தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250121181207632.jpg

Heading : அறநிலையத்துறையின் அக்கப்போர்கள் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : விகடகவியின் ராமலிங்க அடிகளார் உள்பட ஆன்மீக அவலங்கள் தொடர்பான கட்டுரைகளை படித்ததும் நெஞ்சம் கனத்தது, இன்றுவரை பல்வேறு கோயில்களில் அறப்பணி, கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்குவதாக விளம்பரப்படுத்தி பம்மாத்து காட்டும் இந்து அறநிலையத் துறையின் அடாவடி போக்குக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில்தான் நிரந்தர முடிவு கட்ட வேண்டும் என்று எல்லோருமே தீர்மானமாக உள்ளனர். எல்லாம் காலத்தின் கட்டாயம். அரசியலில் எங்கோ, யாரோ கூறியது நினைவுக்கு வருகிறது.

குருசாமி, செபாஸ்டியன், லூர்துசாமி , நாகர்கோவில்

Heading : ஆயுள் தரும் ஆயுர்வேதம் 2 –டாக்டர் கார்த்திக் ராமநாதன்

Comment : நூற்றாண்டு பாரம்பரிய ஆயுர்வேத டாக்டர் கார்த்திக் ராமநாதனின் வீடியோ ஆலோசனைகளை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கேட்டு வருகிறோம். மிக பயனுள்ளதாக இருந்து வருகிறது. இத்துடன் பல்வேறு நோய் பாதிப்பு மற்றும் அதற்கான மருத்துவ தீர்வுகளுக்கான வாசகர்களின் கேள்விகளுக்கு டாக்டர் கார்த்திக் ராமநாதன் பதிலளிக்கும்படி செய்யலாமே?!

பங்கஜவல்லி, கோமதி, மீனாட்சி, காஞ்சிபுரம்

Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (7) -என் குமார்

Comment : என்.குமாரின் 'சொல்லத் தோணுது' எனும் காதலுடன் கூடிய ஆடியோ கவிதை வரிகளை தொடர்ந்து 7 வாரமாக கேட்டுட்டு, எங்க வீட்டு எஜமானிங்ககிட்ட ரொமான்டிக்கா பேச ஆரம்பிக்கும்போது, 'ஏதோ சொல்லணும்னு தோணுது' என்ற வார்த்தை மட்டும் சத்தமா வருது... மத்ததெல்லாம் சைலண்ட் ஆயிடுது! என்ன செய்ய?

அசோகன், அகமது சுல்தான், ராகவேந்திரன், பெங்களூர்

Heading : பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை செம்போத்து ப ஒப்பிலி

Comment : ப.ஒப்பிலியின் 'பறவைகள் பலவிதம்' எனும் பல வண்ண பறவைகள் மற்றும் அதன் சிறப்பியல்புகளை படிக்க ஆரம்பித்ததும், நாமும் ஏன் விதவிதமான பறவைகளாக மாறி, வானில் சுதந்திரமாக பறந்து திரியக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது. வெல்டன் ஒப்பிலி சார்!

தேன்மொழி வளர்மதி கவுசல்யா , செம்பொன்னார்கோவில்

Heading : தேவை நிரந்தர தடை

Comment : இவையெல்லாம் நடக்குமா என்பதே கேள்விக்குறி. இன்றுகூட டெல்லி அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற ஒருசில அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை தொடர்கதையாக நீளாமல் இருக்க, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜனாதிபதி அல்லது ராணுவ ஆட்சிதான் வரவேண்டும்.

சசிதரன், தேவேந்திரன், பாரதிராஜா, திண்டுக்கல்

Heading : தேவை நிரந்தர தடை

Comment : கேஸ் நிலுவையில் உள்ள வரை போட்டியிட முடியாது என சட்டம் கொண்டு வந்தால், எல்லா வழக்குகளும் சீக்கிரமே முடிவுக்கு வரும்.....

Sriram Srinivasan, Chennai

Heading : அர்ச்சகர்களின் அவல நிலை. - ஜாசன்

Comment : இந்த மாதிரி அரசியல் நடக்கும் வரை விடிவுகாலம் கிடையாது.... வருத்தமான விஷயம் என்னவென்றால் பெரிய கோவில்களில் தட்டு கலெக்ஷனை தட்டி பறிக்க ரவுடி கும்பல் கோவில் வெளியே காத்துக் கொண்டு இருக்கிறது என வீடியோக்கள் வந்து கொண்டு இருக்கிறது.... ஜிபே தான் ஒரு அளவுக்கு கை கொடுக்கிறது, இம்மாதிரி இக்கட்டான சூழ்நிலையில்...

Sriram Srinivasan, Chennai

Heading : மயிலை ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா ஆலய கும்பாபிஷேகம் நேரடி ரிப்போர்ட் - பால்கி

Comment : அருமையான கட்டுரை • படங்கள் புகைப்படங்கள் நேரில் பார்க்காதவர்களுக்கெல்லாம் பார்க்காமல் இருந்து விட்டோமே • 48 நாட்களுக்கு உள்ளாக கண்டிப்பாக சென்று அருளாசி பெற வேண்டும் என்ற ஆவலுடன் பக்தி பரவசத்தை தூண்டுகிறது ஜெய ஜெய சங்கர ஹரிஹர சங்கர

Ujjivanam, Chennai

Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (7) -என் குமார்

Comment : அருமையான தகவல் • ஒவ்வொரு பெண்ணும் திருமணம் ஆன பிறகு தன் பழைய வாழ்க்கையை பற்றி நினைத்து க் கூடாது பார்ப்பதில்லை தன் கணவன் தன் குடும்பம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறாள்• அவளுடைய சர்டிபிகேட்டுகளின் அருமை அதற்காக பாடுபட்ட அவளின் பெற்றோருக்கு த்தான் தெரியும்

Ujjivanam, Chennai

Heading : பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை செம்போத்து ப ஒப்பிலி

Comment : இது போன்ற பறவைகள் பற்றிய தகவல்களை குழந்தைகள் விரும்பி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்

Ujjivanam, Chennai

Heading : நியாயத் தர்மம் - சிறுகதை - பா அய்யாசாமி

Comment : மிக நன்று

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Status : Approved