ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபுரவி. யோகா மாஸ்டர். இவரது 7 வயது மூத்த மகன் தர்ஷித். பூந்தமல்லியில் ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை யோகா மாஸ்டர் என்பதால், சிறுவயதிலிருந்தே தர்ஷித் பல்வேறு யோகாசனங்களை கற்று தேர்ந்துள்ளார். இதில் மிக கடினமான ஓம்கார ஆசனத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என தர்ஷித்துக்கு ஆவல் அதிகரித்தது.
சமீபத்தில் சிறுவன் தர்ஷித் தலையில் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வைத்தவாறு, 6.14 நிமிடங்கள் ஓம்கார ஆசனம் செய்து, உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை நோபல் வேர்ல்டு ரிக்கார்டு அமைப்பினர் நேரில் பதிவு செய்து சான்றிதழ் வழங்கினர்.
முன்னதாக, ஓம்கார ஆசனத்தில் 2.45 நிமிடங்கள் இருந்தது சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை முறியடித்து, சிறுவன் தர்ஷித் 3 மடங்கு நேரம் அதிகமாக – 6.14 நிமிடங்கள் ஓம்கார ஆசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
வாழ்த்தலாமே !!
Leave a comment
Upload