விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "குளிருக்கு இதமான தக்காளி சூப் சாப்பிடுங்கள் "என்று ஆபீஸ் பையன் சூடாக கொண்டு வந்து தந்தார்.
தக்காளி சூப்பை உறிஞ்சி சாப்பிட்டுவிட்டு "ஆளுங்கட்சி கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி இரண்டும் திமுகவுக்கு சங்கடம் தர தொடங்கிவிட்டது "என்று சொல்ல, இந்த லிஸ்டில் விடுதலை சிறுத்தை கட்சி இல்லையே என்று கேட்க, அவர்கள் இப்போது திமுகவுடன் ராசி ஆகி விட்டார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சம்பவத்தை அரசியல் ஆக்க கூடாது என்று தொல்.திருமாவளவன் பேச ஆரம்பித்து விட்டார் "என்றவர், கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு தற்சமயம் திமுக அரசு அனுமதி தருவதில்லை.
விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமுலில் உள்ளதா என்று பேசினார். இதனைத் தொடர்ந்து முரசொலியில் இது 'தோழமைக்கு இலக்கணம் அல்ல' என்று முதல் பக்கத்தில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார்கள் திமுகவால் தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
பாலகிருஷ்ணன் பதவி அன்றோடு முடிந்து புதிய செயலாளர் சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் பாலகிருஷ்ணன் பேச்சு திமுகவை எரிச்சல் செய்தது அதற்கு பதிலடி தான் முரசொலி கட்டுரை என்று சொன்னார் விகடகவியார்.
"புது செயலாளர் சண்முகத்துக்கு வாழ்த்தும் பழைய செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு நன்றியும் சொல்லி இருக்கிறாரே முதல்வர்" என்று நாம் கேட்க அது ஒரு சம்பிரதாய சடங்கு. நாங்கள் திமுகவுக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறோம்.
எதிர்க்கட்சியிலும் திமுகவின் வெளிச்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்று பதில் சொல்லி இருக்கிறாரே சண்முகம் அதை கவனியுங்கள் என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.
திமுக ஏற்கனவே இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பியது எனவே காங்கிரஸ் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு திமுக போட்டியிட சம்மதம் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் தலைவரும் முதல்வர் கேட்டுக் கொண்டதால் என்று சொல்லியிருக்கிறார். சட்டப்பேரவையில் பேரவை தலைவர் அப்பாவு நடந்து கொள்ளும் விதம் சரி இல்லை என்ற தொனியில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாக்கூர் ' இது சரியா ? மாண்புமிகு ஓம் பிர்ல்லா வழியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செயல்படுவதாக குறிப்பிட்டு சட்டப்பேரவை நேரலையில் எதிர்க்கட்சிகளை காட்டுவதில்லை என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாக திமுக தலைவர் கவனித்து வருகிறார் "என்றார் விகடகவியார்.
" துரைமுருகன் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனை பற்றிய செய்திக்கு வாரும் "என்றோம்.
இது மிகவும் பழைய வழக்கு 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது துரைமுருகனுக்கும் மகனுக்கும் நெருக்கமானவர்களிடம் 11 கோடி கைப்பற்றப்பட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்ட வழக்கு இது. அவர்களால் அதற்கு முழுமையான கணக்கு காட்ட முடியவில்லை. இது சம்பந்தமாக அமலாக்கத்துறை பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவர் கண்டு கொள்ளவில்லை. அதனால் தான் இந்த சோதனை.
சோதனையின் போது கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார். அவரது ஆதரவாளர்கள் சாட்சியுடன் இந்த சோதனை நடந்தது. சோதனை என்றதும் துரைமுருகன் வேலூர் சொல்லலாமா என்று யோசனை கேட்டபோது முதல்வர் தான் வேண்டாம் என்று தடுத்துவிட்டார் தேவையில்லாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற உங்களிடம் கேள்வி கேட்டு சங்கடப்படுத்துவார்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று அதனால் தான் துரைமுருகன் வேலூர் செல்லவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது தனிப்பட்ட அறை சாவி இல்லை என்று சொன்னதும் கடப்பாரை மூலம் பூட்டை உடைத்து சோதனை செய்திருக்கிறார்கள் என்றார் விகடகவியார்.
"அதன் பிறகு துரைமுருகன் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை அழைத்துக் கொண்டு டெல்லி போனார் என்று செய்தி வந்ததே" என்று நாம் கேட்டோம்.
அதெல்லாம் இல்லை என்பதற்கு பதிலாக அதற்காக எல்லாம் டெல்லிக்கு போகவில்லை என்று மறுத்துவிட்டார் துரைமுருகன்.
சட்டரீதியாக இதை எப்படி எதிர்கொள்வது என்று டெல்லியில் சில மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
விரைவில் துரைமுருகன் கதிர் ஆனந்த் கைது செய்ய தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு என்ற செய்தி வரும் பாரும்"என்று சொல்லி சிரித்து விட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload