தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை -6 - மரியா சிவானந்தம்

2024904180958130.jpg

இன்று அவளது பிடிவாதம் எல்லை மீறி சென்று விட்டது .

தலைவன் அயல் தேசம் செல்லும் போது கண்ணீருடன் விடை கொடுக்கும் தலைவி , " இனி உன்னை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். இன்று நானும் உடன் வருகிறேன்" என்று அடம் பிடிக்கிறாள் .

"உடன் போக்கு " செல்ல வரும் தலைவியைக் கண்டு தலைவனுக்கு அச்சமும் , ஆனந்தமும் ஏற்படுகிறது .

"அச்சம் " கொள்ள இரண்டு காரணங்கள்

முதல் காரணம் , தலைவி உடன் செல்வதால் ஊரில் மக்கள் தூற்றிப் பேசும் 'அலர் '

இரண்டாம் காரணம் , கடினமான காலம் , பயணம் செய்யும் பாதை என்று தலைவிக்கு ஏற்படும் உடல் துன்பம் .

இந்த அழுத்தங்களை மீறி இருப்பது , தலைவியின் இருப்பு அவனுக்கு ஆனந்தத்தை அளிக்கிறது.

தலைவியை ஆற்றுப்படுத்தி அவனுடன் அழைத்துச் செல்கிறான் .

அம்மூவனார் எழுதிய இந்த நற்றிணைப் பாடலில் இந்த தலைவனின் கூற்று தலைவிக்கு மட்டும் அல்ல படிப்பவருக்கும் இதமாக இருக்கிறது .

அவன் தலைவியை நோக்கி

"தூய அணிகலன்களை அணிந்த பெண்ணே , இந்த ஊர் உன்னைத் தூற்றி பழிச்சொல் கூறுகிறது .

வழக்கமாக பெய்ய வேண்டிய வான்மழை பொய்த்து விட்டது .

மேகங்கள் இன்றி வானம் வெளுத்திருக்கிறது

துளியும் நீர் பெறாமல் உலவை மரங்கள் ( ஒதியன் மரங்கள்)காய்ந்து இருக்கின்றன .

உன் ஊரில் உள்ள புன்னை மரத்தடியில் காம்பில்லா மலர்கள் உதிர்ந்துக் கிடக்கின்றன .அந்த மலர்கள் சிந்தும் தேனின் மணத்தால் கடற்கரை சோலை நிறைந்து இருக்கிறது .நீண்டு அகன்ற மணற்பரப்பைக் கொண்டு சிவந்த மலர்கள் கொண்ட அப்பாதையில் நடக்கையில் உன் பாதங்கள் சிவந்து இருக்கிறது .

எனவே மெல்ல நடந்து வா . இதோ இந்த ஆல மரத்தின் அடியில் சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறி செல்வோம் "

தலைவனின் கரம் பற்றி ,இட்ட அடி நோக அவள் மெல்ல செல்கிறாள் .

இதுவே அப்பாடல்

வருமழை கரந்த வால் நிற விசும்பின்

நுண் துளி மாறிய உலவை அம் காட்டு

ஆல நீழல் அசைவு நீக்கி,

அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,

வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!- 5

இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை

வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்

கானல் வார் மணல் மரீஇ,

கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!

-குறுந்தொகை 76

ஊர் தூற்றுவதையும் பொருட்படுத்தாது ,பாலை நிலத்தின் வழியாக பயணம் செய்யும் நெஞ்சுரத்தைக் காதல் ஒன்றே தர இயலும்.....

தொடரும்