தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

தமன்னா

20250010182254264.jpeg

சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதையே விரும்புகிறார் நடிகை தமன்னா. பத்து நிமிஷ காட்சிக்கு ஒரு கோடி கிடைக்கிறது. நடன வாய்ப்புகளும் நிறைய வர துவங்கியிருக்கிறது.

உணவகங்கள்

20250010182817251.jpeg

ராஷ்மிகா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் ஷாருக்கான் மனைவி, சன்னி லியோன், இஷா குப்தா, மலைக்கா அரோரா ஆகியோர் புதிதாக உணவகங்களை தொடங்கி இருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்

2025001018294771.jpeg

கணவர் அவசர வேலையாக துபாய் சென்று விட்டதால் ஹனிமூனை தள்ளிப் போட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மிருணாள் தாக்கூர்

20250010183632114.jpeg

சி பி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி மிருனாள் தாக்கூர்.

தக்ஃலைப்

20250010184314886.jpg

தக்ஃலைப் படத்தின் பிரமோஷனுக்காக மணிரத்தினம், சிம்பு , கமலஹாசன் மூவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

சுட சுட

சூர்யா

லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அடலுரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

வரலட்சுமி அம்மா

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும் நடிகை வரலட்சுமியின் அம்மாவான சாயா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா

நான் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனவே சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறேன் என்கிறார் நடிகை சமந்தா.

பூஜா ஹெக்டே

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார்.

அல்லு அர்ஜுனா

திரையரங்கில் ஒரு பெண் இறந்து போனதை தொடர்ந்து அல்லு அர்ஜுனா மீது வழக்கு தொடரப்பட்டது, மீண்டும் கைது செய்யப்படுவார் என்ற பயம் அவருக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சினிமா பிரபலங்கள் போய் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து கைது நடவடிக்கை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அவரும் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு விட்டாராம் இப்போதைக்கு பிரச்சினையிலிருந்து தப்பி இருக்கிறார் அல்லு அர்ஜுனா.