தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250303195406541.jpeg

கள்ள நோட்டு அச்சடித்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிக்கு வலை.

அடங்கமறு அத்துமீறு என்பது இதுதானோ !!

மௌனம் அனைத்தும் நன்மைக்கே செங்கோட்டையன் பேட்டி.

மௌனம் ரொம்ப ஆபத்தானது என்று சில பெரியவங்க சொல்லி இருக்காங்களே !!

மதுரையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை.

இப்பல்லாம் போலீஸ் துப்பாக்கிக்கு ரொம்ப வேலை தராங்க போல தெரியுது !!

மராத்தியில் பேச மறுத்தால் கன்னத்தில் பளார் என அறைவோம் ராஜ்த்தாக்கரே எச்சரிக்கை.

இந்திக்கு வந்த சோதனை !!

மோடியை மாற்றுவது என்ற பேச்சுக்கு இடமில்லை மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு.

அடுத்த பிரதமர் நீங்கதான் சொல்றாங்க !!

மோனோலிசாவுக்கு சினிமா வாய்ப்பு தந்த டைரக்டர் கைது.

அப்ப மறுபடியும் ருத்ராட்சம் விற்க தான் போகணுமா !!

தமிழை கட்டாய பாடம் ஆக்குவதில் திமுக அரசு அலட்சியம் மருத்துவ ராமதாஸ்.

டாக்டரே இப்ப அவங்க ஹிந்தியை எதிர்ப்பதில் ரொம்ப பிஸி அப்புறம் பார்க்கலாம் !!

அண்ணா திமுக வா, அமித்ஷா திமுக வா மாணிக்தாகூர் எம்பி கேள்வி.

அவங்க உங்களை திருப்பி ஏதாவது கேக்க போறாங்க ஜாக்கிரதை ?

கூட்டல் தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது அமித்ஷா.

அண்ணனுக்கு எப்போதும் பீதியை கிளப்புவது தான் வேலை !!

பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு பாலம் போட்ட வேலுமணி.

அண்ணா இப்ப அந்த பாலத்தில் செங்கோட்டையன் நடக்கிறாரே !!

விமான கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்.

அதுக்கு பதில் தான் உங்கள் சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள் அப்புறம் என்ன ?