கோமளா வயது 80 ஆனாலும் திடகாத்திரமாக தான் இருந்தார். காலையில் அஞ்சு மணிக்கே எழுந்து வருடம் முழுவதும் பக்கத்தில் உள்ள சீராளன் குளத்தில் ஸ்நானம் செய்து வருபவர்.
“எப்படி பாட்டி இந்த குளிரிலும் நீ போய் குளிச்சுட்டு வரே? என்று பேரன் முகுந்த் ஒரு முறை கிறிஸ்துமஸ் லீவுக்கு வந்தவன் கேட்டபோது “அதெல்லாம் பழக்கம் தான் கண்ணு”.
“ஒங்க தாத்தாவுக்கு வாக்கப்பட்டு 65 வருஷம் ஆச்சு. அன்னிலுருந்து இப்ப வரைக்கும் அந்த குளம் தான். வெயில் அடிக்கும் போதும் சரி மழைகாலமாக இருந்தாலும் பழகி போச்சு.”
பாக்கியம் ராமசாமி கதையின் அப்புசாமி சீதாப்பாட்டி ரெப்ளிகா இந்த கோமளா ஆராமுது ஜோடி.
சமையல் வேலை முடிஞ்ச பிறகு சாப்பிட்டு முடிந்த பின் ரசிகலால் பாக்குடன் சுண்ணாம்பு கும்பகோணம் கொழுந்து வெற்றிலை பகலிலும் இரவிலும்.
ஏன் பாட்டி எங்க அம்மா ஒங்கள விட சின்ன வயசு ஆனாலும் மூட்டு வலின்னு புலம்பறா. உனக்கு மூட்டு வலி இல்லையா. இல்லடா கண்ணு அந்த காலத்தில் இருந்து நான் வெத்திலை போட்டுண்டு வரேன்.இதுல கால்சியம் இருக்கும். எலும்பு ஸ்ட்ராங். அதிகாலை எழுந்து பச்சை தண்ணீரில் குளிக்கிறேன். உடம்பு ஆரோக்கியமா இருக்கு..
கையில் ஒரு வார பத்திரிக்கை படிக்கணும். நாட்டு நடப்பு கிரிக்கெட் என எல்லா விஷயம் அத்துப்படி. .சூப்பர் இன்டெலி ஜென்ட். வுமன் ..
மூணு பசங்க இரண்டு பொண்ணுங்க அஞ்சு பேரும் வட மாநிலத்தில் செட்டில் .
பாட்டி அந்த காலத்து எஸ் எஸ்.எல் சி படிப்பு. ஆராமுது உள்ளூர் மில்லில் கணக்குப் பிள்ளை வேலை பார்த்தவர் ஓய்வுக்கு பிறகு . பசங்க பணத்தில் வாழ்க்கை ஓட்டம்.
கோமளா தினமும் அந்திம காலத்தில் தன்னை கடாக்ஷிக்கும் படி அப்போதைக்கு இப்போதே பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் சொல்லிவைத்தேன் என்று பெரியாழ்வார் திருமொழி நாலாம் பத்து பத்தாம் திருமொழி பாசுரத்தை தினமும் பாடிவிட்டு பின்பு தான் காஃபி டிஃபன்.
“துப்புடையாரை அடைவதெல்லாம் சோரவிடத்துத் துணை யாவரென்றே
ஒப்பலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்,
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் :
அப்போதைக்குஇப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்தர வரணைப் பள்ளியானே!
நன்றாக இருந்த கோமளா ஒரு ஏகாதேசி திதி அன்று இறந்து விடவே, எம தர்மன் அவளை அழைத்துச் செல்ல வந்தார்.
கோமளா “என்னை எங்கு அழைத்து போக போகிறீர்கள் ? சொர்க்கத்திற்கா? இல்லை நரகத்திற்கா?.”
“இரண்டில் எதுவுமே இல்லை ..இந்த ஜென்மத்தில் நீங்கள் மிகவும் நல்ல செயல்களைச் செய்திருக்கிறீர்கள், அதனால்தான் உங்களை நேராக பெருமாள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.”
கோமளா மிகவும் மகிழ்ச்சியடைந்து, எல்லோரும் மனித குலத்துக்கு நல்லது செய்தது போல நானும் அந்த நல்ல எண்ணத்தில் செய்தேன் .
ஆனாலும் நான் நேரிடையாக பெருமாள் திருவடி சேரும் பாக்கியம் எனக்கு எப்படி கிடைத்தது
“அதற்கு காரணம் நீ தினமும் சேவிக்கும் பாசுரம். பெருமாளிடம் அட்வான்ஸ் ஆக பெரியாழ்வார் திருமொழி ஜபித்து கொண்டே வந்துள்ளீர் அதனால் தான் இந்த ஸ்பெஷல் என்ட்ரி “.
நன்றி, எம தர்மராஜா ஆனால் நான் உன்னிடம் ஒரு வேண்டுகோள் ."வைக்கிறேன்.
“சொர்க்கம் மற்றும் நரகத்தைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த இரண்டு இடங்களையும் ஒருமுறை பார்க்க வேண்டும். பின் பெருமாள் திருவடிகளை சரணடைய விரும்புகிறேன்.”
“இது என் ஆர்வம்.சிறிய வயதில் இருந்தே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு உந்துதல்”.
“ ஓகே இது வரை நீ செய்த , செயல் நன்றாக இருந்த காரணத்தினால் உன் கோரிக்கையை, நிறைவேற்றுகிறேன்”.
சொர்க்கம் மற்றும் நரகத்தின் பாதை வழியாக இறைவனின் இருப்பிடத்திற்கு செல்வோம்.சரியா!
சந்தோஷமடைந்த கோமளா எமதர்மரஜாவுடன் நடக்க ஆரம்பித்தார்., முதலில் நரகத்தை அடைந்தனர்.
நரகத்தில், மக்கள் சத்தமாக அழுவதை கோமளா கேட்டார்.
அங்கே நரகத்தில், எல்லோரும் மெலிந்து, உடம்பு சரியில்லை இல்லாமல் இருக்கவே .
ஒரு மனிதனிடம் கேட்டாள், “நீங்கள் ஏன் இங்கு இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள்?”
அந்த மனிதர், நான் இறந்த பிறகு இங்கு வந்ததில் இருந்து, ஒரு நாள் கூட உணவு உண்ண வில்லை . ஆன்மாக்கள் பசிக்காக ஏங்குகின்றன.”
சுற்றும் முற்றும் பார்த்த கோமளா வின் கண்கள் ஒரு பெரிய பானை மீது தெரிந்தது .சுமார் 300 அடி உயரத்தில் ஒரு பானை தொங்கி கொண்டு இருந்தது . அதிலிருந்து அற்புதமான வாசனை மிதந்து வந்தது.
அந்த பானைக்கு மேலே ஒரு பெரிய குவளை தொங்கிக் கொண்டிருந்தது.
“இந்த பானையில் என்ன இருக்கிறது ?”என்று கோமளா அந்த மனிதனிடம் கேட்டாள்.
“இந்த பானையில் எப்போதும் மிகவும் சுவையான பாயாசம் இருக்கும் .”
“அப்படியானால், நீங்கள் ஏன் இந்த பாயசத்தை மனதுக்கு திருப்தியாகசாப்பிடக்கூடாது,?”
“நீங்கள் ஏன் பசியால் அவதிப்பட வேண்டும் ?”.
அந்த மனிதன் அழதுக் கொண்டே “எங்களுக்கு எப்படி சாப்பிடுவது என்று தெரியவில்லை”! . என்றான்.
“இந்த பானை 300 அடி உயரம், அந்த பானையை எங்களில் யாரும் அடைய முடியாது.”
கோமளா அவர்கள் மீது பரிதாபப்பட்டு பானை முழுவதும் பாயாசம் இருந்தும்
, அவர்கள் பசியால் அவதிப்படுகிறார்கள். என்பதை உணர்ந்த அடுத்த நொடி
கடவுள் அவர்களுக்கு இந்த தண்டனையை கொடுத்திருக்கலாம் என்று எண்ணினாள்.
“ போகலாம், தாமதமாகிறது” என துரித ப்படுதினான் எமதர்மராஜா
இருவரும் நடக்க ஆரம்பித்து சொர்க்கத்தை அடைந்தனர்.
அங்கே எல்லோரும் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
என்ன ஆச்சர்யம் சொர்க்கத்திலும், நரகத்தில் இருந்தது போல 300 அடி உயரப் பானை. , அதன் மேலேயும் அதே போன்ற குவளை தொங்கிக் கொண்டிருந்தது.
இதில் மிகவும் சுவையான பாயசம் இருப்பதாக சொர்க்கவாசிகள் கூறினர்.
“கோமளா எல்லோரிடமும் சொன்னாள் ஆனால் 300 அடி உயரத்தில் இருக்கும் இந்த பானையை நீங்கள் அடைய கூட முடியாது”
“உங்களுக்கு உணவு கிடைக்காது, பசியால் வாடுவீர்கள் என்று பார்த்தால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறீர்கள் “.
அங்கிருந்த ஒரு பெண்மணி சொல்ல ஆரம்பித்தாள் “இந்த பானையில் இருந்துதான் நாங்கள் அனைவரும் பாயசத்தை நிரம்ப சாப்பிடுகிறோம் என்று சொன்னார்.”
“எப்படி சாத்தி யமாச்சு ?”
“பானை உயரமாக இருந்தால் என்ன? இங்கு பல மரங்கள் உள்ளன, கடவுள் இந்த மரங்கள், செடிகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளை மனிதர்களாகிய எங்களுக்காக படைத்துள்ளார்.”
“இந்த மரங்களிலிருந்து விறகுகளை எடுத்து, வெட்டி, பின் மரத்துண்டுகளை இணைத்து ஒரு பெரிய படிக்கட்டு கட்டினோம்”.
“அந்த மர ஏணியின் உதவியால் பானையில் உள்ள பாயசத்தை அனைவரும் ஒன்றாக சாப்பிடுகிறோம்.”
கோமளா இப்போது யமராஜைவை பார்க்க ஆரம்பித்தாள்.
எமராஜ் சிரித்துக் கொண்டே சொன்னான்
“கடவுள் சொர்க்கத்தையும் நரகத்தையும் மனிதர்களிடம் ஒப்படைத்துள்ளார், அவர்கள் விரும்பினால் அவர்களுக்காக நரகத்தை உருவாக்க முடியும், அவர்கள் விரும்பினால் அவர்களே சொர்க்கத்தை உருவாக்க முடியும், கடவுள் அனைவரையும் சம நிலையில் வைத்துள்ளார்.”
“அவரைப் பொறுத்தவரை அவரது குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள், அவர் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை!”
“நரகத்திலும் மரங்களும் செடிகளும் இருந்தன, ஆனால் அந்த மக்கள் சோம்பேறிகள், கைகளில் பாயசம் வர வேண்டும் என்று நினைத்து நினைத்து கடைசி வரை .எந்த கடினமான வேலைகளை செய்ய விரும்பவில்லை, அதனால்தான் அவர்கள் பசியில் கஷ்டப்படுகிறார்கள்”.
“இது கடவுளால் படைக்கப்பட்ட இவ்வுலகின் விதியாக இருப்பதால், ஒன்றும் செய்யமுடியாது”.
“யார் மூளையை உபயோகித்து கடினமாக உழைக்கிறார்களோ, அவர்கள் பலன் அடைவார்கள்”.
“நீங்கள் இவர்களை விட ஒரு படி மேல். உங்கள் வயதான காலத்திலும் அன்ன தானம் செய்து உள்ளீர்கள். ஏழைக்கு உதவி செய்து உள்ளீர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பகவான் நாமாவை தினமும் உச்சரித்து விட்டு பின்பு தான் உணவு உட்கொள்கிரீர்கள்.”
“அதனால் பெருமாள் தனியா என்னைக் கூப்பிட்டு ,உனக்கு ஸ்பெஷல் டூட்டி ஒன்று உள்ளது. வழக்கம்போல்உன் எம தூதர்களை அனுப்பாதே.
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று திரு பல்லாண்டு பாடி என்னை தினமும் மகிழ்விக்கும் என் பக்தையை நேரிடையாக இங்கு அழைத்து வா “என்று கட்டளையிட்டார்.
திருப்பதி பெருமாள் சேவிக்க “ஸ்பெஷல் தர்ஷன் மாதிரி ஒங்களுக்கு ஶ்ரீமன் நாராயணா வை சரணடைய டைர்க்ட் எண்ட்ரி. அங்கேயும் போய் பகவான் நாமா சொல்ல நல்ல சந்தர்ப்பம் ஆல் த பெஸ்ட்.”
Leave a comment
Upload