சிலேட்டின் க்ரே நிறத்தில் இருக்கும் இந்தபறவையினம், கௌதாரி வகையை சார்ந்தது.நீண்ட கால்களை கொண்ட இந்த பறவைசதுப்பு நிலபகுதிகளில் அதிகம் காணப்படும்ஒரு பறவையாகும்.
வெள்ளையான கழுத்தும் முகமுமே இதன்முக்கிய அடையாளம். ஜோடியாகவேசெல்லக்கூடிய ஒரு பறவை இது என்கின்றனர்பறவையின ஆராய்ச்சியாளர்கள்.
சதுப்பு நிலங்களுக்கு அருகில் உள்ள புதர்கள்மண்டிய பகுதியில் வாழும் ஒரு பறவை இது.மழை காலங்களில் நீரின் அளவு குறைந்ததாழ்வான பகுதிகளில் மேயும் பழக்கம்கொண்டது இந்த பறவை. பொதுவாகவேசத்தம் அதிகமின்றி அமைதியாகவும், கூச்சசுபாவத்துடன் இருக்கும் இந்த கானாங்கோழி,மழைக்காலங்களில் அதிக சத்தம் ஏற்படுத்தும்ஒரு பறவையாகும்.
புழு, பூச்சிகள், மெல்லுடலிகள் (molluscs), நெல் கதிர்கள், மற்றும் சதுப்புநிலத்தில் உள்ளதாவரங்களே இந்த பறவையின் பிரதானஉணவாகும். இந்த பறவையின் இனப்பெருக்ககாலம் ஜூன் முதல் அக்டோபர் வரை.
ஒரு ஆழமற்ற கோப்பை வடிவிலான கூட்டைசுள்ளிக்கட்டைகள், கொடிகளின் தண்டுகள்ஆகியவற்றை கொண்டு புதர் மண்டியபகுதிகளில் கட்டும் இந்த கானாங்கோழி.
கிரீம் அல்லது பிங்க் மற்றும் வெள்ளை கலந்தநிறத்தில் இருக்கும் முட்டைகளை இடும்இப்பறவை. ஒரு சமயத்தில் ஆறு அல்லது ஏழுமுட்டைகள் வரை ஈனும் பெட்டைகானாங்கோழி. இந்தியாவின் இமய மலைபகுதியின் அடிவாரத்திலிருந்து அனைத்துபகுதிகளிலும் காணப்படும்.
இது தவிர இலங்கை, பங்களாதேஷ்,பாக்கிஸ்தான், மால தீவுகள், மற்றும் மியான்மர்போன்ற நாடுகளில் காணப்படும் இந்த பறவை.
பட உதவி: கே வி ஆர் கே திருநாரணண்.
Leave a comment
Upload