களப்பிரர் காலம் (கி.பி. 3-6 நூற்றாண்டுகள்)
களப்பிரர் யார்? அது இருண்டகாலமா?
தமிழக வரலாற்றில் சங்க காலத்தின் பின்னர் சுமார் 2-3 நூற்றாண்டுகளை இருண்டகாலம் என்ற பெயரிலேயே வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இக்கால பகுதியில் களப்பிரர் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்ற குறிப்புகள் பல கிடைத்த போதிலும் இவர்கள் யார்? எங்கிருந்து, எவ்வாறு தமிழகப் பகுதியைக் கைப்பற்றினர்? என்ற பல செய்திகள் தெளிவாக்கப்படவில்லை.
கடைச் சங்கத்தின் இறுதியில் ஆண்ட அரசன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. அவன் காலத்தில்தான் பாண்டிய நாடு பன்னிரண்டு ஆண்டுகள் வறுமையினால் வாடியது.
குழப்பம் நிறைந்த பகுதியாதனால், தென் கன்னட பகுதியிலிருந்து சோணாட்டில் களப்பிரர்கள் நுழைந்திருக்க வேண்டும். களப்பிரர்கள் சென்னை பெருநகர் பகுதியை உள்ளிட்ட தொண்டைநாடு வழியாகவே சோணாட்டுப் புகார்வரை வந்திருக்க வேண்டும்.
களப்பிரர்கள் வலிகுன்றியிருக்கின்ற சோநாட்டரசர்களை எளிதில் வென்று புகாரைத் தலைநகராக்கி ஆண்டிருக்கின்றனர். வறுமையின் கொடுமையில் மயங்கி கிடந்த பாண்டிய நாட்டினையும் கைப்பற்றினர் என்றும், இவையனைத்தும் கி.பி 2-3 நூற்றாண்டுகளில் களப்பிரர் காலத்து நிகழ்ச்சிகள் என்று தெரிவிக்கிறார் திரு இரா. பன்னீர் செல்வம்.
அவர்களில் சிறப்பாக ஆண்டு புகழ்பெற்ற அரசன் - பெயர் தெரிந்த பழைய அரசன் -- அச்சுத களப்பாளன் என்பவனே.
தமிழ் நாட்டின் வாடா எல்லைக்கு அப்பால் கன்னடப் பகுதியில் இக்களப்பிரர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இவர்களது நாடு வேங்கடமும், வேங்கடத்தும்பரும் எனது கொண்டும், அது தமிழ் மொழியில்லாத வேற்று மொழி பயிலப்பெற்ற மொழி பெயர் தேயம் என்பது கொண்டும் களப்பிரர் புள்ளியினத்தவராக வேங்கடமலைச் சாரல் பகுதியினை ஆண்டு வந்த ஒரு மலைவாழ் அரசகுடியினராக இருந்திருக்க வேண்டும்.
-- (தொடரும்)
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload