புதிய யுக்தி தேவை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்தது தொடர்ந்து அரசுத்துறை செயலாளர்கள் செயல்பாடு பற்றி இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது சாலை அமைத்தல், குடிநீர் திட்டம், நகர்ப்புற திட்டம் போன்றவைகள் எல்லாம் நேரடியாக மக்கள் தொடர்புடைய திட்டங்கள் இவற்றையெல்லாம் நீங்கள் உன்னிப்பாக கவனித்து உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். இதேபோல் அரசு திட்டங்கள் குறித்த அரசாணைகள் வெளியிடுவதில் காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும். .புதிய யுக்திகளை பயன்படுத்தி திட்டங்கள் மக்களுக்குப் போய் சேர்கிறார் போல் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
150 பேர் சட்டசபைக்கு போவார்கள்
பாரதிய ஜனதா கட்சி 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடந்தது இந்த தொகுதியில் தான் முருகன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலை எட்டாண்டு சாதனைகளை பட்டியல் பற்றி பேசி விட்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் ஒருவர் நாடாளுமன்றம் செல்வார் என்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் 150 எம்எல்ஏக்கள் சட்டமன்றம் செல்வார்கள் என்று ஆருடம் சொன்ன அண்ணாமலை தமிழக அமைச்சர்கள் ஊழல் குறித்த பட்டியல் வரும் 5ஆம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம் என்றார்.
தீராத விவசாயிகள் பிரச்சனை
விவசாயிகள் பற்றி தினந்தோறும் ஏதாவது அறிவிப்புகள் சலுகைகள் என்று முதல்வர் அறிவித்தபடி இருக்கிறார். .ஆனால் அதிகாரிகள் அவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் அருகே பரவலூர் என்ற கிராமத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பயிர்களுக்கு நிலத்தடி நீர் தான் ஆதாரம் கடந்த வாரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பரவலூர் கிராமத்தில் ஆறு மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மின் கம்பிகள் அறுந்து விழுந்தன சில மின்கம்பிகள் கிளைகளில் சுற்றிக் கொண்டன இதனால் மின் தடை ஏற்பட்டது. இது பற்றி மின் வாரிய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் எதுவும் நடக்கவில்லை. அதிலும் குறிப்பாக விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்வதற்கு பதில் மின்சாரத்தை துண்டித்து விட்டனர். இதனால் மின் மோட்டார் இயக்கி விளை நிலங்களில் தண்ணீர் பாய்ச்சுவது தடைபட்டது.மின்சார வாரிய அதிகாரிகளின் கண்டுகொள்ளாத போக்கை கண்டித்து சில தினங்களுக்கு முன் விவசாயிகள் வயல்களில் விஷ பாட்டிலுடன் போராட்டம் நடத்தினார்கள்.
ஆனாலும் மின் வாரிய அதிகாரிகள் எனக்கென்ன மனக்கவலை என்று கண்டு கொள்ளவில்லை. இந்தப் போராட்ட செய்தி உள்ளூர் செய்தி சேனல் தினப் பத்திரிகை எல்லாவற்றிலும் வந்தது ஆனால் மாவட்ட உயர் அதிகாரிகள், மாவட்ட அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைவரும் வரும் செய்தி சேனல் பார்க்கும் வழக்கம் செய்தி படிக்கும் வழக்கம் இல்லாததால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவர்களுக்கு தெரியவில்லை பாவம்.
சோனியா ராகுலுக்கு சம்மன்
நன்றி : தினமணி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல் காந்தி சோனியா காந்தி இருவருக்கும் சம்மன் அனுப்பியது ராகுல்காந்தி இந்த மாதம் இரண்டாம் தேதி ஆஜராக வேண்டும் ஆனால் அவர் வழக்கப்படி வெளிநாடு சென்று விட்டதால் ஆஜராகவில்லை சோனியாகாந்தி எட்டாம் தேதி ஆஜராக வேண்டும்.ஆனால் சோனியா காந்திக்கு தற்போது கொரானா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இருந்தாலும் அவர் எட்டாம் தேதி ஆஜராவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது கூடவே இந்த வழக்கு பற்றி குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சி இது போன மலிவான அரசியல் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம் இந்த வழக்கை நாங்கள் எப்படி சந்திப்பது என்று தெரியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. அதேசமயம் பாரதிய ஜனதாவின் முன்னாள் தோழமைக் கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இந்த சம்மன் பற்றி குறிப்பிட்டு பாரதிய ஜனதா ஆட்சியில் அமலாக்கத்துறை சார்பில் முன்னாள் பிரதமர் நேரு மகாத்மா காந்தி சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் பணப் பரிமாற்றங்களை சமர்ப்பிக்கவும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் கூடும் என்று சொல்லியிருக்கிறார்.இது எப்படி இருக்கு.
கள்ள நோட்டு புழக்கம் இருக்கு
கடந்த 2016ஆம் ஆண்டு ,நவம்பர் 8 இரவில் பிரதமர் டிவியில் தோன்றி 500 ரூபாய் 1000 நோட்டு செல்லாது என்று அறிவித்தார். இதனால் கள்ள நோட்டு புழக்கம் நின்று போகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று ரிசர்வ் பேங்க் சொல்கிறது.சமீபத்திய ரிசர்வ் பேங்க் செய்திக்குறிப்பில் இந்தியாவில் புதிய 500 ரூபாய் கள்ள நோட்டு 100 சதவீதமும் 2000 ரூபாய் கள்ளநோட்டு 50 சதவீதமும் அதிகரித்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 கள்ள நோட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறது .பேசாமல் ரூபாய் நோட்டுக்கு பதில் அஞ்சு பைசா, பத்து பைசா நாணயங்கள் ஆக உற்பத்தி செய்தால் கை நிறைய பை நிறைய பணப்புழக்கம் அதிகரிக்கும் கள்ள நோட்டுகாரர்களும் வேறு நாடு பார்த்து போவார்கள் யோசியுங்கள் மிஸ்டர் கவர்னர்.
Leave a comment
Upload