சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படுபவர் முதல்வர் ஸ்டாலின் கருத்து.
முரசொலியில் முதல்வரை வரவேற்று விளம்பரம் எல்லாம் தருகிறாரே !!
கோயில் வளாகத்தில் தூங்கிய இரண்டு ரவுடிகள் வெட்டிக்கொலை.
பாவம் அப்போ உம்மாச்சியும் தூங்கிருப்பார் !!
தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும் பிரேமலதா தகவல்.
ராஜ்யசபா சீட்டு இல்லைன்னு தெரிஞ்சு போச்சு !!
பொய்யிலேயே பிறந்து வளர்ந்த கட்சித் தலைவர் அண்ணாமலை அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.
ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறார் போல தெரியுது !!
விமர்சனங்களை நான் வரவேற்கிறேன் பிரதமர் மோடி.
அவருக்கும் டைம்பாஸ் ஆகும் இல்ல !!
தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு ஏழு நாட்கள் அவகாசம் அதிகாரிகள் நேரில் ஆய்வு.
வாழ்க தமிழ் !!
பிரபல ரவுடி படப்பை குணா ஐந்தாவது முறை குண்டர் சட்டத்தில் கைது.
சாதிக்கணும்னு நினைக்கிறார் போல தெரியுது !!
டாஸ்மாக் முறைகேட்டை தீவிரமாக ஆராய்ந்தால் சிறு மீன்கள் முதல் திமிங்கலம் வரை சிக்கும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தகவல்.
தீவிர அரசியலுக்கு வந்துட்டாராம் !!
மோடிக்கு நெருக்கமானவர் கைகளில் செல்வம் குவிகிறது ராகுல் "அட்டாக் "
தலைவர் கிட்ட சரக்கு இல்ல பழசையே பேசி பேசி போர் அடிக்கிறார் !!
ஓட்டுகள் போனாலும் அடையாள அரசியலில் ஈடுபட மாட்டேன் ஜாதி பற்றி பேசுவதற்கு அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை.
கொஞ்சம் செல்வாக்குல ஜெயிக்கிறதால அமைச்சர் இப்படி பேசுகிறார் போல தெரியுது !!
தமிழகத்தின் மணிஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரியும் டாஸ்மாக் ஊழல் குறித்து எச்.ராஜா புது குண்டு.
அண்ணனுக்கு தகவல் வந்துவிட்டது போல தெரியுது !!
Leave a comment
Upload