தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

மஞ்சு வாரியார்

2024901184520710.jpeg

தனுஷ் படத்தில் அறிமுகம், பிறகு அஜித்துடன் வாய்ப்பு. இப்போது சூப்பர் ஸ்டாருடன் என்று நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார். கூடவே இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்கிறார் மஞ்சு வாரியார்.

ரஜினி

எத்தனையோ படங்களில் ரஜினியை மாறுபட்ட கதாபாத்திரங்களில் பார்த்திருந்தாலும் கூலி படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத மாறுபட்ட மரண மாஸ் காட்டக்கூடிய ரஜினி பார்க்கலாம் என்கிறார் இயக்குனர்.

வேட்டையன்

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் தமிழில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவருக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்தக் குரல் ஏ ஐ டெக்னாலஜி மூலம் அமிதாப்பச்சன் குரலாக மாற்றி இருக்கிறார்களாம்.

சாய் பல்லவி

2024901184900251.jpeg

மகாபாரதத்தில் அர்ஜுனின் மகனாக வரும் அபிமன்யு கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த கதாபாத்திரத்தை நான் எனக்குள் காதலித்து வருவதால் ஒரு படத்திலாவது இந்த அபிமன்யு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகரித்துள்ளது என்கிறார் சாய் பல்லவி.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

2024901185312175.jpg

தமிழில் காற்று வெளியிடை மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தென்னிந்திய படங்களில் கட்டுப்பாடுடன் நடித்தவர் தற்சமயம் இந்தி படங்களில் டூ-பீசில் நடிக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் இங்கு இதற்கென கூடுதல் சம்பளம் தருகிறார்கள், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்கிறார்.

மிர்னாளினி ரவி

2024901185612679.jpeg

நடிகை மிர்னாளினி ரவி தனது சொந்த சம்பாத்தியத்தில் ஒரு புது வீடு ஒன்றை பெங்களூரில் கட்டி இருக்கிறார். அந்த வீட்டுக்கு தனது அம்மா பெயரை சூட்டி இருக்கிறார்.

கங்கன ரணாவத்

2024901185758925.jpg

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கும் படத்தில் கங்கனாராவத் மாதவன் ஜோடி நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாக இருக்கிறது.

சுட சுட

சிம்ரன்

சசிகுமார் ஜோடியாக சிம்ரன் நடிக்க இருக்கிறார்.

விஜய் சேதுபதி

மகாராஜா படத்தை அடுத்து பாண்டிராஜ், பாலாஜி தரணிதரன்,ரவிக்குமார், கார்த்திக், சுப்புராஜ் மற்றும் நித்திலன் என ஐந்து இயக்குநர்கள் படங்களில் நடிக்க மூன்று ஆண்டுகளுக்கு கால் ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

அஜித்

சமீபத்தில் போர்ஷே ஜிடி 3 என்ற புதிய ரக காரை நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார் அஜித். இந்த கார் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.