தொடர்கள்
அரசியல்
" கொறடா பதவி முக்கியமில்லை அமைச்சர் பதவி தான் முக்கியம் " - ஸ்வேதா அப்புதாஸ் .

கடந்த வாரம் தமிழக முதல்வர் அமைச்சரவையில் மாற்றங்களை அறிவித்தார் .

2024904085240635.jpg

மூன்று அமைச்சர்களை பதவிகளில் இருந்து விடுவித்தார் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான் மற்றும் கே .ராமச்சந்திரன் ஆகியோரை நீக்கினார் என்ற செய்தி பரபரப்பானது .

சுற்றுலா துறை அமைச்சராக வலம் வந்த நீலகிரி குன்னூர் எம் எல் ஏ ராமச்சந்திரனுக்கு ஷாக் தான் .

அதே சமயம் உடனடியாக தலைமை கொறடா பதவியை வழங்கினார் முதல்வர் என்ற ஆறுதலான செய்தி ராமச்சந்திரனை தேற்றியது என்றே சொல்லலாம் .

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகரன் தலைமை கொறடா பதவி கிடைக்க எடுத்த முயற்ச்சி கனவாகி போனது .

நீலகிரி படுகர் சமுதாயத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் அமைச்சர் பதவி பறிபோனதில் அந்த சமூகத்தினர் மிகவும் அப்செட் .

2024904085350988.jpg

தங்களின் படுக சமுதாயத்திற்கு கலைஞர் அமைச்சர் பதவி கொடுத்தார் .

முதல்வர் ஸ்டாலினும் வன துறை அமைச்சர் பொறுப்பை ராமச்சந்திரனுக்கு வழங்கி பின் சுற்றுலா துறை அமைச்சராக்கினார் .

தற்போது எனோ அமைச்சர் பதவியை பறித்துவிட்டார் என்று வருத்தத்தில் இருக்கின்றனர் .

இளித்துறை ராமச்சந்திரனுக்கு தலைமை கொறடா பொறுப்பை வழங்கியுள்ளார் .

2024904085311672.jpg

அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாத படுக சமுதாய மக்கள் ராமச்சந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் மேலும் ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற கூடாது என்ற கோரிக்கையுடன்

2024904085706352.jpg

முதல்வரை சந்திக்க நீலகிரி எக்ஸ்பிரசை பிடித்து சென்னைக்கு பறந்து விட்டனர் .