விக்ரம் படம் டிக்கெட் விலை
பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் போது முதல் மூன்று நாள் அல்லது நான்கு நாட்கள் வரை டிக்கெட் விலை தாறுமாறாக தான் இருக்கும்.படத்தில் தர்மம் ஞாயம் பேசும் ஹீரோக்கள் இதை கண்டு கொள்வதில்லை. இந்த இந்த வாரம் கமல் நடித்த விக்ரம் படம் ரிலீசாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிக்கெட் விலை நியாயமான தாக இருக்குமா அல்லது மற்ற ஹீரோக்கள் பட டிக்கெட் விலை போல் கண்ணா பின்னா என்று தான் இருக்குமா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்கிறார்கள்.
கமல் மக்கள் பிரச்சனை பற்றி எல்லாம் உடனுக்குடன் கருத்து சொல்கிறார். இந்தப் படத்தின் டிக்கெட் விலை பற்றி புரிகிறார் போல் ஏதாவது அறிக்கை வெளியிடுவாரா என்று எல்லோரும் ஆவலுடன் இருக்கிறார்கள். ஏற்கனவே பட ரிலீஸ் போது விடியற்காலை காட்சி நள்ளிரவு காட்சி என்று மக்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற ஒரு பொது நல வழக்கு நீதிமன்றத்தில் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் இங்கே சொல்லியாக வேண்டும்.
நயன்தாரா திருமணம் யார் யாருக்கு அழைப்பு
விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் ஜூன் 9ஆம் தேதி என்பதை உறுதி படுத்தி விட்டார்கள். அனேகமாக திருமணம் மகாபலிபுரத்தில் என்கிறார்கள்.முதலில் திருமணம் திருப்பதியில் என்றார்கள் அது தோது படவில்லை என்பதால் மகாபலிபுரம் என்று மாற்றிவிட்டார்கள். இந்த திருமணத்தை ஒளிபரப்ப ஒரு ஒடிடி நிறுவனம் வந்து பேசி அதிக விலைக்கு வாங்கி இருக்கிறார்கள் அதிலும் பணம் பார்த்து விட்டது இந்த காதல் ஜோடி.போன வாரம் இருவரும் யார் யாரெல்லாம் திருமணத்துக்கு அழைப்பது என்று 500பேர் கொண்ட பட்டியல் தயார் செய்து அதை இருநூறு பேர் ஆக இறுதி செய்தார்கள்.இதில் நயன்தாராவுடன் ஜோடி போட்டு டூயட் பாடிய எல்லா ஹீரோக்களுக்கு அழைப்பு உண்டாம் இதையெல்லாம் கொஞ்சம் அரசல்புரசலாக நயன்தாராவின் வருங்கால கணவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அய்யாவிஜய்
விக்ரம் படம் பன்மொழி படம் என்பதால் வியாபார நிமித்தமாக எல்லா மொழி ஊர்களுக்கும் சென்று இந்தப் படத்தை விளம்பரப் படுத்துகிறார் உலகநாயகன் கமலஹாசன் .இதற்காக போன வாரம் மலேசியா போனார். மலேசியாவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது அதில் ஒரு கேள்வி நீங்கள் நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பீர்களா அதற்கு கமலஹாசன் சிரித்தபடி தந்த பதில் அய்யா விஜய் நேரம் கொடுத்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன் என்பது.
அப்டேட் தாங்க ப்ளீஸ்
இயக்குனர் மணிரத்தினம் பிறந்தநாள் அன்று அவர்கள் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் பற்றிய சமீபத்திய செய்திகளை சொல்லுங்கள் என்று வலைதளத்தில் அவரை நச்சு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர் அதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை ஆனால் ஒரு சில தகவல்கள் இதோ பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது இரண்டு பாகமும் ரெடி.முதல் பாகம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள் இது நமக்குத் தெரிந்த செய்தி.
ரிலீசுக்கு முன்பே கோடிகளைக் கொட்டிய...
விக்ரம் படத்தின் சேட்டிலைட் உரிமை டிஜிட்டல் ஒடிடி உரிமை 200 கோடிக்கு விலை போகிறது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 200 கோடி பணம் வசூல் செய்து தந்து விட்டது. சாட்டிலைட் உரிமை விஜய் டிவி வாங்கி இருக்கிறது. ஒடிடி உரிமை ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் ரஜினி சந்திப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர். அவரது டான் படத்தில் கூட சில காட்சிகளில் ரஜினி மாதிரி வசனங்கள் எல்லாம் பேசி இருக்கிறார். ஏற்கனவே ரஜினிகாந்த்டான் படம் பார்த்து விட்டு சிவகார்த்திகேயனுக்கு போன் போட்டு பாராட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் சிவகார்த்திகேயன் ரஜினியை நேரில் சந்தித்து நன்றி சொன்னார். சிவகார்த்திகேயனின் 20-ஆவது படம் ஷூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இது முடிந்ததும் ராஜ்கமல் படம் சூட்டிங் ஆரம்பம்.
Leave a comment
Upload