Heading : மீண்டும் வேண்டும் விளையாட்டுக்கள் ! ஊதாமணியை ஒளித்து விட்டோம் -மரியா சிவானந்தம்
Comment : அருமையான கட்டுரை இப்போதுதான் விளையாடி அடிபட்டு வந்து வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என மறைத்த காலங்கள் ஞாபகம் வருகிறது.ஒருமுறை கில்லி விளையாடும் போது ஒருவன் அடிக்கும் போது கில்லி வந்து வேகமாக கண்ணீல் விழுந்து கண் ரத்ததில் கலங்கிவிட்டது மருத்துவமனைக்கு செல்ல பணமில்லை அப்போது செய்த சிகிச்சை இபபோதும் நினைவில் உள்ளது கோழியின் கொண்டை அறுத்து அதன் ரத்ததை கண்ணில் விட்டார்கள் மறுநாள் சரியாகிவிட்டது இப்போது இருந்தால் மருத்துவமனைக்கு சென்றால் ஐம்பதாயிரம் புடுங்கிருப்பார்கள்.அந்த எளிய சிகிச்சையில் எளிமையுடன் இனிமையுடன் வாழ்ந்தகாலத்தை நினைவுபடுத்தியதற்க்கு நன்றி அன்புடன் தயாநிதி. வேலூர்
Heading : கலங்க வைக்கும் "அயோத்தி " - திரை விமர்சனம் - மரியா சிவானந்தம்
Comment : பார்க்கவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் கதையும் தெரியாது தங்கள் கட்டுறை பார்த்தே ஆகவேன்டும் என்ற அளவுக்கு உள்ளது சில விமர்சனங்கள் கேட்டாலே படம் பார்த்தது போல் இருக்கும் சில விமர்சனங்கள் கேட்டாலே எப்போது பார்போம் என்று இருக்கும் தங்கள் பதிவை பார்த்தப்பிறகு ஒடிடியில் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
Heading : தொழுகை அணிவரிசை -எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்
Comment : best and wonderful article Rao
Heading : வரவேற்போம்...!
Comment : மதிப்பாய்வு முறை,அதனால வரும் மதிப்பெண்கள் ...uniform valuation...ஓரு கேள்விக்குறியாக வர வாய்ப்புள்ளது! பார்கவன் Reston VA USA
Heading : கோரிக்கைகளை நிறைவேற்றும் கோவை கோனியம்மன்!! - சுந்தரமைந்தன்.
Comment : எங்களுடைய ஊர் ,கோவை காவல் தெய்வமான அம்மனை பற்றி எழுதியதற்காக நன்றி! பார்கவன் Reston VA USA
Heading : மீண்டும் யயாதி - கி. ரமணி
Comment : யயாதி புராணத்தில் இத்தனை பின்னூடுகளா? பிரில்லியன் திங்கிங்... பிரமாதம்
திலீபன் கே, சென்னை
Heading : குகையிலிருந்து வெளியே வந்த பெண் - மாலா ஶ்ரீ
Comment : ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து விட்டார் ஃப்ளமினி. அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை காணும் ஆவலை தூண்டுவதாக உள்ளது.
சிவராமன், செந்தில்குமார், காரைக்குடி
Heading : போலீஸ் எஸ்.ஐ. கெஞ்சிய வைரல் வீடியோ ! மாலா ஶ்ரீ
Comment : இதுபோன்ற சமூக சிந்தனை கொண்ட அதிகாரி, ஒவ்வொரு காவல் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, அந்தந்த பகுதி அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண் கல்வி மற்றும் பள்ளி இடைநிற்றல் வெகுவாக குறையும்.
வளர்மதி, செண்பகவள்ளி, திருப்பரங்குன்றம்
Heading : சில்லரை மனிதர்கள் ! மாலா ஶ்ரீ
Comment : நிலுவை ஜீவனாம்ச நிலுவை தொகை வழங்க கணவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனைவிக்கு தண்டனையாக, சில்லறை காசுகளாக வழங்குவதா? நல்லவேளை... 5 காசு, 10 காசு புழக்கத்தில் இருந்திருந்தால், அதேபோல் குரூரமாக கொடுத்திருப்பாரோ?!
செபாஸ்டியன், ஜார்ஜ் மில்லர், நாகர்கோவில்
Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 13. பரணீதரன்
Comment : படிக்க நல்லாயிருக்கு. புரிஞ்சுக்கறது கஷ்டம். வயசான காலத்துல ஈசியா படிக்கலாம்னு பார்த்தா, தமிழ் இலக்கணம் கிளாஸ் எடுக்கிறாரு. இங்கு பேச்சு தமிழே ததிங்கிணத்தோம்! அக்காலத்தில் ஆன்மீக பயண கட்டுரை எழுதிய பரணிதரன் பேரை கேட்டாலே... சும்மா அதிரும்ல!
நாகம்மை பாலகிருஷ்ணன், காரைக்கால்
Heading : கோரிக்கைகளை நிறைவேற்றும் கோவை கோனியம்மன்!! - சுந்தரமைந்தன்.
Comment : எங்க சொந்த ஊருக்கு போய் கோணியம்மனையும் கோட்டை, பேட்டை சிவாலயங்களில் தரிசனம் செய்தது போலிருந்தது, சுந்தரமைந்தனின் கோவை ஆன்மீக உலா! அதுசரி, நீண்ட நாள் காத்திருந்த வாசகர்களுக்கு 'நச்'சுனு கோணி அம்மனை காண வைத்துவிட்டாரே!
சாந்தினி, ஷெர்லி, ஸ்வர்ணலதா , அகமதாபாத், குஜராத்
Heading : வாழ்க்கை இது தான்
Comment : இதுவும் ஒருவகை பாடம்தான். ஒருவேளை ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது. பட்டறிவுதான் அனுபவ பாடம் என கருதியிருக்கலாம்.
வெண்ணிலா, மாரிமுத்து , திருவாரூர்
Heading : வரவேற்போம்...!
Comment : தேர்வு விஷயத்தில் (மட்டுமே?!) மத்திய அரசு நம்மீது கரிசனம் காட்டியிருப்பதை வரவேற்போம். ஏன்னா, அடுத்த வருஷம் மக்களவை தேர்தல் வரப்போகுதே?!
இலக்கியா வடிவேலன், குமரப்பா, கொடைக்கானல்
Heading : விகடகவியின் ரம்ஜான் வாழ்த்துக்கள்.
Comment : அட, என்னப்பா இது... தமிழ்நாடு அரசு சார்பில் விகடகவி அனைத்து பண்டிகைக்கும் வித்தியாசமா வாழ்த்து சொல்லுது. நோட் பண்ணுங்கப்பா, நேரம் வரும்போது யூஸ் பண்ணிக்கலாம்.
பிரமிளா, சாத்தப்பன், மனோ, சிங்கப்பூர்
Heading : ஹாய் டியர் மதன்
Comment : வாசகர்களின் கேள்விகளுக்கு மதன் சளைக்காமல் பதிலளித்து வருவது மிக்க மகிழ்ச்சி. இதேபோல் தொடரவும். ஏன், எதற்கு, எப்படி என யாரேனும் அல்லது நீங்கள் கேட்டு இருக்கிறார்களா? பதில் அளிக்கவும். நன்றி.
ஷெரின் திலக், அகத்தியன், பாந்த்ரா, மும்பை
Heading : மீண்டும் வேண்டும் விளையாட்டுக்கள் ! ஊதாமணியை ஒளித்து விட்டோம் -மரியா சிவானந்தம்
Comment : அக்காலத்தில் பையன்களும் சிறுமிகளும் விளையாடிய பழங்கால விளையாட்டுகளை பற்றி மரியா சிவானந்தத்தின் குறும்புத்தனமிக்க எழுத்துநடையில் படித்து மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டோம். பின்னர் பேரன், பேத்திகளிடம் படித்து காட்டியதும், எங்களுக்கு சொல்லிக் கொடுங்க பாட்டினு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர். அவங்களுக்கு கோடை விடுமுறையில் சொல்லி கொடுக்க, நாங்களும் பயிற்சி எடுக்கணும். இருந்தாலும் சந்தோஷமே!
ராதா வெங்கட், மாயா குப்புசாமி, சென்னை
Heading : மறைந்துபோன மனங்கவர் விளையாட்டுகள் - வேங்கடகிருஷ்ணன்
Comment : நாங்க அந்தக் காலத்தில் கிட்டிப்புல், நுங்கு வண்டி வேகமாகத் தள்ளி போவதில் போட்டியில் பந்தயம் கட்டி ஜெயிச்சிருக்கோம். இப்பவும் நாங்க கிட்டிப்புல் செஞ்சு விளையாடறதை பார்க்கும் பசங்க, எங்களுக்கும் சொல்லி கொடுங்கனு ஆர்வமா கேட்கிறாங்க. நாங்க செஞ்சு கொடுத்த நுங்கு வண்டியை ஃப்ளாட்டை சுற்றியுள்ள காலி இடங்களில் சின்ன குழந்தைங்க தள்ளிக்கொண்டே ஓடுறதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு!
புருஷோத்தமன், தங்கராஜ், குன்றத்தூர்
Heading : தொழுகை அணிவரிசை -எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்
Comment : மசூதிகளில் தொழுகையின்போது கடைப்பிடிக்கப்படும் வரிசைகளை பற்றியும் அதன் கட்டுப்பாடுகளையும் மிக அழகாக ஆர்னிகா நாசர் விவரித்துள்ளார். மிக்க மகிழ்ச்சி. ரமலான் வாழ்த்துக்கள்.
Heading : தண்டவாள நினைவுகள் - ராம்
Comment : தண்டவாள நினைவுகள்னு நெல்லையில் உங்களின் பள்ளிக்கால அனுபவங்களை நெகிழ வைத்துவிட்டீர்கள் ராம். அதிலும், தண்டவாளத்தில் ரயில் வேகமாக செல்லும்போது, அங்குள்ள கருங்கற்கள் ரயிலில் அடிபட்டு சிதறும்போது எழும் சத்தத்தைக் கேட்கும்போது த்ரில்லா இருந்தது.
லாவண்யா கார்த்திக், அவந்திகா பாலா, ஜாம்ஷெட்பூர்
Leave a comment
Upload