தொடர்கள்
சினிமா
மஞ்சக்காட்டு மைனா மஞ்சுவாரியர் -தில்லைக்கரசிசம்பத்

2024903225631233.jpg

சமீபத்தில் நடந்த வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவில் அதில் கதாநாயகனாக நடிக்கும் ரஜினிகாந்த் பேசும் போது “ எனக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார், வயசான கேரக்டர் என இயக்குநர் கூறினார். எனக்கு சரியாக இருப்பாரா? அதாவது என் வயதுக்கு ஏற்ற ஜோடியாக இருப்பாரா ? என கேட்டதுக்கு சரியாக இருப்பார் என இயக்குநர் சொன்னார். பிறகு மஞ்சு வாரியர் வந்தார். மஞ்சுவை பார்த்த உடனே அதிர்ச்சியாகி இயக்குநரிடம் “ என்ன ? என்னை பழிவாங்கனும்னு நினைச்சு இவங்களை போட்டீங்களா ?”என்று கேட்டேன். அவ்வளவு சிறு வயதாக தெரிகிறார் என அசந்து போய்விட்டேன்” என கூறியிருக்கிறார்.

2024903225724162.jpg

உண்மைதான்.. மஞ்சுவாரியருக்கு இன்னும் 4 வருடங்களில் 50 வயது தொட்டுவிடுவார் என்பதை யாராலும் நம்ப முடியாத அளவிற்கு அத்தனை இளமையுடன் அழகு மிளிர அசத்துகிறார். சில பேருக்கு வயது ஆக ஆக இளமையும் அழகும் கூடுவது ஆச்சரியமாக உள்ளது.

2024903225803810.jpg

மறைந்த நடிகை ஸ்ரீதேவி , இந்தி நடிகை ரேகா , திரிஷா போன்றவர்கள் இதற்கு சரியான உதாரணம். எப்படி இப்படி? ஏதாவது காயகல்பம் போன்ற மருந்துகள் சாப்பிடுகிறார்களா என்று வேடிக்கையாக தோன்றுகிறது. இது குறித்து ஒரு பேட்டியில் மஞ்சு “46 எல்லாம் ஒரு வயசு கிடையாது.. 40 களிலும் இளமையாக சுறுசுறுப்புடன் எனர்ஜிடிக்காக இருக்கலாம். 50 ஐ தாண்டினால் கூட இதை விட இன்னும் இளமையாக இருக்கலாமே “ என்கிறார்.

2024903225849454.jpg

“அவர்களுக்கு என்னப்பா? எல்லாம் பெரிய கோடீஸ்வரர்கள். மனக்கவலை இல்லாமல் வேண்டியதை செய்துக்கொண்டு கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாக ஊர் உலகம் சுற்றிக்கொண்டு இருந்தால் ஏன் இளமையோடு இருக்க மாட்டார்கள்!?” என சிலர் பொருமுகிறார்கள்.

உண்மையில் உலகில் வாழும் எல்லோருக்குமே ஏழைப்பணக்காரன் வித்தியாசமின்றி பிரச்சனைகளுடன் தான் வாழ்கிறார்கள். ஏன் மஞ்சு வாரியரையே எடுத்துக்கொள்ளுங்களேன்.

சக நடிகர் திலீப்பை காதலித்து 20 வயதில் திருமணம் செய்தவர். சேர்ந்து வாழும்போதே திலீப் அவருக்கு துரோகம் செய்து காவ்யா மாதவனுடன் திருமணம் கடந்த உறவு வைத்திருந்து பின்னர் மஞ்சுவை விட்டு விலகி, காவ்யாவை மணம் முடித்தார் திலீப். மஞ்சுவுக்கு ஒரு பெண் குழந்தை வேறு. காதல் கணவனின் துரோகம், கல்யாணம் ஆனதிலிருந்து நடிக்காததால் 15 வருடமாக நடிப்பு தொழிலில் மிகப்பெரிய இடைவெளி, என சோதனை மேல் சோதனை. இருந்தாலும் அவர் சோர்ந்து போய் ஒரேயடியாக மூலையில் உட்காரவில்லை . உடல் எடையை குறைத்தார். அதன்மூலம் இழந்த தன்னம்பிக்கையை மீட்டார். சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தை மனதில் பதிய வைத்தார். மனம் தெளிவானதால் புற அழகும் கூடியது.

2024904091211343.jpeg

இதோ இன்று திரை உலகில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ரஜினியுடன் ஜோடி, அடுத்தது விஜய்சேதுபதிக்கு ஜோடி என வெற்றிகரமாக வலம் வருகிறார்.

மஞ்சுவை பார்க்கும் பெண்களுக்கும் அவரின் எனர்ஜி தொற்றிக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு துள்ளலுடன் இருக்கிறார். வயதெல்லாம் உடலுக்கு தான், மனதுக்கு இல்லை என்பார்கள்.

நம் கவனத்தை உடல் நலத்துக்கும் கொடுத்தால் தோற்றத்தில் கூட என்றும் மார்க்கண்டேயராக வாழ்வது சாத்தியமே என்பது மஞ்சு வாரியரை பார்க்கும் போது தெரிகிறது.