தொடர்கள்
அரசியல்
இனி தக்காளி தான் துலா பாரம் - மாலா ஶ்ரீ

20230620234411226.jpeg

ஆந்திர மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நூக்காலம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில், அதே பகுதியை சேர்ந்த ஜக்கா அப்பாராவ்-மோகினி தம்பதியர், கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களின் மகள் உடல்நலம் குணமாக வேண்டும். அப்படி குணமாகிவிட்டால், அம்மனுக்கு தங்க மூக்குத்தி காணிக்கை வழங்குவதாக வேண்டியிருந்தனர். அதன்படி, இத்தம்பதியின் மகளுக்கு உடல்நலம் சீராகி, அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் நூக்காலம்மனுக்கு தங்க மூக்குத்தி வழங்க ஜக்கா அப்பாராவ் தம்பதி முன்வந்துள்ளனர். கோவில் சார்பில் தக்காளி விலை உயர்வால் அதை யாரும் தானமாக வழங்க முன்வரவில்லை. இதனால் நீங்கள் அம்மனுக்கு தங்க மூக்குத்திக்குப் பதிலாக, தக்காளியை காணிக்கையாக வழங்கலாம் என கோயில் நிர்வாகம் வலியுறுத்த அதன்படி, அன்றைய தினமே கோயில் துலாபாரத்தின் ஒரு பக்கத்தில் தனது மகளை அமரவைத்து, மறுபக்கத்தில் அவரது எடைக்கு நிகரான தக்காளிகளை ஜக்கா அப்பாராவ் தம்பதியர் காணிக்கையாக வழங்கியுள்ளனர். பின்னர் அந்த தக்காளிகள் அன்னபிரசாத தயாரிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, கோயில் துலாபாரங்களில் வெல்லம், சர்க்கரை, நாணயம் உள்பட பல்வேறு பொருட்கள் காணிக்கையாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது தக்காளி விலை உயர்வினால், அதை துலாபாரத்தில் எடைக்கு எடை தானமாக வழங்கப்பட்ட வீடியோ மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.