மோட்சம் தரும் 7 புண்ணிய நகரங்களில் வாரணாசியும் ஒன்று! இந்த புண்ணிய இடத்தை கோலோச்சி கொண்டிருக்கும் காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஸ்ரீ அன்னபூரணி தெய்வங்கள் அருளால் தொடர்ந்து 15 வருடங்களாக எனக்கு இன்று(14/11) இந்த தீபாவளி தெய்வீக திரு நாளில் புனித கங்கையில் நீராடும் பெரும் பாக்கியத்தை அருளியது என் வாழ்வில் கிடைத்த பெரும் புண்ணியமாக கருதுகின்றேன்.
இன்றைய கொராணா காலத்திலும் என் குரு மகான் ஸ்ரீ ராகவேந்திரர் துணையும் பெற்றோர் மாமியார் மீனாட்சி மற்றும் மனைவி காமாட்சியின் ஆசிகளும் மட்டுமே பக்க பலமும் பாலமுமாக அமைந்து இந்த வருடமும் கொரானா காலத்திலும் கங்கையில் தீபாவளி கங்கா ஸ்நானம் கிடைக்க பேறு பெற்றேன்.
2006 தீபாவளி நாளில் முதல் முறையாக என் பெற்றோர்களுக்கு திதி காரியங்கள் செய்ய காசி சங்கர மடத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த என்னுடைய சம்மந்தி கோவை திரு. சுப்ரமணியம் அவர்களுக்கு என் நன்றியினை இங்கு பதிவு செய்கிறேன். அது தான் என் முதல் காசி தீபாவளி பயணம்.
மேலும் காசி ஒரு முக்தி தரும் பூமி. அதை அடைவதற்காக வயது முதியோர்கள் இங்கு தங்கள் இறுதி காலத்தில் தங்கி ஆத்ம சுத்தி பெற்று முக்தி அடைகின்றனர்.(என் விருப்பமும் கூட)
காசியில் லட்டு தேர் தங்க அன்னபூரணி தரிசனம் தீபாவளி திருநாளில் மிகவும் பிரபலமானது. மற்றும் அந்த கண் கொள்ளா காட்சி என் மனத்திற்கு அமைதியையும் தெய்வீக சக்தியையும் மகிழ்ச்சியும் அளிக்கும். ஆனால் இந்த வருடம் கொரானாவால் லட்டு தேர் நிகழ்வு நிருத்தப்பட்டுள்ளது.
இந் நாளில் ஆந்திர கர்நாடகா மேலும் தமிழ்நாடு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் மணிக் கணக்கில் காத்து நின்று தங்க அன்னபூரணி யை தரிசனம் செய்வார்கள்!
பிராசதமாக பொரி ஒரு ரூபாய் நாணயம் அளிப்பார்கள். கொரணா காரணமாக இதையெல்லாம் இந்த வருடம் காணமுடியவில்லை!
காலபைரவர் காசி விசாலாட்சி மாலையில் கங்கா ஆரத்தி தரிசனம் மற்றும் ஒரு சிறப்பு.
வாரணாசி தீபாவளி நேரத்தில் நகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு பகல் போல் தோன்றி காட்சி பெரும்! பட்டாசு வாண வேடிக்கைகள் நகரை அதிரவைத்து திருநாளை வியப்பில் பிரமிக்க வைக்கும்.கொராணா காலத்திலும் வாரணாசி நகரம் தீபாவளி பொலிவோடு தான் காணப்பட்டது!
தீபாவளி சமயம் பருவநிலை மிகவும் இதமாக இருக்கும்.
காசியில் எப்பொழுதும் நான் தங்கும் இடம் ஹனுமான் காட்டில்(GHAT) உள்ள காஞ்சிபுரம்
சங்கர மடம். மடத்தில் தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும். எல்லோருக்கும் ஸணான எண்ணை சீயக்காய் துள் தீபாவளி மருந்து பட்சணங்கள் அனைத்தும் கொடுப்பார்கள். இரண்டு நாள் தீபாவளிக்கு முன்னும் பின்னும் வடை பாயசம் நிறைந்த உணவு இலவசமாக பரிமாறப்படும்.
தீபாவளி அன்று மடத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறும். லட்டு தேர் மடத்திலும் வைக்கப்படும்.
இன்றைய அமாவாசை நாளில் கங்கை நதிக்கரையில் சாஸ்திரிகள்
தர்பணம் செய்து வைத்தார்கள்.
சங்கர மடத்தில் தங்கியிருந்து தீபாவளி கொண்டாடும் அனைவரும் உற்றார் உறவினர் போல் பழகுவார்கள். ஒருவர்கு ஒருவர் தீபாவளி நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு இனிப்புகளை வழங்குவார்கள். அது ஒரு குடும்ப உணர்வையும் சூழ்நிலையை உண்டாக்கும்.
அதனால் தான் என்னவோ நான் அந்த உணர்வகளூக்கு அடிமை படுத்திக் கொண்டு 15 வருடம் தொடர்ச்சியாக இந்த கொரானா காலத்திலும் முதிர்ந்த வயதிலும் மற்றும் பல பிரயாண இன்னல்களையும் கடந்து இந்த காசி மகா புண்ணிய பூமியில் என் மனைவி காமாட்சியின் மறைவுக்குப் பின் ஒவ்வொரு தீபத் திருநாளையும் தனியாக கொண்டாடி வருகிறேன். இந்த வருடம் கொரானாவினல் சங்கர மடத்தில் மிகவும் குறைவான வருகையை தான் காணப்பட்டது.
இன்றைய இனிய தீபாவளி பண்டிகையை உங்கள் குடும்பத்துடன் மிக்க மகிழ்ச்சியோடும் உற்சாகத்துடனும் கொண்டாட என் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ஹனுமான் காட்
வாரணாசியிலிருந்து.......
அருணாச்சலம்.
Leave a comment
Upload