தொடர்கள்
ஆரோகியம்
விரல்களில் விந்தை 17- ரஜனி சுப்பிரமணியம்

20230620084759351.jpg

அனுசாசன முத்திரை.

மனிதனின் ஆரோக்கியமே, முதுகெலும்பை மையமாக வைத்துதான் இருக்கிறது. முதுகெலும்பை மூன்றாகப் பிரிக்கலாம். அவை கழுத்து முதுகு எலும்பு, நடுமுதுகு எலும்பு, அடிமுதுகு எலும்பு ஆகும். கழுத்து முதுகு வலி நுரையீரல், இதயம் ஆகியவற்றின் குறைபாடுகளாலும், நடுமுதுகு வலி சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றின் குறைபாடுகளா லும், அடிமுதுகு வலி சிறுநீரகம், சிறுநீரகப்பை ஆகியவற்றின் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. உள் உறுப்புக்களின் செயல்பாட்டுத்திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுவது தான் முதுகுவலி. எனவே முதுகு எலும்பு திடமாக இருக்க வேண்டும். முதுகு எலும்பையும், அதைச் சார்ந்த உள்ளுறுப்புக்களையும் வலு வடையச்செய்யும் முத்திரையே, அனுசாசன முத்திரை எனப்படும் முதுகுவலி நீக்கு முத்திரை.

முத்திரைகளை செய்வதற்கான விதிமுறைகள் நமக்கு ஏற்கெனவே தெரியும் அல்லவா?

இப்போது இந்த அனுசாசன முத்திரையை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதை இரு கைகளிலும் செய்ய வேண்டும். ஒவ்வொரு கையிலும் முதல் மூன்று விரல்களையும் லேசாக மடக்கியபடி, பெரு விரலால் மோதிர விரலை லேசாக அழுத்தி வைக்க வேண்டும். ஆள்காட்டி விரலை படத்தில் காட்டியுள்ளதைப் போல வானத்தை நோக்கியபடி நிமிர்த்தி வைக்க வேண்டும்.

அதிகமாக முதுகு வலி உடையவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை 2 நிமிடம் என்ற அளவில் அதிகபட்சம் 10 முறை செய்தால் போதும். முதுகு வலிக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் கணினியின் முன் வேலை பார்த் துக் கொண்டிருப்பதால் முதுகு வலி என்பது சகஜமாகி விட்டது. இந்த முத்திரை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். மூன்று வேளை, உணவிற்கு முன் 2 நிமிடங்கள் செய்தால் போதும்

இந்த அனுசாசன முத்திரை செய்வதன் மூலம் கழுத்து, முதுகு, இடுப்பு ஆகியவற்றில் சக்தியோட்டம் அதிகரிக்கும். அந்தப் பகுதிகளில் சதைப்பிடிப்பு இருந்தால் சரியாகும். சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்டிருக்கு சாதாரணமாக முதுகு வலி இருக்கும். அவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்துவர ஒரு வாரத்திலேயே குணம் தெரியும். பிரசவ காலத்தில் இதை செய்யக்கூடாது. பிரசவத்திற்குப் பிறகு செய்யலாம்.

இந்த முத்திரையைச் செய்வதால் ஏற்படும் மற்ற பலன்கள் - தோள் பட்டை வலி, இடுப்பு வலி, முதுகு வலி, அடி முதுகு வலி நீங்கும். தோள் பட்டை தசைகள் வலுப்பெறும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுகுடல், பெருங்குடல் மற்றும் நுரையீரல்கள் பிரச்சனைகள் சரியாகும். முதுகுத்தண்டுவடம், முதுகு எலும்பு ஆகியவை வலு வடையும்.

இந்த முத்திரைக்கு "கட்டுப்பாட்டு முத்திரை" என்ற பெயரும் உண்டு. இதைச்செய்வதால் சுயக்கட்டுப்பாடு நமக்கு வரும்.தெளிவான முடிவு எடுப்பதற்கும், மனம் பக்குவப் படுவதற்கும், பொறுமையாக இருப்பதற்கும் இம்முத்திரை உதவும். உள் உறுப்புகளை நன்கு இயங்க வைத்து எல்லாவித முதுகு வலிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அற்புதமான அனுசாசன முத்திரையை செய்து நலம் பெறுவோம்.

முத்திரைகள் செய்வோம். மாத்திரைகளைத் தவிர்ப்போம்.