தொடர்கள்
பொது
பாம்பும் வாட்சப்பும். - நீலமேகம்.

20220502203052114.jpeg

என்ன சம்பந்தமேயில்லாமல் பாம்பும் வாட்சப்பும் ???

அதான் நீலமேகம்.

அதாவது வாட்சப் குரூப்பு பல தரப்பட்டது. என்ன குரூப்பு என்ன கருமம்னு தெரியாமலே இருப்போம். அப்படித்தான் எத்தனையோ தரப்பட்ட பாம்பு வகைகள் இருக்காமே….

அந்த ஜீவராசி கடிச்சா விஷமுறிவு இருக்கு. இங்க குரூப்ல யாராவது கடிச்சா உறவு முறிவு தான்.

காட்டுக்குள்ளயும் இருக்கும். வீட்டுக்குள்ளயும் இருக்கும். தெரியாத இடங்கள்ள தெரியாத சந்தர்ப்பங்கள்ள பாக்கலாம் அந்த ஜீவராசியை. இங்க மட்டும் என்ன வாழுதாம். தெரியாத ஜனங்களோட வீட்டு குரூப்பு ஆஃபீஸ் குரூப்பு இப்படி பல குரூப்புலயும் வாட்சப் இருக்கே.

பாம்பு. கண்ணாடிக்குள்ள இருக்க வரைக்கும் பிரச்சினையில்லை. ஆனால் வாட்சப்பு சனியனும் அப்படித்தான். தொடாத வரைக்கும் தொந்தரவு இல்ல. எடுத்தா நம்மள விடாது.

பாம்பு வாழ்நாள்ல ஒரு தடவை ஏதோ மாணிக்கத்தைக் கக்குமாம். இப்படியே மூடநம்பிக்கை தொடர்ந்து இருக்கு. இந்த படத்தை இருவது பேருக்கு ஃபார்வேடு பண்ணலைன்னா ரத்தம் கக்கும்ங்கற மூடநம்பிக்கை வாட்சப்புலயும் ஏராளம்.

ஒத்துமையும் சொல்லணுமாயில்லையா ??

கோவில்ல வெச்சு பாலு ஊத்தி பூசை நடக்கும் பாம்பாருக்கு. அப்படித்தான் காலைல பக்தியோடு வரும் படங்கள் வாட்சப்பை கோவிலாக்குமாக்கும்.

பாம்பு படம் எடுக்கும். வாட்சப்பும் படம் எடுக்கும்.

பாம்பு புத்துக்குள்ள எங்க இருக்குன்னு கண்டுபுடிக்கிறது கஷ்டம். அதே மாதிரி ஐயாயிரம் மெசேஜுல நமக்கு வேணுங்கறது கிடைக்கறதும் சில சமயங்கள்ல கஷ்டம்.

பாம்புன்னு தாண்டவும் முடியலை பழுதுன்னு மிதிக்கவும் முடியலைம்பாய்ங்க. தொந்தரவுன்னு டெலீட்டும் பண்ண முடியலை அத்தியாவசியம்னு வெச்சுக்கவும் முடியலைன்னு பல வாட்சப் குரூப் இருக்குங்கோ.

கிங் கோப்ரான்னு ஒன்னு இருக்கு. ராஜ நாகம். அது தான் பவர்ஃபுல்லாம். இங்க வாட்சப் குரூப்ல அட்மினுங்கோ.

அட்மின்கள் அடிக்க வருமுன் முடிச்சுக்குவோம்.

உங்க யோசனை ஏதேனும் இருந்தால் காமெண்ட்ல ஒரே போடா போடுங்க !!