தொடர்கள்
அரசியல்
கமலா ஹாரிஸ் ஒரு பெண் ஒபாமா...?! - ஸ்வேதா அப்புதாஸ்

அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு புரட்சி மற்றும் புதிய மாற்றம்... அது, முதல் முறையாக ஒரு பெண் துணை ஜனாதிபதி பதவி ஏற்பது.. அவர் தான் கமலா ஹாரிஸ்.

20201012195401441.jpg
கமலா என்ற பெயரை கேட்டவுடன் நம்ம கமலா அம்மா, கமலா அத்தை, கமலா பெரியம்மா, எதிர்வீட்டு கமலா, கமலா அக்கா, கமலா அண்ணி என்று தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

20201012205740725.jpg

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் என்று கேட்டவுடன் தமிழகத்தில் உள்ள நமக்கு.. நம்ம கமலா ஹாரிஸ் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

20201012195614437.jpg
மன்னார்குடி அருகேயுள்ள பைங்கநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த கோபாலன் - ராஜம் தம்பதியினரின் பேத்தி. கமலா ஹாரிஸின் தாய் வழி தாத்தா இந்த ஊரில் பிறந்தவர், வளர்ந்தவர். இதனால் அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதி, இந்திய வம்சாவளி என்று சொல்லிக்கொள்ள நமக்கு பெருமையாக தான் இருக்கிறது. துளசேந்திரபுரம் கிராமமே தங்களின் கமலா,

2020101220592135.jpg

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்றவுடன் அந்த கிராமத்து குலதெய்வ கோவிலான அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை செய்து... அவரின் வீட்டு வாசலில் கோலமிட்டு, ஸ்வீட் கொடுத்து அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களையும் கூறி கொண்டாடினார்கள்..

20201012195723233.jpg

அந்த கிராமத்து மக்கள்... கமலா ஹாரிஸ் ஒரு நாளைக்கு தன் பூர்விக கிராமத்திற்கு வர வேண்டும் என்று மெயில் அனுப்பியும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்எ ன்பது சுவையான செய்தி..
இந்த கிராமத்திற்கும் கமலா ஹாரிஸின் தொடர்பு குறித்தும் ஒரு சிறிய ஃபிளாஷ் பேக்....

20201012195909112.jpg
பைங்கநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை தேர்ந்த வெங்கட்ராமன் கோபாலன் ஐயர், பிரிட்டிஷ் காலத்தில் ஒரு ஐ.சி.எஸ் அதிகாரி!.. நேரு ஆட்சி காலத்தில், டெல்லியில் 1960 ஆம் வருடம் உயர் அதிகாரியாக பணியாற்றியவர்.. தன் பணி ஓய்வுக்கு பின் சென்னை பெசன்ட் நகரில் வாழ்ந்து இறந்தவர்.. இந்த கோபாலன் அவர்களின் மகள் ஷியாமளா, தன் 19 வயதில்.. 1958 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்க சென்றுள்ளார்.. அங்கு மருத்துவ பல்கலைக் கழகத்தில், பயாலஜிஸ்ட் படிப்பை படித்து, மார்பக புற்று நோய் ஆராய்ச்சி செய்துள்ளார்.

20201012200452870.jpg

...அப்பொழுது தன் கல்லூரி தோழரான ஜமைக்கா நாட்டை சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை காதல் திருமணமும் செய்து கொண்டார்..

20201012202327405.jpg

அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் தான் கமலா ஹாரிஸ் மற்றும் மாயா ஹாரிஸ்... ஒரு கட்டத்தில் அவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்தும் செய்து விட்டு தன் இரண்டு மகள்களுடன் சிங்கிளாக வாழ்ந்து வந்தார் கமலாவின் தாய்.

20201012210517104.jpg

இரண்டு பெண் குழந்தைகளையும் அமெரிக்க ஸ்டைலில் கறுப்பின புரட்சிப் பெண்களாக வளர்த்தார்...

20201012210632452.jpg

ஷியாமளா தன் 70வது வயதில், புற்று நோயால் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் இறந்துபோனார்.

மாயா தன் கல்லூரி காலத்து நண்பரான டோனி என்கிற கறுப்பினத்தவரை திருமணம் செய்து கொண்டு சட்டம் பயின்று, தற்போது ஒரு பிரபல சட்ட நிபுணர். டோனி - மாயாவின் செல்ல பிள்ளை மீனா ஷியாமளா. தற்போது அவர் சட்டம் பயின்று வழக்கறிஞராகவும்... எழுத்தாளராகவும் இருக்கிறார். மீனா நைஜிரியா நாட்டை சேர்ந்த நிகோலஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

நம்ம கமலா ஹாரிஸ் 2014 ஆம் ஆண்டு தன் 49 ஆம் வயதில் அதே வயதான டக்ளஸ் எம்ஹஆஃ என்ற யூத சட்ட வல்லுனரை திருமணம் செய்து கொண்டார்.

20201012202527583.jpg

டக்ளஸ் எம்ஹஆஃ ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து செய்தவர்.. அவருக்கு இரண்டு குழந்தைகள். மகன் கோல் 26 வயது... மகள் எல்லா 21 வயது.

20201012210803782.jpg

இருவரையும் தன் சொந்தக் குழந்தைகளாக வளர்த்து ஆளாக்கியுள்ளார் இந்த புதிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ். தன் புதிய வளர்ப்பு அம்மாவை இரண்டு பிள்ளைகளும் ‘மோமலா’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

20201012202711582.jpg

அப்பா.. தன் சட்ட வேலையில் பிஸி. வளர்ப்பு அம்மா சட்டத்திலும் அரசியியலிலும் படு பிஸி... எது எப்படியோ ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலய வழிபாட்டுக்கு மட்டும் ரெடுலராக குடும்பத்துடன் ஆஜர். பின் குடும்பமாக முழுநேரமும் வீட்டில் தான் என்கிறார்கள் கோலும், எல்லாவும்...! இனியும் இந்த வழக்கம் தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் இருவரும்... குடும்ப உறவு கட்டாயம் தேவையாம்...!

20201012202849659.jpg

டக்ளஸ் எம்ஹஆஃ வின்... இவருக்கு தற்போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலாவின் கணவர் எனும் கௌரவம் சேர்ந்துள்ளது. அவர் செகண்ட் ஜென்டில்மேன் என்று அழைக்கப்படுகிறார். யூத வம்சாவளி ஒருவர், துணை ஜனாதிபதியின் கணவர் என்பதும் அமெரிக்காவில் முதல் முறையே!.

20201012203008723.jpg

2024 ஆம் வருட தேர்தலில் கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாகும் பட்சத்தில் முதல் ஜென்டில்மேன் என்ற அந்தஸ்தும் அவரது கணவ்ருக்கு வரலாம் என்று இப்பொழுதே ஆருடம் கூறுகிறார்கள், அவரின் சட்ட நண்பர்கள்!

20201012210046613.jpg

இப்பொழுதும் ஞாயிற்றுகிழமை ஆலய வழிபாட்டில் கமலா ஹாரிஸ் இறைவனின் வார்த்தைகளை பைபிளில் இருந்து பிரசங்கிக்கிறார்...
“நான் உலகின் மிக பெரிய நாடான அமெரிக்காவின் துணை ஜனாதிபாதியாக வெற்றி பெற்றது இறைவனின் அருளால் தான்... இது ஒரு பெரிய பதவியாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் சர்வீஸில் என் பிரசங்கம் கட்டாயமாக தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... என்னை இவ்வளவு பெரிய பணிக்கு உயர்த்திய இறைவனை என்றும் மாபெரும் சபையில் புகழ தவற மாட்டேன்” என்று கூறுகிறார் ஹாரிஸ்.

20201012211208206.jpg

அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள ஜான் பிடென் 2024 ஆம் வருடம் மீண்டும் போட்டியிடமாட்டார். அந்த இடத்திற்கு கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்பதும் இப்பொழுதே பேசப்படுகிறது.

56 வயதான கமலா ஹாரிஸ் ஒரு புதிய வரலாற்றை நவம்பர் 7 ஆம் தேதி படைத்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில், ஜான் பிடெனின் துணை ஜனாதிபதி அதிலும் முதல் பெண், முதல் ஆப்ரிக்கா அமெரிக்கா மற்றும் முதல் ஆசிய அமெரிக்கா பெண், முதல் முறையாக அமெரிக்காவின் உயர்ந்த அலுவலகத்தின் பணியில் தன் பாதத்தை பதிய வைக்கப் போகிறார் என்பதை உலகமே ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா மாகாணத்தின் யு எஸ் செனட்டர் பதவியை வகித்தவர். சான் பிரான்சிஸ்கோவில் முதல் பெண் மாவட்ட அட்டர்னியாக பணிபுரிந்தவர்.. பின்னர் கலிபோர்னியாவின் முதல் கறுப்பின பெண் அட்டர்னி ஜெனெரல் என்பதும் இவரது சிறப்பு. இவரின் குற்றவியல் நீதிப் பதவி பிடென் வருங்கால அரசுக்கு பல பிரச்சனைகளில் முக்கியமாக போலீஸ் சம்மந்தப்பட்ட வழக்குகளில் இவரின் அறிவுரை கட்டாயமாக உதவும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

துணை ஜனதிபதி போட்டிக்கு கமலா ஹாரிஸ், தகுதியானவரா என்ற ஜான் பிடெனிடம் கேட்ட போது...

20201012204014447.jpg

ஹாரிஸ் பற்றி ஐந்து கருத்துக்களை கூறினார்... “ஒன்று.. ஹாரிஸ் நல்ல மதிப்பும் தகுதியும் உள்ள ஒரு பெண்மணி, இரண்டாவது.. ஒரு பிசாசைப் போல ஸ்மார்ட்டானவர்..! மூன்றாவது.. துப்பாக்கி சூழலைக் கொல்ல வலிமையான முதுகெலும்பை கொண்டவர்.. நான்காவது நல்ல கொள்கை மனம் கொண்டவர்... ஐந்தாவது இந்த பெரிய தேசத்தின் நீதித் துறையை மிக கவனமாக கையாள்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறி அசத்தினார்.

20201012204114942.jpg
கமலா ஹாரிஸ் தன் வெற்றிப் பூரிப்பில் முதல் உரையை வெள்ளை சூட் அணிந்து நிகழ்த்தினார்... இந்த வெள்ளை சூட் இருட்டில் வாழும் பெண்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதால் என காரணம் கற்பித்தார்.

“அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ளேன், நானே கடைசியானவள் அல்ல... இங்கு உள்ள இளம் பெண்கள் இப்படிப்பட்ட உயர்ந்த பதவியை அடைய தங்களை தயார் செய்து கொள்ளவேண்டும். இந்த தேசத்தில் என்னைப் போன்ற சாதாரண
பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம், அதை தவற விடக்கூடாது” என்று பேசி அசத்தினார்.

20201012204224593.jpg
கமலா ஹாரிஸின் சித்தி டாக்டர். சரளா, சென்னையில் வசிக்கிறார்..அவர் சொன்னது:

“என் அக்கா ஷியாமளாவின் மகள் கமலா ஹாரிஸ், அமெரிக்க மாகாணத்தின் சட்டத் துறையில் ஒரு அட்டர்னி ஜெனெரல் பதவியில் இருந்ததே எங்களுக்கு பெருமை. தற்போது கமலா, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்பதை கேட்டவுடன், மெய்சிலிர்த்து போயுள்ளேன். கடந்த 2009 ஆம் ஆண்டு ஷியாமளா இறந்தவுடன் அவளின் அஸ்தியை வங்கக் கடலில் கரைக்க தங்கை மாயாவுடன் கமலா சென்னை வந்து, எங்களோடு தங்கினார்கள்... அவளுக்கு வத்தக்குழம்பு, லெமன் ரசம் அதிகம் பிடிக்கும்... மீண்டும் வந்து உங்களோடு தங்குகிறேன் என்று கூறிச் சென்றார்கள்... இப்பொழுது கமலா அமெரிக்க துணை ஜனாதிபதி எனும் பொழுது, ஷி இஸ் கிரேட். கடவுளின் ஆசீர்வாதம் அது. எதிர் வரும் ஜனவரி மாதம் கமலா துணை ஜனாதிபதி பதவியை ஏற்கும் நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ள இருக்கிறோம்” என்று பெருமையாகக் கூறுகிறார்.

அமெரிக்கா ஜனாதிபதி ரேஸில் போட்டியிடும் நான்காவது பெண் கமலா
ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது... ஜனநாயக கட்சியில் துணை ஜனாதிபாதிக்கான போட்டியில் 1984 ஆம் வருட தேர்தலில் ஜெரால்டைன் பெறாரோ.. 2008 ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த சாரா பாலின்.. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டார். ஆனால் அந்த மூன்று பெண்களும் தோல்வியை தழுவினார்கள்... நான்காவது பெண் வேட்பாளரான கமலா ஹாரிஸ் முதல் முறையாக துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

20201012205133837.jpg
அமெரிக்கர்கள் கமலா ஹாரிஸை ஒரு பெண் ஒபாமா என்று
அழைக்கிறார்கள்... அதை கமலா ஏற்க மறுக்கிறார்... “நான் நானாக தான் இருக்க விரும்புகிறேன்” என்று கூறும் கமலா, தன் உயர்ந்த பணியை ஒடுக்கப்படும் பெண்களுக்கு உதவிகரமாக அர்பணிப்பேன் என்கிறார்.

20201012205251937.jpg
கமலா ஹாரிஸ் இந்திய வருகையை அவரின் பூர்விக கிராமமான பைங்கநாடு துளசேந்திரபுரம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்... இந்த வருட தீபாவளி கொண்டாட்டமே அவருக்காக தான் என்று கூறுகின்றனர்.

20201012205400792.jpg

அடுத்த வருட இந்திய குடியரசு விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இடம் பெறலாம் என இபோதே சில அரசியல் ஆருடங்கள் கணிக்கின்றன.