தொடர்கள்
வலையங்கம்
அதிரடி முடிவு ! வரவேற்கலாம்.

20250220200724260.jpeg

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. இதனால் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது தடுக்கப்படும். இதனால் கள்ள ஓட்டு போட வாய்ப்பில்லை. வாக்காளர் அடையாள அட்டை குடிமகனுக்கு ஓட்டுரிமையை வழங்குகிறது. ஆதார் அட்டை ஒரு நபரின் அடையாளத்தை உறுதி செய்கிறது.

வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் இணைப்பு நடைமுறையில் இருந்தாலும் அது கட்டாயம் என்று இல்லை. இப்போது அது கட்டாயம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை அது கடமையை சரிவர செய்கிறது. முதலில் அரசியல் தலைவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது குறை சொன்னார்கள். அவர்கள் ஏற்பட்ட சந்தேகத்தை தவிர்ப்பதற்காக ஓட்டுப் போட்டவர் அவருக்கு விருப்பப்பட்டவருக்கு தான் ஓட்டை பதிவு செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ள ஓட்டு இயந்திரத்துடன் இணைந்த ஒப்புகை சீட்டு பெறும் முறை நடைமுறைக்கு வந்தது. தேர்தலில் தோற்றுப் போனவர்கள் இப்போதும் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் தேர்தல் ஆணையம் தன் பணியை சரிவர செய்கிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு என்பதை நாம் வரவேற்போம்.