வரி ஏய்ப்பு என்பது ஒரு மோசடி
3.26 லட்சம் வணிகர்கள் 21-22 நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லைஎனக் கண்டறியப்பட்டது 94 லட்சம் வணிகர்கள் ஆயிரம் ரூபாய்க்கு கீழே மற்றும் ஜி.எஸ்.டி வரியை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியது தெரியவந்துள்ளது. மே மாதம் 22430 வணிகர்கள் 64.21 கோடி வரியை அரசுக்கு செலுத்தியுள்ளனர். வரி ஏய்ப்பு ஏதேனும் வணிகவரித்துறை கண்டுபிடிக்கப்பட்டால் வரி தொகையுடன் சேர்த்து அபராதம் மற்றும் வட்டி ஆகியவை வசூலிக்கப்படும்.இது வணிகவரி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு
வணிக வரி என்பது ஏற்கனவே வணிகர்கள் நுகர்வோரிடம் வசூலித்து அதைத்தான் அவர்கள் வரியாக செலுத்துகிறார்கள். ஆனால் அரசின் செய்திக்குறிப்பில் வரிஏய்ப்பு ஏதோனும் கண்டுபிடிக்கப்பட்டால் என்று குறிப்பிட்டுள்ளது நான் அடிக்கிறா போல் நடிக்கிறேன்.நீ அழுகிறாய் போல் நடி என்று சொல்வது போல் இருக்கிறது. அப்படியென்றால் ஒரு பைசா கூட கட்டவில்லை ஆயிரம் ரூபாய்தான் செலுத்தி இருக்கிறார்கள் போன்ற புள்ளி விவரம் இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள். எல்லாமே மர்மமாக இருக்கிறது. ஆனால் நிதியமைச்சர் எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என்று சொல்லி வருகிறார். வணிகவரித்துறை வரி வசூலில் முழு கவனம் செலுத்தாமல் மெத்தனம் காட்டுகிறது என்பதை அவர்களது அறிக்கையை தெளிவுபடுத்துகிறது.
இதன் மூலம் நடவடிக்கை எல்லாம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்பதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது. காரணம் வணிகர் சங்கம் என்பது அரசியல் சார்ந்தது அது ஒரு ஓட்டு வங்கி என்பதுதான்.ஒரு வணிகர் சங்கத் தலைவரின் வாரிசு தற்போது ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்படியிருக்கும் போது வரிஏய்ப்பு நடவடிக்கை ஒரு மோசடியாக தான் இருக்கும்ஆனால் வசூலிக்கப்பட வேண்டிய வரி ஏற்கனவேபொதுமக்களிடம் வணிகர்கள் வாங்கிவிட்டார்கள். பொதுமக்கள் இளிச்சவாயர்கள் என்பதை வரி ஏய்ப்பாளர்கள் வணிகவரி அதிகாரிகள் இருவரும் உறுதியாக நம்புகிறார்கள் வரி ஏய்ப்பு என்பது ஒரு மோசடி என்பது கூட வணிகவரித் துறைக்கு தெரியாமல் இருப்பது இன்னொரு ஆச்சர்யம்.
Leave a comment
Upload