தொடர்கள்
வலையங்கம்
வேண்டாம் வாய் ஜாலம்

2024904090324322.jpeg

. இந்த தட்வை 111 சதவீத கூடுதல் வடகிழக்கு பருவ மழைக்கு வாய்ப்பு என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் மழை என்றாலே சாலையில் நீர் தேக்கம், போக்குவரத்து பாதிப்பு என்று மக்கள் அவதிப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

அமைச்சர் கால்வாய்கள் தூர் வாருவது 90 சதவீதம் நிறைவு என்கிறார். வணக்கத்துக்குரிய சென்னை மேயர் 80 சதவீதம் நிறைவு என்கிறார். முதல்வர் அதிகாரிகளுடன் ஆய்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மண்டலம் வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் என்கிறார். சென்னை மாநகராட்சி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்க 36 படகுகள் வாங்க உள்ளோம் அதில் ஆறு படகுகள் வந்துள்ளன என்று மேயர் தெரிவிக்கிறார். கொசஸ்த்தலை ஆறு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்கிறார். .பணிகள் நிறைவடைந்து விட்டால் படகுகள் எதற்கு ? என்ற பாஜகவின் கேள்வியில் நியாயம் இருக்கிறது.

சென்னையில் சாலையில் தோண்டப்படும் பள்ளங்கள் உடனுக்கு உடன் மூடப்படுவதில் என்ற பொது மக்களின் புகார் அரசாங்கத்தின் காதுகளுக்கு கேட்பதாகவே தெரியவில்லை. இதுவே விபத்துகளுக்கு காரணம். எனவே அமைச்சர்களும் அதிகாரிகளும் வாய் ஜால அறிக்கையில் அக்கறை காட்டாமல் மக்கள் நலனில் காட்ட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.