தொடர்கள்
கவர் ஸ்டோரி
உதயா பராக் பராக் பராக்- விகடகவியார்

2024904084607947.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் ஆபீஸ் பையன் சூடாக கேசரியும் கீரை வடையும் தந்தார். "என்ன விசேஷம் "என்று விகடகவியார் கேட்டதும்" கேள்வி எல்லாம் கேட்காமல் சாப்பிடுங்க சார் நல்லா இருக்கும்" என்றார் ஆபீஸ் பையன்.

" ஒரு வழியா உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டாரே ! என்று நாம் கேட்டதும் செந்தில் பாலாஜி வந்ததும் முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே குடும்ப உறுப்பினர்களிடம், துரைமுருகனிடம் முதலமைச்சர் சொல்லிவிட்டார். செந்தில் பாலாஜி ரிலீஸ் ஆனார். அதன் பிறகு மடமட என எல்லா வேலையும் நடந்தது என்றார் விகடகவியார்.

அறிவாலயத்திலிருந்து மூத்த அமைச்சர்கள் உட்பட எல்லோருக்கும் துணை முதல்வரை நேரில் சென்று வாழ்த்து தெரிவியுங்கள் என்று கிட்டத்தட்ட உத்தரவு மாதிரி தெரிவிக்கப்பட்டதாம் அமைச்சர்களும் போய் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் அமைச்சர் துரைமுருகன் வரவில்லை. பெரியார் சமாதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பும் போது உதயநிதி ஸ்டாலினை செல்பேசியில் அழைத்த முதல்வர் துரைமுருகனை நேரில் சென்று போய் பார்த்து ஆசி வாங்கி வா என்று உத்தரவாக தெரிவிக்க உடனே கோட்டூர்புறத்திற்கு போனார் உதயநிதி ஸ்டாலின்.

அதற்குள் முதல்வரே உதயநிதி ஸ்டாலின் உங்களிடம் ஆசீவாங்க வந்து கொண்டிருக்கிறார் என்று துரைமுருகனிடம் சொல்லிவிட்டார்.

.அமைச்சர் துரைமுருகன் குடும்பம் அவருக்காக காத்திருந்தது. உள்ளே வந்ததும் துரைமுருகன் மனைவி முக்கிய விருந்தினர்களுக்கு விபூதி வைப்பது எங்கள் பழக்கம் வேண்டாம் என்று சொல்லாதே என்று விபூதி வைத்துவிட உதயநிதி ஸ்டாலின் அதை சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டார்.அமைச்சர் துரைமுருகனிடம் நீங்க சம்மதம் தெரிவித்த பிறகு தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது இல்லையென்றால் கிடைத்திருக்காது ரொம்ப நன்றி என்று சொல்லி இருக்கிறார் உதயநிதி.

இதேபோல் நேரில் போய் வாழ்த்து கேட்டு வாங்கிக் கொண்டது அத்தை கனிமொழியிடம் அங்கும் கனிமொழி வரவேற்பு உபசரித்தார் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கினார் உதயநிதி.

" நீக்கப்பட்ட அமைச்சர்கள் பற்றி எந்த தகவலும் சொல்லவில்லையே ? என்று நாம் மூன்று பேரும்தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாதா என்று துரைமுருகனிடம் பொன்முடி கோபப்பட்டார். துரைமுருகன் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நான் நினைத்தேன் என்று சொல்லி சமாளித்து இருக்கிறார். மனோ தங்கராஜ் அமைச்சராக இருந்த போது தான் என்னெல்லாம் சாதித்து இருக்கிறோம் என்று ஒரு பட்டியல் வெளியிட்டு இருக்கிறார். மஸ்தான் கிட்டதட்ட அவர் எதிர்பார்த்ததுதான் ஆனாலும் தன் மீது கை வைக்கமாட்டார்கள் என்று நம்பி இருந்தார், கடைசியில் இப்படி ஆகிவிட்டது.

செந்தில் பாலாஜி விஷயத்துக்கு வாருங்கள் என்று நாம் சொன்னதும் செந்தில் பாலாஜிக்கு தந்த முதல் மரியாதையை மூத்த தலைவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. யார் அவர் இந்த கட்சிக்கு அவர் செய்த தியாகம் என்ன அவரைப் போய் தியாகி என்கிறார் முதல்வர் என்று புலம்புகிறார்கள். பணம் வாங்கி ஏமாற்றியவர் தியாகி என்றால் பணம் கொடுத்தவர்கள் துரோகிகளா என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறார். முதலில் அவருக்கு மின்சாரத் துறை மட்டும்தான் ஒதுக்குவதாக இருந்தது. சபரீசன் சந்திப்புக்கு பிறகு முத்துசாமியிடம் இருந்த மதுவிலக்கு துறை சேர்க்கப்பட்டது என்றார் விகடகவியார்.

ஆட்சி மாற்றம் முடிந்தது கட்சியில் மாற்றம் எப்போது என்று நாம் கேட்டதும் புலம்பல் கொஞ்சம் வெளிப்படையாக கேட்கும்கட்சியிலும் கொஞ்சம் சலசலப்பு தூக்கலாக இருக்கும். உமக்கு கவர் ஸ்டோரி அளவுக்கு மேட்டர் கிடைக்கும் கவலைப்படாதீர்கள் என்று மீதம் இருந்த கேசரியையும் கீரை வடையும் சாப்பிட்ட , விஜய் கட்சியில் சேர முதலில் ஆர்வமாக இருந்தவர்கள் இப்போது பின் வாங்குகிறார்கள். அதிமுகவில் நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று யோசிக்கிறார்கள்.