தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 09 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250009162021605.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ அண்ணாதுரை ஐயங்கார்

சுமார் 60 அல்லது 70 வருடங்களுக்கு நம்மை பின்னோக்கி கொண்டு செல்கிறது இந்த வர அனுபவம். ஸ்ரீ அண்ணாதுரை ஐயங்கார் ஸ்ரீ மகா பெரியவாளின் தீவிர பக்தர். ஆரம்பம் முதல் கடைசி வரை அவருடைய வாழ்க்கை அனுபவத்தை அவருடைய பேத்தி விவரிக்கிறார்.

அவர் விவரிக்கும் போதே நமக்கும் அந்த காட்சிகள் ஓடுகிறது. பெரியவாளின் தரிசனம் நமக்கும் கிடைக்கிறது.