர், சந்தோஷ் ஆகிய மூவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மூவர் கூட்டணி சார்பில் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம், லாந்தை பகுதியில் உள்ள ஸ்ரீ சந்தவழியான் முனியப்ப சாமி கோயிலுக்கு சுமார் 20 கிலோ எடையிலான மெகா சைஸ் பித்தளை ‘தொட்டி’ பூட்டை தயாரித்து அனுப்பியுள்ளனர். இந்த பித்தளை தொட்டி பூட்டு 10 லீவர்களை கொண்டது. இப்பூட்டின் சாவியை தவிர, வேறெந்த சாவி மூலமாகத் திறக்க முடியாது.

இந்த பூட்டு 15 இன்ச் நீளம், 10 இன்ச் அகலம், 17 கிலோ எடை கொண்டது. இதன் 2 சாவிகள் 13 இன்ச் நீளத்துடன் 3 கிலோ எடை என மொத்தம் 20 கிலோ எடை கொண்டது. இந்த பூட்டு இயந்திரங்களின் உதவியின்றி, கைகளால் மட்டுமே சுமார் 20 நாட்களில் தயார்செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து பூட்டு தயாரிப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கோயில் பணிக்கு என்றால், திண்டுக்கல்லில் குறைவான விலைக்கு பூட்டு தயார்செய்து கொடுப்பர். அவ்வகையில், இந்த பூட்டு ராமநாதபுரம் கோயிலுக்கு ₹35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

அப்பாடா அறநிலயத்துறை அவ்வளவு சீக்கிரம் திறக்க முடியாத பூட்டு தான். !!!