சித்து மூஸே வாலாவுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது நண்பர்கள்குர்வந்தர் சிங் மற்றும் குர்பிரீத் சிங் ஆகியோரும் இந்த கொடூரமான பட்டப்பகல்படுகொலைக்கு கண் கண்ட சாட்சிகள்.
பர்னாலா மாவட்டத்தில் தனது நோய்வாய்ப்பட்ட அத்தையை பார்த்துவிட்டு வரமூஸே வாலா தனது மஹிந்திரா தார் SUVயில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்குபின் வண்டியில் அவரது தந்தையும் பயணித்திருக்கிறார்.
சித்து மூஸே வாலா தனது முன் தினம்தான் நான்கிலிருந்து இரண்டாககுறைக்கப்பட்ட பாதுகாப்பு போலீஸ் நபர்களை தன்னுடைய ஜீப்பில், ஐந்து பேருக்கு மேல்உட்கார வைக்க முடியாது என்றதால் அவரது தந்தை பால்கூர் சிங் அந்த இரண்டுபாதுகாப்பு மனிதர்களுடன் மற்றொரு காரில் சித்து மூஸேவாலாவைப் பின்தொடர்வதாகபோலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
சித்து மூஸே வாலா தனது அத்தை கிராமத்தை அடைந்த தருணம், வாகனத்தின்பின்னால் இருந்து ஒரு ஷாட் சுடப்பட்டது, மற்றொரு கார் சித்துவின் ஜீப்பின்முன்பக்கத்திலிருந்து தடுத்தது. தானியங்கி தாக்குதல் துப்பாக்கியினால் ஒருவர் ஜீப்பின்முன் தோன்றி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார், என்றுகுர்விந்தர் சிங் கூறினார். 28 வயதேயாகும் சித்துவும் தனது கைத்துப்பாக்கியில் இருந்துஇரண்டு சுற்றுகளைச் சுட்டார். சம்பவத்திற்கு பின்னர் அது அவரது ஜீப்பிலிருந்துமீட்கப்பட்டது, ஆனால் அது அதிநவீன தாக்குதல் துப்பாக்கிகளுக்கு ஈடு கொடுக்கஇயலவில்லை. மேலும், துப்பாக்கி ஏந்திக்கொண்டு மூன்று பக்கங்களிலிருந்தும் சேர்ந்துதுப்பாக்கிச் சூடு தொடர்ந்தனர், என்றார் குர்விந்தர் சிங் தொடர்ந்தார். சித்து மூஸே வாலாதப்பிக்க முயன்றும் முடியாது போனார், என்று அவர் மேலும் கூறினார்.
சித்து மூஸே வாலாவின் மீது 30 ரவுண்ட்டுகளுக்கு மேல் எட்டு முதல் 10 பேர்கள்தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகும், அவர் உயிருடன்இருக்கிறார்களா என்று சோதித்த பின்னரே விலகினர்.
ஏதோ ஆங்கில ஆக்ஷன் பட த்ரில்லரில் வருவது போன்றே இருந்தது இந்த நடந்துமுடிந்த நிகழ்வுகளெல்லாம் அல்லவா?
தாக்குதலின்போது கண்ணால் கண்ட சாட்சியாக இருந்த பாடகரின் தந்தை னத்உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அவர் போலீசாரிடம் புகாரும்செய்திருக்கிறார்.
ஒரு எஸ்யூவி மற்றும் ஒரு செடான் சாலையில் காத்திருந்தன; ஒவ்வொன்றிலும்இருந்த நான்கு ஆயுதமேந்தியவர்கள் மூஸேவாலா இருந்த கார் மீது தோட்டாக்களைபொழிந்தனர்.
"சில நிமிடங்களில், அந்த வாகனங்கள் விலகி விறைந்தன. நான் கூச்சலிடஆரம்பித்தேன், மக்கள் கூடிவந்தார்கள். நான் என் மகனையும் அவரது நண்பர்களையும்மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்" என்று பாடகரின் தந்தை புகாரில் கூறியுள்ளார்.அதில், பாடகரை பல குண்டர்கள் அவரை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறுகிறது.
உத்தராகாண்டில் ஒருவர் இந்த கொலையில் சம்பத்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில்கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது அந்த மாநிலத்தில் சரளமாக நடந்து வரும் கேங்க் வார்களின் தொடர் தான்என்றும் தெரிகிறது.
இந்த கொலைக்கு முன்தினம் தான் 424 நபர்களின் (ராப்பர்-பாடகர் சித்துமூஸேவாலாஉட்பட) பாதுகாப்பு ஒரு படியாக குறைக்கப்பட்டு பொதுமக்களுக்குஅறிவிக்கவும் பட்டது என்பதும் ஒரு காரணம் என்று எதிர்கட்சிகள் ஆளும் ஆம் ஆத்மீ கட்சிமீது கடுமையாக குற்றம் சாட்டினர். இதற்கிடையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஒருநாள் முன்பு அவரது பாதுகாப்பு நான்கு முதல் இரண்டு கமாண்டோக்களாக குறைக்கப்பட்டநிலையில், சம்பவ தினத்தன்று, ஞாயிற்றுக்கிழமை, தனது குண்டு துளைக்காதவாகனத்தையும் பயன்படுத்தவில்லை, மேலும் தனது இரண்டு மெய்க்காப்பாளர்களையும்வீட்டில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார். விதி வலியது. நேற்று பஞ்சாப் & ஹரியாணாஹைகோர்ட் மாநில அரசை மீதமுள்ள 423 நபர்களின் பாதுகாப்பை முந்தைய நிலைக்குகொண்டுவந்திட ஆணை பிறப்பித்துவிட்டது. இருப்பினும் போன உயிர் போனது தானே.
கனடாவை தளமாகக் கொண்ட குண்டர்கள் கோல்டி பிரார் தனது பேஸ்புக்கில்சித்து மூஸே வாலா கொலை செய்ததற்கு பொறுப்பேற்பதாக குறிப்பிட்டிருந்தார். கோல்டிபிரார், திஹார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கும்பல் தலைவர் லாரன்ஸ்பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் ஆவார். அவரை பஞ்சாப் அரசு விசாரணைக்காகஇட்டுச் சென்றுள்ளது.
சித்து மூஸ் வாலாவின் உடல் அவரது மூதாதையர் கிராமமான ஜவஹர்கேவில் தானாககூடியா ஆயிரமாயிரம் ரசிகர்கள் புடௌ சூழ பஞ்சாப் போலீஸின் பலத்த பாதுகாப்புடன்தகனம் செய்யப்பட்டது. சித்து மூஸேவாலா தனது பெற்றோர்க்கு பிறந்த ஒரே மகன்.
பாடகர் சித்து மூஸ் வாலாவின் தந்தை பால்கூர் சிங் தனது மகனின் தகனத்தின்போது தனது டர்பனை தலையிலிருந்து இரு கைகளிலும் ஏந்தி குழுமியிருந்த ரசிகவெள்ளத்திற்கு காண்பித்தது, நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று செய்த சமிஞை பார்த்தவரெல்லாம் கண்கலங்கிப் போயினர்.
தனது மூதாதையர் வாழ்ந்த ஊரான மூஸே என்பதையே தனது பெயரோடுஇணைத்து சித்து மூஸேவாலா என்ற பெயரையே தனது மேடைப் பெயராக எடுத்துக்கொண்ட ஷுப்தீப் சிங் சித்து (11 ஜூன் 1993 - 29 மே 2022), ஒரு இந்தியப் பாடகர், ராப்பர், நடிகர் மற்றும் பஞ்சாபி இசை மற்றும் பஞ்சாபி சினிமாவுடன் தொடர்புடைய அரசியல்வாதி.ஹிப் ஹாப், கேங்க்ஸ்டா ராப் போன்றவற்றில் பிரசித்தம் பெற்றவரிவர்.
மூஸே வாலா தனது சர்ச்சைக்குரிய பாடல் வரிகளுக்கு பெயர் பெற்றவர், அடிக்கடிதுப்பாக்கி மற்றும் தாதாக்கள் கலாச்சாரங்களை ஊக்குவித்தார், அதே சமயம் மதஉணர்வுகளை சவால் செய்தார், சீக்கிய மதத்தில் ஒரு மரியாதைக்குரிய நபரான மாய்பாகோ தொடர்பான வழக்கு. துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், அவரது பாடல்களில் எரிச்சலூட்டும் மற்றும் தூண்டும் வரிகளைப் பயன்படுத்தியதற்காகவும் அவர்சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டார்.
காவல்துறையின் கூற்றுப்படி, மூஸேவாலாவின் கொலை 2021 இல் அகாலிதலைவரான விக்கி மிடுகேராவைக் கொன்றதற்குப் பழிவாங்குவதற்காக செய்யப்பட்டதாகத்தெரிகிறது. மூஸ் வாலாவின் உதவியாளருக்கு மிடு கேராவைக் கொன்றதில் பங்குஇருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. துப்பாக்கி கலாச்சாரம், தாதாக்கள் என்ற செயல்கள்இங்கு ஏராளம். அதிலும் இதில் கனடாவில் வாழும் தாதாக்கள் மிகவும் ஆர்வம் காட்டுதலும்சர்வ சாதாரணம்.
இந்த கொலைக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்துள்ளார். மூஸே வாலாவை "பஞ்சாபின் கலாச்சார சின்னம்" என்று அழைத்த அவர், அவரது மரணம்குறித்து அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டகுடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதாகவும் கூறினார்.
மூஸே வாலா, மே 15 அன்றுதான் 'கடைசி யாத்திரை (the last ride)’ என்ற தலைப்பில்ஒரு பாடலை எழுதி பாடியிருந்தார், அதன் வரிகள், அவர் இறந்துவிடுவார் என்றும் அவரதுஇறுதி ஊர்வலம் இளம் வயதிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் எழுதப்பட்டிருக்கும்.
இப்போது, அவரது ரசிகர்கள் அவரது மரணத்தின் விதம், அவரது பாடல்களின்வரிகள் மற்றும் அவரது ஆல்பங்களின் அட்டைப்படத்தில் உள்ள வினோதமான தற்செயல்நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, சமூக ஊடகங்களில் பாடல்களை பரவலாகப் பகிர்ந்துவருகின்றனர்.
இந்த கொலையின் மூலம் பஞ்சாபில் ஆம் ஆத்மீ கட்சிக்கு சற்றே ஆட்டம் கண்டுவிட்டது உண்மைதான்.
சமீப காலமாக இந்த மாநிலத்தில், இளைஞர்களிடையே இந்த சட்டத்திற்கு புறம்பான செயல்கள் மிக அதிகமாக நடந்து வருகிறது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பஞ்சாப் இருப்பதால் பகவந்த் மானுக்கு இது ஒரு பெரிய சவால் தான்.
Leave a comment
Upload