தமிழக சட்டசபைக்கும் எதிர்க் கட்சிக்கும் ஏதோ ராசியில்லை போல் தெரிகிறது. எம்ஜிஆர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டசபை செத்து விட்டது என்று சொல்லி சட்டசபைக்கு போகவில்லை முதல்வரான பிறகு தான் சட்டசபைக்கு போனார் .கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆளுங்கட்சி அதிமுக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசவிடாமல் குறுக்கீடு செய்வார்கள் .எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானார். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சட்டசபைக்கு வர மாட்டார் திடீரென ஒரு நாள் வந்து எழுதி வைத்ததை முழுவதும் படித்துவிட்டு வெளிநடப்பு செய்து விடுவார். ஜெயலலிதா முதல்வர் காங்கிரஸ் கட்சியின் எஸ் ஆர் பாலசுப்ரமணியம் எதிர்க்கட்சித் தலைவர் அவரையும் பேச விட மாட்டார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் எழுந்து அவருக்கு எதிராக குரல் கொடுப்பார்கள்.அதன்பிறகே சபாநாயகர் அவரை வெளியேற்றம் செய்யவார். இதைக் கண்டித்து இரவு முழுதும் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார் எஸ் ஆர் பி காங்கிரஸ் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தனது பணியை செய்ய நினைத்தாலும் அதை செய்ய விடாமல் தடுத்தது ஆளும் அதிமுக.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அவரும் ஆக்கப்பூர்வமாக கேள்வி கேட்க முற்பட்டால் அவரையும் பேசவிடாமல் தடுப்பது எதிர்க்கட்சித் தலைவரை சஸ்பெண்ட் செய்து அவரது அறைக்கு சீல் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தரப்பட்ட கார் கூட வெறுப்பு அரசியல் காரணமாக திருப்பி வாங்கப்பட்டது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் அவருக்கும் என் நிலைமை தான் அதிமுக, திமுக இரண்டும் எலியும் பூனையும்யாக இருப்பதால் இரண்டு கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக தங்களது எதிர்க்கட்சி பணியை செய்ய முடியவில்லை அல்லது செய்ய அனுமதிக்கப்படவில்லை. இப்போது கூட முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆக்கப்பூர்வமாக அவரது பணியை செய்ய விடுவதில்லை. தேவையற்ற பிரச்சனைக்கு அரசு அனுமதி தராத போது உண்ணாவிரதம் என்று சட்டம் ஒழுங்கு பிரச்சனையை புதிதாக கிளப்பியிருக்கிறார். மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய இடம் சட்டசபை தான். சட்டசபைக்கு வெளியே அல்ல.
சட்டசபையில் எதிர்க்கட்சி என்பது ஜனநாயக கடமை. ஆனால் அதை சரிவர செய்யாமல் இருப்பது ஜனநாயக சோகம்.
Leave a comment
Upload