தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இப்போது நிறைய வரத் தொடங்கி விட்டன. தேர்தல் ஆணையம் மத்திய அரசின் மனதின் குரல் என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியாக இருந்தாலும் அவர்களும் தேர்தல் ஆணையத்தை அவர்களின் மனதின் குரலாக மாற்றவே செய்வார்கள். எல்லாமே அரசியல் ஆதாயத்தின் அடிப்படை செயல்பாடு என்றாகி விட்டது.
தேர்தல் ஆணையர் நியமிப்பதில் அரசு காட்டிய அவசரம் பற்றிய பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தேர்தல் தலைமை ஆணையர் தேர்தல் ஆணையர் ஆகியவர்கள் பிரதமர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு பரிந்துரைக்கும் அதன் அடிப்படையில் அந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பு உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று மக்களாட்சியில் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு அவசியமானது. இந்தத் தீர்ப்பின் மூலம் தேர்தல் ஆணையத்துக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம். இப்போது உள்ள சூழ்நிலையில் நியாயமான தேர்தலை தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்ய முடியவில்லை என்பதற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலே உதாரணம்
ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது எந்த சந்தேகமும் வரக்கூடாது அது ஜனநாயகத்துக்கு இழுக்கு எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும். இதில் எந்ததயக்கமும் கூடாது.
Leave a comment
Upload