நல்ல உயரம், அதிக எடையுடன் உள்ள பறவைதான் இந்த செங்கால் நாரை. வலசை வரும் பறவைகளில் செந்நிறம் உடைய கால்களைகொண்டுள்ளதால் இதற்கு இந்த பெயர் வந்தது. அதே போல இந்த பறவைகளின் பின் பகுதியில் உள்ள சிறகுகளிலும் அதே நிறம் இருக்கும். பொதுவாக இந்த வகை பறவைகளை கரையோர பறவைகள் என்கிறார்கள் பறவை இன ஆராய்ச்சியாளர்கள்.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் காணப்படும். பொதுவாக இந்த பறவைகள் அதிகதூரம் பறப்பதில்லை. பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் வருடம் முழுவதும் இந்த பறவையை காணலாம், என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கழுத்தை குனிந்து கொண்டு சதுப்பு நில பகுதிகளில் இரைக்காக காத்திருக்கும் இந்த செங்கால் நாரைகள். சதுப்பு நிலங்களில் அலகால் தண்ணீரில்இருபுறமும் தலையை ஆட்டி இரை தேடும் பழக்கம் உடையவை இந்த பறவைகள். குச்சிகளால் ஆன ஒரு கூட்டினை கட்டி, அதை சுற்றிலும்இலைகளால் மூடிவிடும். ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை இந்த நாரையின் இனப்பெருக்க காலம் ஆகும். அதே போல கூடுகள் ஒன்றின் பக்கத்தில்மற்றொன்று என மிக நெருக்கமாக கட்டும் குணமுடையவை. பெலிகன் பறவைகள், நீர் காகங்கள், உன்னி கொக்குகள், மற்றும் நத்தை குத்தி நாரைகள்ஆகியவற்றோடு சேர்ந்த இருக்கும் இந்த செங்கால் நாரைகள்.
சங்ககாலத்தில் வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் தனது பாட்டு ஒன்றில் இந்த நாரை குறித்து அழகாக எழுதியுள்ளார். நேரமும் அவகாசமும் கிடைத்தால்அந்த பாடலை கூகுளில் தேடி பார்க்கலாம். உங்களுக்கு அந்த சிரமும் இருக்கக் கூடாது என்று... கூகுளியையே இங்கே தேடி கொண்டு வந்து விட்டோம்......
கவிஞர்கள் ஏழையாக இருந்து ஊர் ஊராக திரிந்து பாடிக்கொண்டு இருப்பார்கள். அப்படியான ஒரு கவிஞர்தான் இந்த சத்திமுத்தபுலவர்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே
Leave a comment
Upload