தொடர்கள்
அழகு
வாடகை காதலி வேண்டுமா ?? வாருங்கள் ஜப்பானுக்கு !! மாலா ஶ்ரீ

20230620235051165.jpg

ஜப்பான் நாடு ஒரு காதல் தோல்விகு ஒரு நவீனத் தீர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நம் நாட்டைவிட அங்கே வயதானாலும் தனிமையில் சுற்றித் திரிபவர்கள் இன் எண்ணிக்கை ஏராளம். இதற்குத் தீர்வாக, ஜப்பானில் காதலன், காதலி என யாரை வேண்டும் என்றாலும், ஒரு மணி நேர வாடகைக்கு 'பார்ட்-டைம்' பார்ட்னராகத் தேர்வு செய்து கொள்ளலாம்.

'இதெல்லாம் ஒரு பிசினஸா... இதற்கு ஜப்பான் அரசு தடை செய்யவில்லையா?' என நீங்கள் கேட்கலாம். ஆனால், ஜப்பானில் அதிகப்படியான மக்களில் பலர் சிங்கிளாக இருப்பதால், அவர்களுக்குத் தனிமை உணர்வு அதிகரித்து மன உளைச்சல் உள்பட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகிறதாம். இதனால் அவர்கள் விபரீத முடிவுகளையும் எடுக்க நேரிடுகிறதாம்!

எனவே, அதைத் தடுக்க இந்தத் திட்டத்தை முன்மொழிந்ததே ஜப்பான் அரசின் குழுதானாம்! எனவே, இது 100 சதவிகிதம் ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்த திட்டம்தான்! இதைக் கேட்டு உடனே குஷியாக வேண்டாம். இந்த 'வாடகை காதல் சேவை'க்கான கட்டணம் ஒன்றும் 'சீப்'பானது இல்லை... காதலியை வாடகைக்கு எடுக்க விரும்புவோர், ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் ₹3 ஆயிரம் என்ற விகிதத்தில், குறைந்தது 2 மணி நேரத்துக்கு காதலியை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

இதுதவிர, வாடகை காதலியைத் தேர்வு செய்ய தனியே இந்திய மதிப்பில் ₹1,200 டெபாசிட் கட்டவேண்டும். முதன்முறை இந்த வாடகை காதல் சேவையைப் பயன்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட நபர் வாடகை காதலியை இலவசமாக தேர்வு செய்யலாம். பின்னர் தொடர்ச்சியாக தேர்வு செய்ய, ஒவ்வொரு முறையும் ₹1,200 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதுகுறித்து வாடகை காதலியாக வேலைபார்க்கும் ஒரு பெண் கூறுகையில், "பல்வேறு காரணங்களால் காதலிக்க முடியாதவர்கள், காதலிக்கத் தெரியாதவர்கள், ஒருமுறைகூட கேர்ள் பிரண்டுடன் வெளியே செல்லாதவர்கள் அல்லது மிக பிஸியாக இருப்பவர்கள்தான் வாடகை காதலி திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். அவர்கள், எங்களை வாடைக்கு எடுக்கும்போது ஒருசில கட்டுப்பாடுகள் இருக்கிறது. நாங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளக்கூடாது. இணையதள செயலி மூலமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து டிப்ஸ், விலையுயர்ந்த பரிசுகளை வாங்கக்கூடாது!" என்கிறார்.

ஜப்பான் நாட்டில் ஆண்களுக்கு கேர்ள் பிரண்ட் மட்டுமின்றி, பெண்களுக்குத் தேவைப்பட்டால் பாய் பிரண்டுகளையும் கூட வாடகைக்கு எடுக்க முடியும். அதுவும் ஒரு மணி நேரத்துக்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். 'என்ன… இப்படியொரு திட்டத்தைக் கொண்டு வந்து, மன்மதன் ரேஞ்சுக்கு இறங்கிடீங்க?!' என்று ஜப்பான் அரசின் வாடகை காதலி/காதலன் திட்டத்தை பலரும் கலாய்த்து வருகின்றனர்.

யாராவது இந்த ஐடியாவை தமிழக அரசுக்கு சொல்லித் தொலைக்காமல் இருக்க வேண்டும். அரசு கஜானா பற்றாக்குறைக்கு டாஸ்மாக்குடன் இந்த 'பிசினஸையும்' அரசு எடுத்து செய்தாலும் செய்யக் கூடும்.