தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 45 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

எந்தன் பருவத்தின் கேள்விக்கு

சுமைதாங்கி திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல்.. திருமணத்திற்கு முன் நான் கேட்டுக் கேட்டு கிறங்கிய பாடல்! இதில் ஏதோ இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது! பாட்டுவரிகளை கவனத்துடன் கேட்டுவைப்பேன்! ஒரு பருவ வயதில் உள்ள இளைஞனுக்கும் அல்லது இளைஞிக்கும் தேவையான சங்கதிகளைக் கண்ணதாசன் இப்பாடலில் அப்படியே பதித்துவைத்திருக்கிறாரா என்கிற ஐயமும் தோன்றும்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இன்னிசையில் பி.பி.சீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இணைந்து பாடிய இன்பகானமிது!

பாடலின் தொடக்கம் ஒருவரை ஒருவர் அழைக்கும் ஏகாந்தம்!! கேள்வி பதில் பாணியிலே கண்ணதாசன் எத்தனையோ பாடல்களை வழங்கியிருக்கிறார்.. இதிலும் அப்படி நாயகன் கேட்க.. நாயகி பதில் உரைக்கிறார். அதுவும் முழுமையான பாடலும் அவ்வகையிலேயே.. கவிஞரின் யுக்தி இசையுடன் இணைந்துவருகின்றபோது இன்பவெள்ளம் பாய்கிறது! இனிய குரல்கள் அந்த அமுதத்தை அப்படியே அள்ளி நமக்குத் தருகிறது!! காதலர்தம் உள்ளத்தில் எழும் கிளர்ச்சியை.. மலர்ச்சியை.. எப்படிப் பாட்டுவரிகளுக்குள் அடக்கிவைத்துவிடுகிறார் பாருங்கள்!!

இருகரங்களைப் பிடித்ததும்
மயங்குவதேனடிராதாராதா
அதில்காந்தத்தைபோல்ஒருஉணர்ச்சி
உண்டானதுராஜாராஜாஓராஜா

காலங்கள் இன்று மாறியிருக்க.. எல்லா விஷயங்களும் விரல்நுனியில் வந்து விழுந்துகிடக்க.. அன்றைய காலக்கட்டத்தில்.. உணர்ந்தவர்களால் மட்டுமே உரைக்க முடியும்!! ஆம்! அதில் என்ன நடக்கும் என்று அறியாதவர்களாக.. வாழ்ந்த பெரும்பான்மை சமூகத்தில்.. இந்த வரிகள் ஏற்படுத்திய தாக்கம் ஆம்.. அமோகம் என்றே சொல்வேன்!!

முதலிரவென்று சொல்வது
ஏனடிவந்தது ராதா ராதா...
அது உரிமையில் இருவரும்
அறிமுகம் ஆவது ராஜா..ராஜா...

கேள்வி எழுந்தபோதும் அதை லாவகமாக.. நாயகி தரும் பதிலாக வரைந்திருக்கும் வார்த்தைகள்.. நாகரீகத்தின் உச்சம் என்றே நாம் கொள்ளலாம்! இத்தனைப் பொக்கிஷங்களையும் உள்ளடக்கித்தான் அன்றைய பாடல்கள் அணிவகுத்தன! எனவேதான் காலவெள்ளங்களைத்தாண்டி இன்றும் மக்களிடையே வரவேற்பை பெறுகின்றன!!
ராதா .. ராதா ..
ராதா .. ராதா .. ராதா ..
ராஜா.. ராஜா.. ஓராஜா..
எந்தன்பார்வையின்கேள்விக்கு
பதில்என்னசொல்லடிராதா..ராதா
உந்தன்பார்வைக்குபார்வை
பதிலாய்விளைந்ததுராஜாஓராஜா

நல்லஇதயங்கள்பேசிடும்
மொழிஎன்னசொல்லடிராதா
அதுஏட்டிலும்எழுத்திலும்
எழுதவராதுராஜாராஜாராஜா ஓ

நெஞ்சில் இருவரும் இணைந்தபின்
திருமணம் ஏனடி ராதா..
அது இளமையின் நாடகம் அரங்கத்தில்
வருவது ராஜா..ராஜா..ராஜா...
முதலிரவென்று சொல்வது
ஏனடிவந்தது ராதா ராதா...
அது உரிமையில் இருவரும்
அறிமுகம் ஆவது ராஜா..ராஜா...

பெண்மை தலைகுனிந்து இருப்பதும்
தவிப்பதும் ஏனடி ராதா..
அது தலைமுறை வழிவந்த
தாய்தந்த சீதனம் ராஜா ராஜா
கொண்ட மயக்கத்தில் கன்னம்
சிவப்பது ஏனடி ராதா...
அது மனமெனும் வண்டியை
நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா.

பயணம் தொடரும்...